TA/Prabhupada 0166 - பனிப்பொழிவை நாம் கட்டுப்படுத்த முடியாது
Lecture on BG 2.7-11 -- New York, March 2, 1966
நாம் எப்போதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது.. மூன்று வகையான துன்பங்கள் உள்ளன.. நான் பொருளாதார பிரச்சினையால் வரும் துன்பத்தைப் பற்றி சொல்லவில்லை..அதுவும் ஒரு துன்பம் தான்... ஆனால் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, மூன்று வகையான துன்பங்கள் நம்மை சூழ்ந்துள்ளன... முதலாவது துன்பம் நம்முடைய உடல் மற்றும் மனதால் ஏற்படும் துன்பம்... எனக்கு தலை வலி வருகிறது.. நான் வெப்பமாக உணர்கிறேன்...நான் குளிராக உணர்கிறேன்...இவ்வாறு நாம் பலவித துன்பங்களை உடலால் உணர்கிறோம்.. இதைப்போலவே நாம் மனதாலும் துன்பத்தை அனுபவிக்கிறோம்... என்னுடைய மனது இன்று சரியில்லை... அவர் என்னை தவறாக பேசிவிட்டார் என்று நினைத்து வருத்தப்பட்டு துன்பப்படுகிறோம்... அல்லது நாம் எதையோ அல்லது யாரையோ பிரிந்து துன்பப்படுகிறோம்..இவ்வாறு பல துன்பங்கள் உள்ளன.. உடல் மற்றும் மனம் சார்ந்த துன்பங்களையடுத்து இயற்கையால் ஏற்படும் துன்பங்கள்... இவற்றை நாம் அதிதைவிக என்று சொல்கிறோம்...அதாவது நம்மால் கட்டுப்படுத்தமுடியாதவை... இயற்கையால் ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் கட்டுப்படுத்த முடியாதவை.. இப்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம்... இந்த முழு நியூயார்க் நகரமே பனியால் சூழப்பட்டு நாம் சிரமத்திற்குள்ளாவோம்... இதுவும் ஒருவகையான துன்பமே...ஆனால் நம்மால் கட்டுப்படுத்த முடியாதது... நாம் பனிப்பொழிவை கட்டுப்படுத்த முடியாது..உண்மை தானே? ஒருவேளை குளிர் காற்று அடித்தாலும் நம்மால் அதை நிறுத்த முடியாது.. இவற்றை அதிதைவிக துன்பங்கள் என்று சொல்கிறோம். உடல் மற்றும் மனதால் ஏற்படும் துன்பங்களை adhyātmika என்று சொல்கிறோம்.. மற்றொரு வகையான துன்பம் என்னவென்றால் adhibhautika..அதாவது மற்றொரு ஜீவனால் ஏற்படும் துன்பம்... என்னுடைய எதிரியாலோ..ஒரு மிருகத்தாலோ..ஒரு புழுவாலோ நாம் துன்பப்படலாம்..
