TA/Prabhupada 0159 - கடினமாக வேலை செய்வது எப்படி என்று மக்களுக்கு கற்பிக்க பெரிய திட்டங்களை செயல்படுத்து



Lecture on SB 5.5.15 -- Vrndavana, November 3, 1976

கல்கத்தா, பம்பாய், லண்டன், நியூயார்க் போன்ற பெரிய, பெரிய நகரங்களில், எல்லோரும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். பெரிய நகரங்களில் ஒருவருக்கு உணவு மிகவும் சுலபமாக கிடைத்துவிடும் என்பதில்லை. இல்லை. எல்லோரும் வேலை செய்ய வேண்டும். மேலும் எல்லோரும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். எல்லோரும் ஒரே சமமான நிலை மட்டத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. அது சாத்தியமல்ல. விதி. தலைவிதி. ஒரு மனிதன் இரவும் பகலும் கடினமாக உழைக்கிறான், இருபத்தி நான்கு மணி நேரம்; அவருக்கு வெறுமனே இரண்டு சாப்பாதிகள் கிடைக்கிறது, அவ்வளவுதான். நாங்கள் பம்பாயில் பார்த்திருக்கிறோம். அவர்கள் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் அதாவது பகலில் கூட அவர்கள் மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட ஓர் இடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள், மேலும் மிகவும் அசுத்தமான நிலையில். பம்பாயில் எல்லோரும் மிகவும் செழிப்புடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமா? இல்லை. அதேபோல், ஒவ்வொரு நகரமும். இது சாத்தியமில்லை. உங்கள் பொருளாதார நிலையை வெறுமனே கடினமாக உழைப்பதன் மூலம் உங்களால் மேம்படுத்த முடியாது. அது சாத்தியமில்லை. நீங்கள் கடினமாக வேலை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், உங்களுக்கு விதிக்கப்பட்டது எதுவோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். ஆகையினால் நம்முடைய ஆற்றல் பயன்படுத்தப்பட வேண்டும்... மல்-லொக-காமோ மத்-அனுக்ரஹார்த:. அந்த ஆற்றல் கிருஷ்ணரை திருப்பதி படுத்த பயன்படுத்தப்பட வேண்டும். அது செய்யப்பட வேண்டும். ஆற்றல் அந்த காரணத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும், ஆற்றல் வெறுமனே பொய்யான எதிர்பார்ப்புக்கு வீணாக்கக் கூடாது அதாவது "நான் சந்தோஷமடைவேன். நான் இதைச் செய்வேன், நான் அதைச் செய்வேன். நான் இவ்வாறாக பணம் செய்வேன். நான்...." குயவனின் கதை. குயவன் திட்டமிடுகிறார். அவரிடம் கொஞ்சம் பானைகள் இருக்கின்றன மேலும் அவர் திட்டமிடுகிறார், "இப்பொழுது என்னிடம் இந்த நான்கு பானைகள் உள்ளன மேலும் நான் அவைகளை விற்றுவிடுவேன். நான் கொஞ்சம் இலாபம் அடைவேன். பிறகு அங்கே பத்து பானைகள் வந்துவிடும். பிறகு நான் பத்து பானைகள் விற்பேன், நான் கொஞ்சம் இலாபம் அடைவேன். எனக்கு இருபது பானைகள் கிடைக்கும், பிறகு முப்பது பானைகள், நாற்பது பானைகள். இப்படியாக நான் கோடீஸ்வரனாகிவிடுவேன். அந்த நேரத்தில் நான் திருமணம் செய்துக்கொள்வேன், மேலும் என் மனைவியை நான் இவ்வழியிலும் அவ்வழியிலும் கட்டுப்படுத்துவேன். மேலும் அவள் கீழ்ப்படியாவிட்டால், பிறகு நான் அவளை இப்படி உதைப்பேன்." ஆகையால் அவர் உதைக்கும் பொழுது, அவர் பானைகளை உதை.