TA/Prabhupada 0168 - சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள்

சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள்



Room Conversation -- February 4, 1977, Calcutta

பிரபுபாதா: நாம் பிச்சை கேட்கலாம். பாரத தேசத்தில் இன்னும் பல சந்நியாசிகள் பிட்சை கேட்கின்றனர். அது அனுமதிக்கப்படுகிறது. அது Tridaṇḍī-bhikṣu என்று சொல்லப்படுகிறது. சரியான மனிதன் பிச்சை கேட்பது வேதக் கொள்கைகளின் படி தவறல்ல. பிரம்மச்சாரிகளும் சந்நியாசிகளும் பிச்சை கேட்கலாம். அவர்கள் வெளிப்படையாக இருப்பார்கள். Tridandi-bhiksu. Bhiksu என்றால் பிச்சை கேட்பவர்.

சத்ஸ்வரூபா : Tridaṇḍī-bhikṣu.

பிரபுபாதா: ஆம். இங்கே, இந்திய கலாசாரத்தில், பிரம்மச்சாரி, சந்நியாசி மற்றும் பிராமணர்கள், உணவு, பணம் போன்றவைகளை பிட்சை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர் அது தான் வேத கலாசாரம். அந்த வீட்டினர்,இவர்களை தங்களின் சொந்த குழந்தைகளை போல நடத்துவர் இது ஒரு உறவுமுறை.

சத்ஸவருபா: ஆனால் , இந்த முறை, முழுமையாக வேறு ஒரு கலாசாரத்தில் முயற்சி செய்யலாமா?

பிரபுபாதா: எனவே இவர்கள் நாடோடிகள். இது உங்கள் கலாச்சாரம் ஆகும்- நாடோடிகள் மற்றும் கொலைகாரர்கள், மதத்தின் பெயரில் உள்ளனர். இது அவர்களின் கலாச்சாரம் மற்றும் அழிவுக்கு வழிவகுக்கிறது.. ஏன் எனில் அப்படி ஒரு கலாச்சாரமே இல்லை, எனவே விளைவு அழிவுக்கு வழிவகுக்கிறது. மற்றும் கொலை, குண்டுவீச்சு போன்றவை, ஒட்டுமொத்த சுற்றுசூழலையும் அருவருப்பானதாக ஆக்குகிறது. இது உங்கள் கலாச்சாரம். புராடெஸ்டான்ட் மற்றும் கத்தோலிக்கர்கள் இடையே சண்டை, குண்டுவீசுதல் . மக்கள் பயந்துள்ளனர் அவர்களால் தெருக்களில் நடந்து செல்ல முடிவதில்லை. இது தான் உங்கள் கலாச்சாரம். ஆனால் பிட்சை கேட்பது அசிங்கம். ஒட்டுமொத்த மக்களையும் பயத்தில் ஆழ்த்துவது நல்லவிஷயம், ஆனால் ஒருவன் பணிந்து பிட்சை கேட்பது தவறான விஷயம். இது தான் உங்கள் கலாச்சாரம் வேதம், பிராமணர்களை பிச்சை எடுக்க சொல்வது, அவர்களுக்கு பணிவை கற்றுகொடுக்க தானே தவிர பிச்சை எடுப்பதற்காக அல்ல. மிக மிக பெரிய குடும்பங்களிலிருந்து வருபவர்கள் பிச்சையை நடைமுறையில் செய்கிறார்கள். இது பிட்சை எடுப்பது போன்றது அல்ல. இது ஒருவருக்கு பணிவையும், சாந்த குணமுள்ளவனாகவும் இருக்க கற்றுகொடுக்கிறது. கிறிஸ்து கூறினார் "எளிய மற்றும் சாந்தகுணமுடையோருக்கு , கடவுள் இருப்பான்". இது பிச்சையெடுப்பது அல்ல. இந்த கலாச்சாரம் என்ன என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். உங்களின் கலாச்சாரம், சாத்தானின் கலாச்சாரம் போன்றது. ஒருவருடைய சொந்த குழந்தையை கொல்லும் கலாச்சாரம் அது. கலாச்சாரம் என்பதை எப்படி புரிந்து கொள்வீர்கள்? நான் சொல்வது சரியா தவறா?

சத்ஸ்வரூபா : ஆம் நீங்கள் கூறுவது சரி.

பிரபுபாதா: சரி. கடிதத்தில் விவரி. உங்களின் கலாச்சாரம் மேல்தட்டு கலாச்சாரம். உங்களுக்கு எப்படி சாந்தகுணமும் பணிவாக இருக்கும் கலாச்சாரம் பற்றி புரியும்?

சத்ஸ்வரூபா  : எங்கள் மீது வழக்கு தொடர முயற்சி செய்த மாவட்ட வழக்கறிஞர் ஆதி கேசவ, அவரது மூலோபாயத்தை வெளிப்படுத்துகிறார், ஏனெனில் பல வழக்கறிஞர்கள், தங்களின் மதத்தை பின்பற்ற எல்லா உரிமையும் அவர்களுக்கு இருப்பதாக சொல்கிறார்கள். இது மத சுதந்திரம்.

பிரபுபாதா: இது அங்கீகரிக்கப்பட்ட மதம்

சத்ஸ்வரூபா  : " இது மதத்தை பற்றிய கேள்வி அல்ல, நம்மைப் பற்றியது... ", அவர் கூறினார், " நாம் செய்வது மனவசியம் , அது மதத்திற்கு சம்பந்தப்பட்டதல்ல.".. இது தனிப்பட்ட விருப்பத்திற்கான கேள்வி ஒருவன் சரியான மனநிலையில் இருப்பவன் என்றால் அவனின் மனதை இன்னோருவன் கட்டுப்படுத்த அனுமதிக்க இயலாது. ஹிப்னோஸிஸ் அடிப்படையில் யோசித்துப்பாருங்கள்.

பிரபுபாதா : மனவசியம் தான் எல்லாமே.

சத்ஸ்வரூபா: எல்லாமா?

பிரபுபாதா: நீங்களும் முயற்சி செய்கிறீர்கள். இப்பொழுது அவர்களும் மன வசியம் செய்ய முயற்சி செய்கிறார்கள். நம் மக்களை கட்டாயப்படுத்தி கடத்துகிறார்கள் இது இன்னுமொரு வகையான மன வசியம் . அவர்கள் மனதை நம்மிடம் விட்டுவிட்டனர், எனவே நீங்கள் தவறான செய்திகளை கூறியோ, கடத்தியோ மனதை மாற்ற முயற்சி செய்கிறீர்கள்... இது மன வசியம் இல்லையா ? இங்கு அவரின் மனம் கிருஷ்ண பக்தியில் லயித்திருக்கிறது, நீங்கள் அவரை கட்டாயபடுத்தி திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள். இது மன வசியம் இல்லையா? நீங்கள் மனதை மாற்றினால் அது நல்லது. நான் மனதை மாற்றினால் அது தவறு என்று தத்துவம் கூறுகிறீர்கள். எனவே யாராவது, பாவி தான் கூறுவான், என் நடவடிக்கைகள் நன்றாக இல்லை , உங்களின் நடவடிக்கைகள் நன்றாக உள்ளது என்று.