TA/Prabhupada 0137 - வாழ்க்கையின் இலக்கு என்னLecture on BG 7.4 -- Nairobi, October 31, 1975

ஹரிகேஷ்: "மொழிபெயர்ப்பு - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அஹங்காரம் - இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்." பிரபுபாதர்: பூமிர் ஆபோ (அ)'நலோ வாயு: கம் மனோ புத்திர் ஏவ ச அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா (பகவத் கீதை 7.4). கிருஷ்ணர் தன்னையே விளக்குகிறார். கடவுள் யார் என்பதை கடவுளே விளக்குகிறார். அதுதான் உண்மையான அறிவு. நீங்கள் கடவுளைப்பற்றி ஊகம் செய்தால், அது சாத்தியமல்ல. கடவுள் எல்லையற்றவர். உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. பகவான் கிருஷ்ணர், ஆரம்பத்தில் கூறினார், அசம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஞாஸ்யஸி தச் ஷ்ருனு (பகவத் கீதை 7.1). ஸமக்ரம். ஸமக்ரம் என்றால் அனைத்தும்... அல்லது ஸமக்ரம் என்பதற்கு 'முழுமையாக', என்றும் பொருள் கூறலாம். ஆக படைப்பிலுள்ள அனைத்து கல்வியரிவின் சாரமும் ஒன்றே. ஆகமொத்தத்தில், எல்லாம் இறைவனை புரிந்துகொள்வதற்காகத் தான். ஆகையினால் அவர் தன்னையே விளக்க துவங்குகிறார். முதலாவதாக, நம்மிடம் இறைவனைப் பற்றிய எந்த அறிவும் இல்லை - ஆனால் நம்மால், இந்த பரந்த நிலம், பரந்த நீர், கடல், பரந்த ஆகாயம், பிறகு நெருப்பு இதையெல்லாம் நேரடியாக பார்க்க முடிகிறது. இப்படி பல விஷயங்கள், ஜட இயற்க்கை, மனம் உட்பட... மனமும் ஜட இயற்கையை சேர்ந்தது தான். அடுத்தது அஹங்காரம். அனைவரும், "நான் இன்னார். நான் இந்த ஜாதி..." என நினைக்கிறார்கள். கர்தாஹம் இதி மன்யதே. அஹங்கார-விமூடாத்மா. இந்த பொய்யான அஹங்காரம். இது பொய்யான அஹங்காரம். மேலும் தூய்மையான ஒரு அஹங்காரமும் இருக்கிறது. அந்த தூய்மையான அஹங்காரம் தான், அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ஆன்மா), மற்றும் தவறான அஹங்காரம் என்றால் : "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் ஆப்பிரிக்கன்," "நான் பிராம்மணன்," "நான் ஷத்ரியன்," "நான் இன்னார்." இது பொய்யான அஹங்காரம். ஆக தற்போது... தற்போது அல்ல, எப்பொழுதுமே நாம் ஜட இயற்க்கையின் இந்த கூறுகளால் சூழப்பட்டிருக்கின்றோம். அதுவே நம்முடைய தத்துவஞானத்தின் ஆரம்பம்: இந்த நிலம் எங்கிருந்து வந்தது? இந்த நீர் எங்கிருந்து வந்தது? இந்த நெருப்பு எங்கிருந்து வந்தது? இந்த சந்தேகங்கள் இயல்பானவை. இந்த வானம் எங்கிருந்து வந்தது? பல லட்சக்கணக்கான இந்த நட்சத்திரங்கள் எவ்வாறு நிலைப்பெற்றிருக்கின்றன ? ஆக இவை தான் ஒரு புத்திசாலி கேட்கும் கேள்விகள். அதுதான் தத்துவ ஞானத்துக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம். ஆக சிந்திக்கக்கூடிய மனிதர்கள், படிப்படியாக, முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை புரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆக கிருஷ்ணர் இருக்கிறார், மேலும் கிருஷ்ணர் தன்னையே விளக்குகிறார், "நான் இப்படி." ஆனால் துரதிஷ்டவசமாக நாம் கிருஷ்ணரை புரிந்துகொள்ள மாட்டோம், ஆனால் கடவுள் என்றால் என்னவென்பதை நாம் அனுமானிக்க முயற்சி செய்கிறோம். இதுதான் நம்முடைய வியாதி. கிருஷ்ணர் தன்னை விளக்குகிறார்; கடவுள் தன்னைப் பற்றிய அறிவை வழங்குகிறார். நாம் அதை மறுப்போமே தவிர, தலை, கால் இல்லாத கடவுளை எற்ப்போமே தவிர, இப்படி பல விதமாக எதிர்ப்போமே தவிர, நாம் அவர் கூறிய வாக்கை ஏற்றுக் கொள்ள மாட்டோம் . இதுதான் நம்முடைய நோய். ஆகவே முந்தைய பதத்தில் அது விளக்கப்பட்டிருக்கிறது, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத: (பகவத் கீதை 7.3). பல லட்சக்கணக்கான மனிதர்களில், "வாழ்க்கையின் இலக்கு என்ன? கடவுள் என்றால் என்ன? அவருடன் என்னுடைய உறவு என்ன...?" என்பதை புரிந்துகொள்ள உண்மையிலேயே தீவிரமாக விரும்புவர்கள்... அப்படி ஒருவருக்கும் ஆர்வம் இல்லை. ஸ ஏவ கோ-கர: (ஸ்ரீமத் பாகவதம் 10.84.13) அப்படித்தான். அனைவரும், பூனைகளும் நாய்களும் போல், உடலை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கையின் கருத்தில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுதான் நிலைமை. இப்போது மட்டுமல்ல, எப்பொழுதுமே, பௌதிக நிலைமை இது தான். ஆனால் அவற்றில் ஒருவன் மட்டும், மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ, பல லட்சங்களில் ஒருவன், தனது வாழ்க்கையில் பக்குவத்தை அடைவதற்காக, இந்த கேள்விகளுக்கான பதில்களை புரிந்துகொள்ள முயல்வான். மேலும் அப்பெர்பட்ட சித்தர்களிலும்... பக்குவம் என்றால் தன்னுடைய ஸ்வரூப நிலையை புரிந்துகொள்வது, அதாவது அவன் இந்த ஜட உடல் அல்ல; அவன் ஆன்மீக ஆத்மா, ப்ரம்மன். அதுதான் பக்குவ நிலை, அறிவின் பூரணத்துவம், ப்ரம்ம-ஞானம்.