TA/Prabhupada 0193 - வெறுமனே ஆன்மீக காரியங்களில் பேராவல் கொள்வீர்கள்



Room Conversation with Professor Durckheim German Spiritual Writer -- June 19, 1974, Germany

டாக்டர் பி. ஜெ. சஹர்: தாங்கள் தயவு கூர்ந்து தங்களுடைய நுணுக்க முறையை மேலும் கருணையுடன் தெளிவாக்குகிறீர்களா... ஒருவர் பகவானின் பெயரை உச்சாடனம் செய்கிறார், அத்துடன் தாங்கள் தயவு கூர்ந்து தங்களுடைய நுணுக்க முறையை மேலும் கருணையுடன் தெளிவாக்குகிறீர்களா, சில குறிப்பான வழியில், அல்லது என்ன நேரும்... (ஜெர்மன்) அதற்கும் மேலாக என்ன செய்யப்பட வேண்டும் அல்லது அது எவ்வாறு, அது எவ்வாறு அதில் புனையப்படுகிறது, மொத்தத்தில, அந்த முழுமையான முறையில் உங்களுடைய பயபக்தியுள்ள கற்பித்தலில்? பிரபுபாதர்: ஆம். இது பக்தி-மார்க, என்றால், முதல் காரியம் ஸ்ரவணம், காதால் கேட்பது. எவ்வாறு என்றால் மக்கள் கேட்பதற்கு வாய்ப்பு அளிக்க இந்த புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதுதான் முதல் வேலை. நாம் பகவானைப் பற்றி கேட்காவிட்டால் நாம் வெறுமனே ஏதோ ஒன்றை கற்பனை செய்வோம். இல்லை. நாம் பகவானைப் பற்றி கேட்க வேண்டும். நாங்கள் இது போன்ற எண்பது புத்தகங்.களை பிரசுரிக்கிறோம், வெறுமனே பகவானைப் பற்றி கேட்பதற்காக. நீங்கள் குறைபாடில்லாமல் கவனமாக கேட்டால் பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு விவரிக்கலாம். அதை கீர்த்தனம் என்றழைக்கிறோம். ஸ்ரவணம், கீர்த்தனம். மேலும் இந்த செய்முறை கேட்பதும் உச்சாடனம் செய்வதும் அல்லது விவரித்துக் கொண்டிருந்தால், கீர்த்தனம் என்றால் விவரிப்பது. எவ்வாறு என்றால் நம்முடைய, இந்த சமூகம் முழுவதும் இந்த புத்தகத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் பிறகு வெளியே சென்று விவரிக்கிறார்கள். இதை கீர்த்தன் என்றழைக்கிறோம். பிறகு இந்த இரு செயல்முறை மூலம், கேட்பதும் உச்சாடனம், நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள், ஸ்மரணம். அப்படியென்றால் ஞாபகம் வைத்திருப்பது, நீங்கள் எப்போதும் பகவானுடன் இணைக்கப்படுகிறிர்கள். டாக்டர் பி. ஜெ. சஹர்: ஆகையால் எல்லா நேரங்களிலும், "என்னை நினையுங்கள்." பிரபுபாதர்: ஆம். ஆம். ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத-ஸேவணம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23). பிறகு ஸ்ரீ மூரத்தியை வழிபட, பகவானின் கமலப் பாதங்களுக்கு மலர்கள், பூமாலை, ஆடை வழங்க வேண்டும், பாத-ஸேவணம், அர்ச்சனம் வந்தனம், பிரார்த்தனை வழங்க, தாஸ்யம், சேவை. இப்படியாக, ஒன்பது வேறுபட்ட செயல்முறைகள் இருக்கின்றன. டாக்டர் பி. ஜெ. சஹர்: கிறித்துவத்திலும் இதை ஒத்த செய்முறை எங்களுக்கும் உள்ளது, இதற்கு இணையாக.. (ஜெர்மன்) பிரபுபாதர்: ஆம். கிறித்துவ முறை, பிரார்த்தனை வழங்குவது. அதுதான் பக்தி, அதுதான் பக்தி. (ஜெர்மன்) கலி-யுக என்றால் சண்டை. உண்மையை புரிந்துக் கொள்ள எவருக்கும் ஆர்வமில்லை, ஆனால் அவர்கள் சும்மா சண்டைபோடுவார்கள். "என் கருத்தில், இது." நான் கூறுகிறேன், "என் கருத்து, இது." நீங்கள் கூறுகிறீர்கள், "அவருடைய கருத்து." பல முட்டாள்தனமான கருத்து