TA/Prabhupada 0194 - நீங்கள் பகவத்-கீதையை அதன் உண்மையுருவில் சமர்ப்பிக்க வேண்டும்

From Vanipedia


நீங்கள் பகவத்-கீதையை அதன் உண்மையுருவில் சமர்ப்பிக்க வேண்டும்
- Prabhupāda 0194


Lecture on SB 7.6.4 -- Toronto, June 20, 1976

ஆகையால் நாம் சாஸ்திர-விதியை பின்பற்ற வேண்டும், அதாவது, இதுதான் நாகரிகத்தின் உண்மையான முன்னேற்றம். ஏனென்றால் ஒவ்வொரு பிறவிக்குப் பிறகு பகவானுடன் நமக்கு இருந்த உறவைப் பற்றி மறந்துவிடுவோம், மேலும் இதுதான் ஒரே சந்தர்ப்பம், மனித உருவிளான வாழ்க்கை, பகவானுடனான நம் உறவுக்கு உயிரூட்டலாம். சைதன்ய-சரிதாம்ருத்தாவில் அது கூறப்பட்டுள்ளது அதாவது: அனாதி பஹிர்-முஹ ஜீவ க்ருஷ்ண புலிய கேளா அதேவ க்ருஷ்ண வேத-புராண கரிலா. ஏன் இந்த வேத, புராணங்கள் இருக்கின்றன? முக்கியமாக இந்தியாவில், நமக்கு பலவிதமான வேத இலக்கியங்கள் இருக்கின்றன. முதன் முதலாக, நான்கு வேதங்கள் - சாம, யஜுர், ரிக், அதர்வ. பிறகு அதன் தத்துவத்தின் சுருக்கம், வேதாந்த-சூத்ர. பிறகு வேதாந்த பொருளுரை, புராணங்கள். புராண என்றால் பற்றாக்குறையை நிரப்புகின்ற. சாதாரண மனிதர்கள், அவர்களால் வேத மொழியை புரிந்துக் கொள்ள முடியாது. ஆகையினால், வரலாற்று மேற்கொள் நூல்காளிலிருந்து இந்த வேத நெறிமுறைகள் கற்பிக்கப்படுகிறது. அதுதான் புராணங்கள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீமத் பாகவதம் மஹா புராண என்று அழைக்கப்படுகிறது. அது கறையற்ற புராண, ஸ்ரீமத் பாகவதம், ஏனென்றால் மற்ற புராணங்களில் அங்கே பௌதிக செயல்கள் உள்ளன. ஆனால் இந்த மஹா புராண, ஸ்ரீமத் பாகவதத்தில், வெறுமனே ஆன்மீக செயல்கள் நிறைந்துள்ளது. அதுதான் தேவைப்படுகிறது. இந்த ஸ்ரீமத் பாகவதம், நாரதர் முனியின் ஆணைப்படி வியாசதேவால் எழுதப்பட்டது. மஹா புராண. ஆகையால் நாம் இதை சாதகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பல விதமான விலைமதிப்புள்ள இலக்கியங்கள். இந்த மனித வாழ்க்கை அதற்காகவானது. நீங்கள் ஏன் உதாசீனப்படுத்துகிறிர்கள்? நம்முடைய, நம்முடைய முயற்சி யாதெனில் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், எவ்வாறு அறிவை இந்த வேதங்கள், புராணங்களில், பரப்புவது என்பதே. அப்போதுதான் மனித இனம் அதை சாதகமாக்கி அவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். இல்லையெனில், அவன் வெறுமனே கடினமாக பகல் இரவாக உழைத்து, பன்றியைப் போல்... "எங்கே மலம்? எங்கே மலம்? " என்று கண்டுபிடிக்க, பன்றி பகல் இரவாக கடினமாக உழைக்கிறது. மேலும் மலத்தை உண்ட பின், அவைகள் கொஞ்சம் குண்டாக வந்தவுடனே... ஆகையினால் பன்றிகள் குண்டாக இருக்கும், ஏனென்றால் மலத்தில் எல்லா சத்துக்களும் நிறைந்துள்ளன. மருந்தியலைப் பொறுத்தவரை, மலத்தில் ஹைட்ரொபாஸ்பேட் நிறைந்துள்ளது. ஆகையால் ஹைட்ரொபாஸ்பேட் ஒரு சத்து மருந்து. ஆகையால் ஒருவர் விரும்பினால் அதை சோதித்துப் பார்க்கலாம். (சிரிப்போலி). ஆனால் உண்மையிலேயே