TA/Prabhupada 0160 - கிருஷ்ணர் மறுப்பு கூறுகிறார்
Conversation at Airport -- October 26, 1973, Bombay
ஆகையால் நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு வாழ்க்கையின் முக்கியதுவத்தை புரிந்துக் கொள்ள கற்பிக்கவுள்ளது. நவ நாகரிக முறையிலான கல்வியும் நாகரிகமும் மிகவும் தரங்குறைந்துவிட்டது அதாவது மக்கள் வாழ்க்கையின் முக்கியத்துவதை மறந்துவிட்டார்கள். பொதுவாக, இந்த ஜட உலகில் எல்லோரும் வாழ்க்கையின் முக்கியத்துவதைப் பற்றி மறதியுள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் இந்த மனித வடிவம் வாழ்க்கையின் முக்கியத்துவதை விழிப்பூட்ட ஒரு நல்ல வாய்ப்பு. ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது, பராபவஸ் தாவதபோத-ஜாதொ யாவன ந ஜிஞாஸத ஆத்ம-தத்வ. தன்னையறியும் விஞ்ஞானத்திற்கு ஒருவர் விழிப்பூட்டாதவரை, அந்த முட்டாள்தனமான உயிர்வாழி, அவர் எது செய்தாலும் அது அவருக்கு தோல்வியாகவே முடியும். இந்த தோல்வி தாழ்ந்த உயிரினங்களில் நடந்துக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் அவைகளுக்கு வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ன என்பது புரியாது. அவைகளுடைய உணர்வு முன்னேற்றம் அடையவில்லை. ஆனால் மனித வாழ்க்கையிலும், அதே தோல்வி தொடர்கிறது, அது சிறப்பான நாகரிகமல்ல. அது ஏறக்குறைய மிருக நாகரிகம். ஆஹார-நித்ரா-பஹய-மைதுநம் ச சமான்யா ஏதத் பசுபிர் நராணாம. மக்கள் வெறுமனே உடலின் கோரிக்கையான நான்கு கொள்கைகளில் ஈடுபடுவதென்றால் - உண்பது, தூங்குவது, உறவுகொள்வது மேலும் தற்காத்துக் கொள்வது - அது மிருகங்களின் வாழ்க்கையில் கூட தெரிகிறது, ஆகையால் அது நாகரிகத்தின் மிகுந்த முன்னேற்றம் அல்ல. ஆகையால் எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முயற்சி , மனிதர் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மக்களுக்கு கற்பிப்பதாகும். இதுதான் எங்கள் வேத நாகரிகம். இந்த வாழ்க்கையின் பிரச்சனை இந்த வாழ்க்கையின் கால கட்டத்தின் சில வருட சிரமங்கள் அல்ல. வாழ்க்கையின் உண்மையான பிரச்சனை என்பது எவ்வாறு மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு, முதுமையும் நோயையும் தவிர்க்க வழி காண்பது. அதுதான் பகவத் கீதையில் உள்ள அறிவுரை. ஜென்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க்க-தோஷானுதர்ஷனம் (பா. கீ. 13.9). வாழ்க்கையின் பல பிரச்சனைகளால் மக்கள் திகைப்புற்ற நிலையில் இருக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையின் உண்மையான பிரச்சனை யாதெனில் எவ்வாறு பிறப்பு, இறப்பு, முதுமையும் நோயையும் நிறுத்துவது என்பதுதான். ஆகையால் மக்கள் உணர்ச்சியற்றவர்கள். அவர்கள் மடையர்கலானார்கள் அதாவது அவர்களுக்கு வாழ்க்கையின் பிரச்சனை புரியவில்லை. நெடுங்காலத்துக்கு முன், விஸ்வாமித்திர முனி, மஹாராஜ தஸரதரை பார்த்த போது, மஹாராஜ தஸரதர் விஸ்வாமித்திர முனியிடம், விசாரணை செய்தார், ஐஹிஸ்தம் யத் தம் புனர் ஜன்ம ஜயய: "என் அன்புக்குரிய ஐயா, இறப்பை வெற்றிக் கொள்ள நீங்கள் கையாளும் முயற்சிக்கு, அந்த வேலை நன்றாக எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது? அங்கே எதாவது இடைஞ்சல்கள் இருக்கிறதா?" ஆகையால் இதுதான் நம் வேத நாகரிகம், எவ்வாறு பிறப்பு, இறப்பு, முதுமையும் நோயையும் வெற்றிக் கொள்வது. ஆனால் இந்த நவீன காலத்தில் இதுபோன்ற தகவல் இல்லை, அதுவுமல்லாமல் எவருக்கும் ஆர்வமில்லை. உயர்ந்த பேராசிரியர்கள் கூட, அவர்களுக்கு வாழ்க்கைக்கு பிறகு அங்கு என்ன இருக்கிறது என்று தெரியாது. அவர்கள் நம்புவதுக்கூட இல்லை அதாவது இறப்பிற்கு பிறகும் உயிர் வாழ்க்கை இருக்கிறது என்று. ஆகையால் இது ஒரு குருட்டு நாகரிகம் போய்க் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அறிவு புகட்ட எங்களால் இயன்றவரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் அதாவது வாழ்க்கையின் குறிக்கொள், அதிலும் இந்த மனித இன வாழ்க்கை, வாழ்க்கையின் உடல் சார்ந்த தேவைகளிலிருந்து வேறுபட்டது: உண்பது, தூங்குவது, உறவுகொள்வது மேலும் தற்காத்துக் கொள்வது. பகவத் கீதையிலும் இது கூறப்பட்டுள்ளது, மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ கஸ்சித்யததி ஸித்தயே: (ப.