த்தார் அத்துடன் அத்தனை பானைகளும் உடைந்துவிட்டன. (சிரிப்பொலி) ஆகையால் அதன் பிறகு அவர் கனவு கலைந்தது. நீங்கள் பாருங்கள்? அதேபோல், நாமும் வெறுமனே கனவு கண்டு கொண்டிருக்கிறோம். சில பானைகளுடன் நாம் வெறுமனே கனவு கண்டு கொண்டிருக்கிறோம் அதாவது "இந்த பானைகள் பல பானைகளாக அதிகரிக்கும், பல பானைகளாக, பல பானைகளாக," பிறகு முடிந்துவிடும். கற்பனை செய்யாதீர்கள், திட்டம் தீட்டுங்கள். அதுதான்.... வாத்தியார், ஆன்மீக குரு மேலும் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் அதாவது "இந்த அயோக்கியர்கள் சிலவேளை திட்டம் செய்யமாட்டார்கள். "இந்த அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்க திட்டம் செய்யமாட்டார்கள்." ந யோஜயேத் கர்மஸு கர்ம-மூடான். இது கர்ம-ஜகத், இந்த உலகம். அதுதான் இந்த ஜட உலகம். அவர்கள் ஏற்கனவே சாய்ந்துவிட்டார்கள் ஆகையால் என்ன பிரயோஜனம்? லோகே வியயாயாமிஷ-மத்ய-சேவா நித்யாஸ்து ஜந்து: எவ்வாறு என்றால் பாலின்ப வாழ்க்கை போல். பாலின்ப வாழ்க்கை இயற்கையானது. எவ்வாறு பாலின்பத்தை அனுபவிப்பது என்பதற்கு பல்கலைக்கழக படிப்பு ஒன்றும் தேவையில்லை. அவர்கள் அதை அனுபவிப்பார்கள். ஒருவரும்.... " எவ்வாறு அழுவது அல்லது எவ்வாறு சிரிப்பது அல்லது எவ்வாறு பாலின்பத்தை அனுபவிப்பது என்று ஒருவருக்கும் கற்பிக்கப்படவில்லை." வங்காளியில் ஒரு முதுமொழி உள்ளது. அது இயற்கையானது. இந்த கர்மவிற்கு உங்களுக்கு எந்த கல்வியும் தேவையில்லை. கடினமாக வேலை செய்வது எப்படி என்று மக்களுக்கு கற்பிக்க இப்பொழுது அவர்கள் பலவகையான பெரிய திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். இது காலத்தை விணாக்குவதாகும். கல்வி நிறுவனங்கள் மக்களை கிருஷ்ணர் உணர்வுடையவர்களாக கற்பிப்பதற்காக இருக்க வேண்டும், இது அல்லது அது என்றாவத ற்க்கு அல்ல. அது காலத்தை வீனக்குவதாகும், ஏனென்றால் அந்த திட்டம் வெற்றி அடையப்போவதில்லை. தல் லபியதெ துஹகாவத் அன்யத: சுக்ஹம் காலென ஸர்வத்ர கபீர-ரம்ஹஸா. இயற்கையின் நியதி செயலாற்றிக் கொண்டிருக்கிறது ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸ்ர்வஷ: (பா.கீ. 3.27). எதுவாயினும்...... ஆகையினால் நம் வேத நாகரிகம் யாதெனில் அதாவது மக்கள் தன் சொந்த நிலைப்பாடில் திருப்தியாக இருக்கிறார்கள், ஒரு பிராமண, ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர. பகவான் அருளால் அவருக்கு கிடைத்தது எதுவாயினும், அவர் திருப்தி அடைந்தார். கிருஷ்ணரின் கருணையை பெற எவ்வாறு தகுதி பெறுவது என்பதற்காக உண்மையான ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. அதுதான் தேவைப்படுகிறது, கிருஷ்ணரிடம் சரணடைவது எப்படி என்று எவ்வாறு கற்றுக்கொள்வது. பிறகு அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: (பா. கீ. 18.66). அதுதான் முடிவு. இந்தியாவில் நாங்கள் கண்டுபிடித்தது அதுவல்ல..... பெரிய அறிவாளிகள், ரிஷிகள், அவர்கள் பால் புத்தகங்கள் எழுதினார்கள், ஆனால் அவர்கள் குடிசையில் வாழ்ந்தார்கள். அரசர்களும், ஷத்ரியர்களும் மட்டும், அவர்கள் ஆட்சி செய்வதால், பெரிய, பெரிய அரண்மனைகள் கட்டுவது வழக்கமானது. வேறு எவருமில்லை. அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்கள், மிகவும் எளிமையான வாழ்க்கை. பொருளாதார அபிவிருத்தி, வானளாவிய கட்.டிடம், பாதாளத் தொடர் பாதை, இன்னும் பல பலவற்றுக்கு நேரத்தை வீணாக்கமாட்டார்கள். இது வேத நாகரிகமல்ல. இது அசுரி நாகரிகம்.