இதுதான் காரணி. பன்றி கொழுப்புள்ளதானது மலத்தினால். ஆகையால் இந்த வாழ்க்கை பன்றியாகவோ காட்டுப்பன்றியாகவோ வருவதற்கல்ல. ஒருவர் புனிதரான நபராக வேண்டும். அதுதான் மனித நாகரிகம். ஆகையினால் வேத-நாகரிகத்தில் - பிராமண, முதல் தர மனிதர்கள். இன்றைய சமுதாயத்தில் இப்பொழுது முதல் தர மனிதர்கள் இல்லை. எல்லோரும் மூன்றாம் தரம், நான்காம் தரம், ஐந்தாம் தரம் மனிதர்கள். சத்ய-ஸம-தம-திதக்ஸ் ஆர்ஜவ ஞானம் விக்ஞானமாஸ்திக்யம் ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம் (பகவத் கீதை 18.42). இதுதான் முதல் தர மனிதன். உண்மையான, மிகவும் அமைதியான, நிறைந்த அறிவு, மிகவும் எளிமையான, பொறுமையான, அத்துடன் சாஸ்திரத்தில் நம்பிக்கையாளர். இவைகள் தான் முதல் தர மனிதர்களின் அறிகுறிகள். ஆகையால் உலகம் முழுவதிலும் எங்கே அந்த முதல் தர மனிதன்? (இடைவேளை) ....கிருஷ்ண பக்தி இயக்கம் ஒரு பிரிவையாவது உருவாக்க முயற்சிக்கிறது, முதல் தர மனிதர்கள், அப்போதுதான் மக்களால் காண இயலும், "ஓ குறைபாடற்ற மனிதர்கள் இதோ இருக்கிறார்கள்." ஆகையினால் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர்ந்திருக்கும் நபர்க்ளுக்கு என் வேண்டுகோள், அவர்கள் தங்களை முதல் தர மனிதர்களாக மிக கவனமாக காத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பாராட்டுவார்கள் அத்துடன் பின்பற்ற முயற்சிப்பார்கள். யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜன: (பகவத் கீதை 3.21). அங்கே ஒரு தர மனிதர்கள் இருந்தால், முதல் தரம், பிறகு மக்கள் போற்றுவார்கள். குறைந்த பட்சம், அவர்களால் முதல் தரமாக வர இயலாவிட்டாலும், பின்பற்ற முயற்சிப்பார்கள். அவர்கள் பின்பற்ற முயற்சிப்பார்கள். தத் தட் ஏவ ச யத் பிரமாணம் குருதே லோகஸ்தட் அனுவர்ததே. ஆகையால் அந்த முதல் தர மனிதர் தேவைப்படுகிறார். அவர் செயல்பட்டால், பிறகு மற்றவர்கள் பின்பற்றுவார்கள். ஒரு ஆசிரியர் புகை பிடிக்கவில்லை என்றால், மாணவர்களும் இயல்பாக புகை பிடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால் ஆசிரியர் புகை பிடித்துக் கொண்டிருந்தால், மாணவர்கள் எவ்வாறு....? அவர்களும் வகுப்பில் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் நியூயார்க்கில் பார்த்திருக்கிறேன். குறைந்த பட்சம் இந்தியாவில் இது இன்னும் ஆரம்பமாகவில்லை. அது ஆரம்பிக்கும். ஏனென்றால் அவர்களும் முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். (சிரிப்பொலி) இந்த அயோக்கியர்கள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள், நரகத்திற்குப் போய் கொண்டிருக்கிறார்கள். (சிரிப்பொலி) ஆகையால், பிரலாத் மஹாராஜ் அறிவுரை கூறுகிறார், உங்கள் விலைமதிப்புள்ள நேரத்தை பொருளாதார முன்னேற்றத்திலும் முட்டாள்தனமான செயல்களிலும் வீண்னடிக்காதீர்கள். முகுந்தரின் பக்தர்களாக முயற்சி செய்யுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் வெற்றியடைவீர்கள்.