TA/Prabhupada 0195 - உறுதியான உடல், உறுதியான மனம், உறுதியான தீர்மானம்
Lecture on SB 7.6.5 -- Toronto, June 21, 1976
ப்ரதுயம்னன்: மொழிபெயர்ப்பு: "ஆகையால் பௌதீக வாழ்வில் இருக்கும் போது, 'பாவம் ஆஷ்ரித:', தவறுகளிலிருந்து சரியானதை வேறுபடுத்துவதில் முழுமையான தகுதி பெற்றவன், வாழ்க்கையின் மீஉயர்ந்த இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். உடல் வலிமையாக இருக்கும் வரை, தளர்ந்து போகும் வரை முயற்சி செய்ய வேண்டும்.
பிரபுபாதர்:
- ததோ யதேத குசல:
- க்ஷெமாய பவம் ஆஷ்ரித:
- ஷரீரம் பௌருஷம் யாவன்
- ந விபத்யேத புஷ்களம்
- (ஸ்ரீமத் பாகவதம் 7.6.5)
இதுவே மனிதனின் செயல்பாடாக இருக்க வேண்டும், அதாவது 'சரீரம் பௌருஷம் யாவன் ந விபத்யேத புஷ்களம்'. நாம் திடமாக இருக்கும் வரை நம்மால் சிறப்பாக வேலை செய்ய முடியும். உடல்நலம் ஓரளவுக்கு சரியாக இருந்தால் அதை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். கிருஷ்ண பக்தி இயக்கம் சோம்பேறிகளுக்காக அல்ல. அப்படி கிடையாது. அது உறுதியுள்ளவற்களுக்கானது: உடல் உறுதி, மன உறுதி , தீர்மானத்தில் உறுதி - எல்லாவற்றிலும் உறுதி - புத்தியின் உறுதி. இது அவர்களுக்கு உகந்தது . ஏனென்றால் வாழ்க்கையின் மீஉயர்ந்த இலட்சியத்தை செயல் படுத்த வேண்டியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையின் மீஉயர்ந்த இலக்கு என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த நவீன தலைமுறை... நவீனம் அல்ல, எந்த காலத்திலும். இந்த காலத்தில் அது தெளிவாக தெரிகிறது: வாழ்க்கையின் குறிக்கொள் என்னவென்று மக்களுக்கு தெரியவில்லை. இந்த ஜட உலகில் இருக்கும் எவனும் மாயையில் இருக்கிறான், அதாவது வாழ்க்கையின் இலக்கு என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. ந தே விது:, அவர்களுக்குத் தெரியவில்லை, ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணு. ஸ்வார்த-கதி. இயல்பில் எல்லோரும் தன்னலப்பற்றுடையவர்களாக கருதப்படுகிறது. சுயநலம் என்பது இயற்கையின் விதி என்று கருதப்படுகிறது. ஆனால் தன்னலம் என்றால் என்னவென்பதே அவர்களுக்கு தெரியவில்லை. அவர், கடவுளின் திருவீட்டிற்கு செல்வதற்கு பதிலாக - அதுதான் அவருடைய உண்மையான தன்னலம் - அவர் அடுத்த பிறவியில் ஒரு நாயாகப் போகிறார். அதுதான் தன்னலமா? ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. இயற்கையின் விதி எவ்வாறு செயல்படுகிறது என்பது அவர்களுக்கு தெரியாது. ந தே விது:. அதாந்த - கோபிர் விஷதாம் தமிஸ்ரம். மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா.
- மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா
- மிதோ 'பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம்
- அதாந்த - கோபிர் விஷதாம் தமிஸ்ரம்
- புன: புனஸ் சர்வித - சர்வனானாம்
- (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30)
அந்த கிருஷ்ண உணர்வு... 'மதிர் ந க்ருஷ்ணே'. மக்கள், கிருஷ்ண உணர்வை அடைய மிகவும் தயங்குகிறார்கள். ஏன்? மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா. 'பரத:', மற்றவர்களுடைய அறிவுரையினால். நாம் கிருஷ்ண உணர்வை உலகம் முழுவதும் பரப்புவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருப்பது போல். 'ஸ்வதோ', ஸ்வதோ என்றால் சொந்தமாக. சொந்த முயற்சியினால். நானே தனிப்பட்ட முயற்சியால் பகவத்-கீதை அல்லது ஸ்ரீமத்-பாகவதம் மற்றும் மற்ற வேத இலக்கியங்களை படிப்பதைப் போல் தான். ஆகையால், மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா. மிதோ வா, மிதோ வா என்றால் "ஆலோசனைக் கூட்டம் மூலம்." இப்பொழுதெல்லாம் ஆலோசனைக் கூட்டம் கூட்டுவது மிகவும் பிரபலமானதாகிவிட்டது. ஆகையால், இவ்வாறு ஒருவர் கிருஷ்ண உணர்வை அடைய முடியாது, சொந்த முயற்சியாலும் முடியாது, அல்லது மற்றவர்களின் அறிவுரையாலும் முடியாது, அல்லது, பெரிய ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்வதாலும் முடியாது. ஏன்? க்ருஹ-வ்ரதானாம்: ஏனென்றால் அவர் வாழ்க்கையின் உண்மையான நோக்கம், "நான் இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும்." க்ருஹ-வ்ரதானாம். க்ருஹ என்றால் இல்லற வாழ்க்கை, க்ருஹ என்றால் இந்த உடல், க்ருஹ என்றால் இந்த பேரண்டம். பலவிதமான 'க்ருஹ'ங்கள், பெரியதும் சிறியதும் உள்ளன.