கீ. 7.3) "கோடிக்கணக்கான மக்களில், ஒருவர் முயற்சி செய்து தன் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்." ஸித்தயே, ஸித்ஹி. இதுதான் சித்ஹி, எவ்வாறு பிறப்பு, இறப்பு, முதுமையும் நோயையும் வெற்றிக் கொள்வது. மேலும் மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ கஸ்சித்யததி ஸித்தயே. நவீன நாகரிக மனிதன் சரியான மடையன், சித்ஹி என்றால் என்ன என்று அவருக்கு தெரியாது. அவர்கள் நினைக்கிறார்கள் அதாவது "எனக்கு கொஞ்சம் பணமும் ஒரு தனி வீடும் ஒரு வாகனமும் கிடைத்தால், அதுதான் சித்ஹி." அதுவல்ல சித்ஹி. உங்களுக்கு சில வருடங்கள், ஒரு அழகான தனி வீடு, ஒரு வாகனம், ஒரு அழகான குடும்பம் கிடைக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் இந்த எற்பாடுகள் முடிந்துவிடும் மேலும் நீங்கள் மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு தெரியவில்லை. அதுவுமல்லாமல் அதை தெரிந்துக் கொள்ள அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. ஆகையால் அவர்கள் கல்வியைப் பற்றி பெருமை, நாகரிகத்தில் முன்னேற்றதை பெற்றாலும், அறிவில் மந்தமாகிவிட்டார்கள். ஆனால் நாங்கள் மறுப்பு கூறுகிறோம். நாங்கள் மறுப்பு கூறுகிறோம். நான் மறுப்பு கூறவில்லை. கிருஷ்ணர் மறுப்பு கூறுகிறார். நமாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: மாயயாபஹ்ருதக்ஞானா ஆஸுரம் பாவமாஸ்ரிதா: (ப.கீ. 7.15). இந்த அயோக்கியர்கள், மனிதயினத்தில் தாழ்ந்தவர்கள், மேலும் எப்பொழுதும் பாவச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள், அத்தகையவர்கள் கிருஷ்ணர் உணர்வை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். "இல்லை. அங்கே ஏராளமான அறிவுள்ள MA, PhD's இருக்கிறார்கள்." கிருஷ்ணர் கூறுகிறார், மாயயாபஹ்ருதக்ஞானா: "வெளிப்படையாக அவர்கள் சிறந்த அறிவாளிகள், ஆனால் அவர்களுடைய உண்மையான அறிவு மாயாவால் எடுத்துச் செல்லப்படுகிறது." ஆஸுரம் பாவமாஸ்ரிதா:. இந்த நாத்திக நாகரிகம் மிகவும் ஆபத்தானது. இக்காரணத்தினால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் மிகவும் கடுமையாக இல்லை. ஆகையினால் அவர்கள் கிருஷ்ணரால் மூடா என்று அழைக்கப்படுகிறார்கள், அயோக்கியார்கள். நமாம் துஷ்க்ருதினோ மூடா:. ஆகையினால் நாங்கள் சிறிய முயற்சி செய்கிறோம் இந்த மூடர்களை, மூட நாகரிகத்தை, ஆன்மீக வாழ்க்கை என்னும் வெளிச்சத்திற்கு கொண்டுவர. அதுதான் எங்கள் பணிவான முயற்சி. ஆனால் அது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது, மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ: (ப.கீ. 7.3). "பல கோடி நபர்களிலிருந்து, அவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம்." மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ கஸ்சித்யததி ஸித்தயே. அதற்காக நாம் நிறுத்த வேண்டும் என்று பொருள் அல்ல. எவ்வாறு என்றால் நம் பள்ளி, கல்லூரி நாட்களில், திரு அசுதோஷ முகர்ஜி சில உயர் கல்வி, பட்டக் கல்லூரி பயிலும் வகுப்புக்களை பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தனர், இருப்பினும், அந்த வகுப்பு பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் பராமரிக்கப்பட்டது, அதாவது அங்கு ஒரு மாணவானோ அல்லது இரண்டு மாணவர்களோ இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கவில்லை. அதேபோல் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் கண்டிப்பாக தொடர வேண்டும். அது ஒரு காரணம் அல்ல, அந்த முட்டாள்தனமான மக்கள், அவர்களுக்கு புரியாமல் இருந்து அல்லது அதற்கு வராமல் இருந்தாலும் சரி. நாம் நம் பிரச்சாரத்தை நடத்த வேண்டும். மிக்க நன்றி.