TA/Prabhupada 0174 - அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள்



Lecture on SB 1.8.26 -- Los Angeles, April 18, 1973

ஒவ்வொரு உயிர்வாழியும் கடவுளின் பிள்ளையே. கடவுள் மீயுயர்ந்த தந்தை ஆவார். கிருஷ்ணர் கூறுகிறார்: அஹம் பீஜ-ப்ரதஹ பிதா. "அனைத்து உயிர்வாழிகளுக்கும் உயிர் விதைக்கும் தந்தை நானே. " ஸர்வ யோனிஷு கௌந்தெய (பகவத் கீதை 14.4) . "எந்த உருவத்தில் இருந்தாலும், அனைத்து ஜீவன்களும் என் மகன்களே. " அது தான் உண்மை. நாம் உயிர்வாழீகள் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான். ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். எனவே தான் நாம் சண்டை போடுகிறோம. உதாரணத்திற்கு, ஒரு நல்ல குடும்பத்தில், "தந்தை நமக்கு உணவு அளிக்கிறார். நாம் சகோதரர்கள். பிறகு எதற்காக சண்டை ?" என்பது தெரிந்திருக்க வேண்டும். அதுபோலவே நாம் கடவுளை உணர்ந்தால், கிருஷ்ணரை உணர்ந்தால், இந்த சண்டை தீர்ந்து விடும். "நான் அமெரிக்கன், நான் இந்தியன், நான் சீன நாட்டவன்." இந்த பைத்தியக்காரத்தனம் எல்லாம் முடிந்து விடும். கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அவ்வளவு சிறப்பானது. மக்கள் கிருஷ்ண உணர்வுடையவர்கள் ஆனவுடனேயே, இந்த அரசியல் சண்டைகள், தேசிய சண்டைகள், அனைத்துமே முடிந்துவிடும். ஏனென்றால் அனைத்துமே கடவுளுக்கு சொந்தமானது என்ற உண்மையான உணர்வுக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். தந்தை அளிக்கும் நன்மைகளின்மீது எப்படி ஒரு குடும்பத்தின் பிள்ளைகளுக்கு உரிமை இருக்கிறதோ, அதேபோலவே, அனைவரும் கடவுளின் அம்சங்கள், அதாவது பிள்ளைகள் என்ற பட்சத்தில், அனைவருக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமை மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பகவத் கீதையை பொறுத்தவரை, இந்த உரிமை அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உண்டு. அது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகங்களோ, மரம், செடி, கொடியோ , அல்லது பூச்சியாகவோ இருந்தாலும் சரி, அனைவருக்கும் சொந்தம் தான். அது தான் கிருஷ்ண உணர்வு. நான் நல்லவன், என் சகோதரனும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கேட்டவர்கள் என்ற அடிப்படையில் நாம் யோசிப்பதில்லை. இந்த குறுகிய சிந்தனையை நாங்கள் வெறுக்கிறோம். நாம் வெளியேற்றுவோம். நம் சிந்தனை: பண்டிதஹ சம தர்ஷினஹ (பகவத்-கீதை 5.18) . பகவத்-கீதையில் நீங்கள் இதை பார்க்கலாம். வித்யா-வினய-சம்பன்னே ப்ராம்மணே கவி ஹஸ்தினி ஷூனி சைவ ஷ்வ-பாகே ச பண்டிதஹ சம- தர்ஷினஹ (பகவத் கீதை 5.18) எவனொருவன் பண்டிதனோ, எவனொருவன் கல்வி கற்றவனோ, அவன் அனைத்து ஜீவராசிகளையும் சமமாகவே பார்க்கிறான். எனவே ஒரு வைணவன் கருணைமிக்கவன். லோகானாம் ஹித-காரிணௌ. அவர்களால் தான் வாஸ்தவத்தில் மனிதனுக்கு நன்மை செய்ய முடியும். எல்லா உயிர்வாழீகளும் இறைவனின் அம்சங்கள் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள், உன்மயிலேயே உணருகிறார்கள். ஏதோ ஒரு வகையில் தாழ்வாடைந்து, இந்த பௌதீக உலகத்தின் தொடர்பில் வந்துவிட்டார்கள், மற்றும் வெவ்வேறு கர்மவினைகளால், பல்வேறு வகையான உடல்களைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, தெளிவாக கல்வி கற்ற ஒரு பண்டிதன் பாகுபாடு பார்ப்பதில்லை. "இது ஒரு மிருகம். இது கசாப்புக்கடைக்கு அனுப்பப்படவேண்டும். இது மனிதன், அவன் இதை சாப்பிடவேண்டும்."இல்லை உண்மையிலேயே கிருஷ்ணரை உணர்ந்த ஒருவன் அனைவரிடத்திலும் கனிவுடன் இருப்பான். எதற்காக விலங்குகளை வெட்ட வேண்டும்? எனவே மாமிசம் உண்ணாதல் என்பது நம் தத்துவம். மாமிசம் சாப்பிடக்கூடாது. அது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் நாம் கூறுவதை அவர்கள் கேட்கமாட்டார்கள். "இது என்ன முட்டாள்தனம்? இது எங்கள் உணவு . இதை ஏன் நான் சாப்பிடக் கூடாது?" என்பார்கள். ஏனெனில், எதமான-மதஹ (ஸ்ரீமத் பாகவதம் 1.8.26) . அவன் போதை மயக்கத்தில் இருக்கும் பாவி. அவன் உண்மை என்னவென்பதை காது கொடுத்து கேட்கமாட்டான்.