அத்துடன் தங்களுக்குள் சண்டையிடுகிறார்கள். இதுதான் அந்த யுகம். திட்டவட்டமான கருத்து இல்லை. எல்லோருக்கும் அவரவருடைய சொந்த கருத்து உள்ளது. ஆகையினால் அங்கே சண்டை இருந்துக் கொண்டிருக்கும். எல்லோரும் கூறுகிறார்கள், "நான் நினைக்கிறேன் இவ்வாறு என்று." ஆகையால் உங்கள் முக்கியதுவம் என்ன, உங்கள் சிந்தித்தலும் அவ்வாறே தானே? அதுதான் கலி-யுக. ஏனென்றால் உங்களுக்கு திட்டவட்டமான அறிவு இல்லை. ஒரு குழந்தை தந்தையிடம் கூறினால், "என் கருத்தின்படி, நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்." அந்த கருத்து ஏற்றுக் கொள்ளபடலாமா? அவனுக்கு அதன் பொருள் தெரியவில்லை என்றால். அவன் எவ்வாறு அவனுடைய கருத்தை அளிக்க இயலும்? ஆனால் இங்கு, இந்த யுகத்தில், அனைவரும் அவர்களுடைய சொந்த கருத்துடன் தயாராக இருக்கிறார்கள். ஆகையினால் அது சண்டை, சச்சரவாகிறது. ஐக்கிய நாடுகளைப் போல், அனைத்து பெரிய மனிதர்களும் அங்கு சென்று ஐக்கியமாகிரார்கள், ஆனால் அவர்கள் கொடிகளை அதிகரிக்கிறார்கள். அவ்வளவுதான். போரிடுக்கிறார்கள், போர் மட்டும் புரியும் ஒரு சமுதாயம். பகிஸ்தான், இந்துஸ்தான், அமெரிக்கன், வியட்னம். அது ஒற்றுமையாக இருப்பதற்கானது, ஆனால் அது போரிடும் கழகமாக அளிக்கப்பட்டது. அவ்வளவு தான். அனைத்தும். ஏனென்றால் எல்லோரும் குறைப்பாடுடையவர்கள், யாராவது தன்னுடைய குறைவற்ற அறிவை அளிக்க வேண்டும். ஜெர்மன் மாது: நீங்கள் சொல்வதாவது, கலி-யுக எப்பொழுதும் இருக்குமா? பிரபுபாதர்: இல்லை. இந்த காலத்தில் தான் முட்டாள்தனமான மனிதர்கள் வளர்வார்கள் (இடைவேளை). தீர்வு காண்பதற்கு பதிலாக போரிடுதல் அதிகரித்து வருகிறது. ஏனென்றால் அவர்களுக்கு பொது அறிவு இல்லை. ஆகையினால் ப்ரம-சூத்திரா கூறுகிறது அதாவது நீங்கள் பூரண பரம உண்மையை பற்றி விசாரணை செய்வதில் அவர்முடன் இருக்க வேண்டும். அதாதொ ப்ரம ஜிஞாசா. இப்போது அதன் பதில், அடுத்த மேற்கொள் யாதெனில், அதாவது பிரமன், அல்லது பூரண பரம உண்மை என்பது அனைத்தும் எதிலிருந்து, அல்லது யாரிடமிருந்து வந்திருக்கிறது. அதாதொ ப்ரம ஜிஞாசா, ஜென்மாதி அஸ்ய யத: (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). இப்போது நீங்கள் கண்டுபிடியுங்கள் எங்கே அந்த... இறுதியான காரணம் என்னவென்று எல்லோரும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் குறிக்கொளாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் இந்த தத்துவ மேர்கொள்களை பின்பற்றினால் பிறகு நீங்கள் சண்டையிடுவது நிற்கும். நீங்கள் நிதானமாவீர்கள். இந்த பதமும் தத்வ ஜிஞாசா. தத்வ ஜிஞாசா என்றால் பூரண பரம உண்மையை பற்றி விசாரணை செய்வது. உட்காருங்கள், ஏனென்றால் இந்த சமுதாயத்தில் மிகவும் திறமையுள்ள ஒரு வகுப்பைச் சேர்ந்த மனிதர்கள் நிச்சயமாக இருப்பார்கள், பூரண பரம உண்மையைப் பற்றி சம்பாஷ்ணை செய்துக் கொண்டு, மேலும் அவர்கள் மற்றவர்களிடம் தெரிவிப்பார்கள், "இதுதான் பூரண பரம உண்மை, என் அன்பார்ந்த நண்பர்களே..." நீங்கள் இதை இவ்வாறு செய்யுங்கள். அதுதான் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு எல்லோரும் பூரண பரம உண்மை. அதனால் சண்டையிடுகிறார்கள்.