TA/Prabhupada 0158 - தாயை- கொல்லும் நாகரிகம்



Lecture on SB 5.5.3 -- Stockholm, September 9, 1973

நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம (ஸ்ரீ.பா. 5.5.4). விகர்ம என்றால் தடை செய்யப்பட்ட, குற்றச் செயல்கள். அங்கே மூன்று வகையான செயல்கள் உள்ளன: கர்ம, விகர்ம, அகர்ம. கர்ம என்றால் விதிமுறையினை உடைய செய்பணி. அதுதான் கர்ம. எவ்வாறு என்றால் ஸ்வகர்மணா போல். பகவத் கீதையில் ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ச (பா. கீ. 18.46). எல்லோருக்கும் விதிமுறையினை உடைய செய்பணி உள்ளது. எங்கே அந்த விஞ்ஞான புரிந்துணர்வு? அங்கே இருக்க வேண்டும்.... நான் அன்றொரு நாள் பேசியது போல், மனித சமூகத்தின் அறிவுப்பூர்வமான பிரிவுகள். மிகவும் சிறந்த அறிவுடைய வகுப்பு, அவர்கள் பிராமணராக பயிற்சியளிக்கப்பட வேண்டும். குறைந்த, கொஞ்சம் குறைந்த அறிவுள்ளவர்கள், அவர்கள் நிர்வாகிகளாக பயிற்சியளிக்கப்பட வேண்டும். குறைந்த அறிவுடையவர்கள், அவர்கள் வணிகர்களாக, பண்ணையார்களாக மேலும் பசு பாதுகாப்பாளராக பயிற்சியளிக்கப்பட வேண்டும். இந்த பொருளியல் சார்ந்த வளர்ச்சிக்கு பசுவின் பாதுகாப்பு தேவைப்படுகிறது, ஆனால் இந்த போக்கிரிகளுக்கு இது தெரியவில்லை. இந்த பொருளியல் சார்ந்த வளர்ச்சி பசுக்களை கொல்லுவது. சும்மா பாருங்கள், அயோக்கியர்கள் நாகரிகம். வருத்தப்படாதீர்கள். இது சாஸ்திரத்தில் உள்ளது. நான் மேற்கத்திய நாகரிகத்தை குற்றம் சாட்டுகிறென் என்று நினைக்காதீர்கள். இதை சாஸ்திர கூறுகிறது. மிகவும் அனுபவமிக்கது. ஆகையால் அங்கு பல பொருளாதார மேம்பாட்டு வழக்கறிஞர்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை அதாவது, பசுவின் பாதுகாப்பும் பொருளாதார மேம்பாட்டின் ஒரு வகை என்று. இந்த அயோக்கியர்கள், அவர்களுக்கு தெரியவில்லை. பசுவை கொல்லுவது இன்னும் நல்லது என்று நினைக்கிறார்கள். இது நேர்மாறானது. ஆகையினால் குருதே விகர்ம. வெறுமனே நாவின் சிறு திருப்திகாக. இதே பயனை பாலில் இருந்து நீங்கள் பெறலாம். ஆனால், ஏனென்றால் அவர்கள் அயோக்கியர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் இருப்பதால், பசுவை உண்பதும் அதன் இரத்தத்தை குடிப்பதும் பாலைக் குடிப்பதைவிட சிறந்தது என்று நினைக்கிறார்காள். பால் வேறொன்றுமில்லை, இரத்தத்தின் தன்மை மாற்றம், எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும். எவ்வாறு என்றால் மனிதர்களைப் போல், தாய், குழந்தை பிறந்தவுடன், உடனடியாக... குழந்தை பிறப்பதற்கு முன், தாயின் மார்பில் ஒரு சோட்டு பால் கூட இருக்காது. பாருங்கள். இளமையான பெண்களின் மார்பில் பால் இருக்காது. ஆனால் குழந்தை பிறந்துவுடன், உடனடியாக அங்கே பால் சுரக்கிறது. உடனடியாக, தன்னிச்சையாகாவே. இது பகவானின் ஏற்பாடு. ஏனென்றால் குழந்தைக்கு பால் தேவைப்படுகிறது. அங்கே பகவானின் ஏற்பாடு எவ்வாறு உள்ளது என்று சும்மா பாருங்கள். இருப்பினும், நாம் பொருளாதார மேம்பாட்டிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குழந்தை பிறந்துவுடன் பகவானின் பொருளாதார திட்டம் மிகவும் சிறப்பாகவும், இயற்கையின் பொருளாதார திட்டம், அதாவது உடனடியாக தாய் பாலுடன் தயாராக இருக்கும் போது..... இதுதான் பொருளாதார வளர்ச்சி. ஆகையால் அதே பால்தான் பசுவாலும் அளிக்கப்படுகிறது. உண்மையிலேயே அது தாய், மேலும் இந்த அயோக்கிய நாகரிகம் தாயை கொல்லுகிறார்கள். தாயை- கொல்லும் நாகரிகம். சும்மா பாருங்கள். நீங்கள் உயிருடன் வந்ததிலிருந்து தாயின் மார்பிலிருந்து பால் குடிக்கிறீர்கள், மேலும் அவள் முதுமை அடைந்த பின்பு நீங்கள் இப்படி நினைத்தால், "தாய் பயனற்ற சுமை. அதன் தொண்டையை வெட்டுவோம்," அதுதான் நாகரிகமா?