இந்த மூன்று வகையான துன்பங்களும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.. எப்போதும் இருக்கும் இந்த துன்பங்களை நாம் விரும்புவதில்லை... அர்ஜுனன் என்ன நினைக்கிறான் என்றால்... இந்த யுத்தத்தில் சண்டை போடவேண்டியது என் கடமை.. அவ்வாறு சண்டையிடுவதால் என் இனத்தாரும் துன்பப்படுவார்கள் இந்த எண்ணத்தால் துன்பப்படுகிறான். நாம் துன்பங்களை விரும்பாவிட்டாலும் எப்போதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணர்கிறோமோ... அதற்கான விடையை ஒருவன் ஆன்மீக குருவை அணுகி பெற வேண்டும்.. இப்போது புரிகிறதா? தான் துன்பப்படுகிறோம் என்று இதுவரை அறியாத ஒருவன்.. தனது துன்பத்தைப்பற்றி கவலை கொள்வதோ..அக்கறை கொள்வதோ..அதை தீர்க்க முயற்சி செய்வதோ இல்லை... இங்கு அர்ஜுனன் துன்பப்படுகிறான். அவன் அதற்கு ஒரு தீர்வைத்த தேடி ஆன்மீக குருவை சரணடைகிறேன்.. நாம் துன்பத்தை உணர்ந்தவுடன் வலியை உணர்கிறோம்... வலியை நாம் உணரவில்லை என்பதற்காக நாம் துன்பப்படவில்லை என்று ஆகிவிடாது... ஆனால் எப்போது ஒருவன் தனது துன்பத்திற்கு தீர்வை எதிர்பார்க்கிறானோ, அப்போது ஒரு ஆன்மீக குருவின் ஆலோசனை தேவைப்படுகிறது.. அர்ஜுனனுக்கு ஒரு ஆன்மீக குரு தேவைப்படுவது போல்.. புரிகிறதா? எனவே துன்பம் எப்போதும் இருக்கிறது.. இதற்கு மிகப்பெரிய கல்வியறிவு தேவையில்லை...ஒரே ஒரு உணர்வு... "நாம் துன்பத்தை விரும்பாவிட்டாலும் துன்பப்படுகிறோம்..இதற்கு தீர்வு உள்ளதா?" என்ற உணர்வு வேண்டும்.. இதற்கு ஒரு தீர்வு உள்ளது.. இந்த வேத இலக்கியங்கள் அனைத்தும்... வேதங்கள் மட்டும் அல்ல... நாம் எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்கிறோம்.. எதற்காக அறிவியல் சார்ந்த பாடங்களை கற்கிறோம்? எதற்காக சட்டப் பாடங்களை கற்கிறோம்? அனைத்தும் நம்முடைய துன்பங்களை நிறுத்துவதற்காகவே.. ஒருவேளை துன்பம் என்ற ஓன்று இல்லையென்றால், யாரும் கல்வி கற்க மாட்டார்கள்... மக்கள் நினைக்கிறார்கள் "நான் ஒரு மருத்துவன் ஆனாலோ, ஒரு வழக்கறிஞர் ஆனாலோ, ஒரு பொறியியலாளராக ஆனாலோ மகிழ்ச்சியாக இருக்கலாம்" மகிழ்ச்சி..இதுவே நமது முக்கிய குறிக்கோள்..
"நான் ஒரு நல்ல அரசாங்க உத்தியோகம் பெற்றால் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று நினைக்கிறார்கள்.. எனவே மகிழ்ச்சி என்பதை குறிக்கோளாக வைத்தே நாம் அனைத்து திட்டங்களையும் தீட்டுகிறோம்.. ஆனால் இதுபோன்ற வழிகளால், நம்முடைய துன்பங்களை நிரந்தரமாக தடுக்க முடியாது. உண்மையில் இந்த துன்பங்கள் பௌதீக ஆதிக்கத்தால் ஏற்படுபவை... இந்த மூன்று வகையான துன்பங்களும் அதனாலே ஏற்படுகின்றன.. எனவே தான் எப்போது ஒருவனுக்கு இந்த துன்பங்களில் இருந்து விடுதலை தேவைப்படுகிறதோ, அப்போது ஒரு ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.. இப்போது நீங்கள் உங்கள் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய ஒரு ஆன்மீக குருவை அணுக வேண்டும்.. உங்கள் துன்பங்களில் இருந்து உங்களை விடுவிக்க என்ன மாதிரியான நபரை நீங்கள் அணுகவேண்டும் என்ற கேள்வி எழும்.. சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.. நீங்கள் விலையுயர்ந்த நகையையோ அல்லது வைரத்தையோ வாங்குவதற்கு மளிகைக்கடைக்கு சென்றால்... உங்கள் அறியாமையால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்... நீங்கள் ஒரு நகைக்க கடையை அணுக வேண்டும். இப்போது புரிகிறதா..? நீங்கள் சரியான நபரை அடையும் அறிவைப் பெற வேண்டும்..