TA/Prabhupada 0197 - நீங்கள் பகவத்-கீதையை அதன் உண்மையுருவில் சமர்ப்பிக்க வேண்டும்



Lecture on SB 5.5.30 -- Vrndavana, November 17, 1976

நீங்கள் இயன்றவரை முயற்சி செய்தால், கிருஷ்ணர் உங்களுக்கு வலிமையை கொடுப்பார். உதவியை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் நிபந்தனையின் பேரில், கிருஷ்ணர் எப்போதும் உங்களுக்கு உதவிபுரிய தயாராக இருக்கிறார். அவர் தயாராக இருக்கிறார். அவர் உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறார். இல்லையெனில் கிருஷ்ணர் இங்கு வந்து மேலும் ஆதரவு கோருவதர்கான பிரயோகம் என்ன, ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் (பகவத் கீதை 18.66)? அதுதான் எங்கள் சாதக நிலைமை. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தாலும் அல்லது சரணடையாவிட்டாலும், அது கிருஷ்ணருக்கு ஒரு பொருட்டல்ல. கிருஷ்ணர் உங்கள் சேவையை நாடியிருக்கவில்லை. அவர் முழுமையாக பூரணத்துவம் நிறைந்தவர். உங்களைப் போல் பத்து இலட்சம் சேவர்களை ஒரு நொடியில் அவரால் உருவாக்க முடியும். ஆகையால் உங்கள் சேவை பகவானுக்கு எதற்கு? அவர் எதற்கு உங்களுடைய சேவைக்கு ஆதரவு கோர வேண்டும்? அவருடைய சேவை நீங்கள் வேண்டும் என்று வேதனைப்படுவதல்ல. ஆனால் அவரிடம் சரணடைய வேண்டும் என்பது உங்களுடைய ஆர்வம். அது உங்களுடைய ஆர்வம். இதை கிருஷ்ணர் பார்க்க விரும்புகிறார், அதாவது நீங்கள் அவரிடம் சரணடைந்து மேலும் பூரணத்துவம் பெற்று, கிருஷ்ணரின் திருவடிகளில் வீடுபேறு அடைவதை விரும்புகிறார். அதுதான் கிருஷ்ணரின் குறிக்கோள். ஆதலால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அதே குறிக்கோள் உடையது: ஆதரவு கோரி செல்லுதல். டன்தெ நிதாய த்ருணகம் படயோர் நிபத்ய காகு-ஸ்தமக்ருத்வா சாஹம் ப்ரவீமி ஹே சாதவ: சகலம் ஏவ விஹாய தூராத் சைதன்ய-சந்ர-சரணே குருதானுராகம இதுதான் எங்கள் இயக்கம், சைதன்ய மஹாபிரபுவின் இயக்கம். ஏன் பிரபோதானந்த சாரஸ்வதி இரந்து வேண்டுகிறார், சைதன்ய-சந்ர-சரணே குருதானுராகம: "நீங்கள் சும்மா சைதன்யா பிரபுவின் கமலப் பாதங்களுக்கு சேவை செய்ய இறங்கி வாருங்கள்?" ஏனென்றால் நேரில் அவரே கிருஷ்ணர், கிருஷ்ணரை எவ்வாறு அணுகுவது என்று நமக்கு கற்பிக்க வந்திருக்கிறார். அவர்தான் சைதன்ய .க்ருஷ்ணாய க்ருஷ்ண சைதன்ய-நாம்னே கெளர-த்விஷெ நம:. ஸ்ரீலா ரூப கோஸ்வாமி, அவர் புரிந்துக் கொண்டார். சார்வபௌம பாத்தாச்சாரிய, அவர் புரிந்துக் கொண்டார். வைராக்ய வித்யா-நிஜ-பக்தி-யோக-ஷிக்ஸார்தம ஏக: புருஸ: புராண: ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய-சரீர-தாரீ க்ருபாம்புதிர் யஸ் தம அஹம் ப்ரபதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 6.254) சைதன்ய மஹா பிரபு மூலம் நாம் கிருஷ்ணரை புரிந்துக் கொண்டால்... சைதன்ய மஹா பிரபு கூறுகிறார் அதாவது "நீங்கள் குரு ஆகிவிடுவீர்கள்." எவ்வாறு? யாரெ டெக்க, தாரெ கஹ 'க்ருஷ்ண'-உபதேசா (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 7.128). மாற்றம் செய்யாதீர்கள், திருத்தம் செய்யாதீர்கள். நீங்கள் வெறுமனே கிருஷ்ணர் என்ன கூறினாரோ அதை மாட்டும் சமயச் சொற்பொழிவாற்ற முயற்சி செய்யுங்கள். இதுதான் சைதன்ய மஹாபிரபுவின் வழிமுறைகள். நீங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றினால்... உங்களுடைய கற்றறிந்த பாண்டித்தியத்தால் எதையும் மிகைப்படியாக சேர்க்காதீர்கள் மேலும் திருத்தம் செய்யாதீர்கள். அது உங்களுக்கு கை கொடுக்காது. பகவத்-கீதா அதன் உண்மையுருவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். யாரெ டெக்க, தாரெ கஹ 'க்ருஷ்ண'-உபதேசா. அதில் அனைத்தும், மிகவும் இலகுவாக எழுதப்பட்டுள்ளது, முன்பே ஏற்பாடு செய்தது போல் நாம் பரம்பரா முறையை பின்பற்ற வேண்டும். ஆகையால் நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் தாழ்மையுடன் முன்னேற்றப்பட வேண்டும். த்ருணாத் அபி சுனிசேன தரோர் அபி ஸஹிஷ்ணுனா அமானீனா மானதேன கீர்தனீய: ஸதா ஹரி: (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.31). கீர்தனீய. இந்த சமயச் சொற்பொழுவு என்றால் கீர்தன, வெறுமனே மிருதங்கத்துடன் இசை கீர்தன நடத்துகிறோம் என்பதல்ல. இல்லை. சமயச் சொற்பொழிவும் கீர்தனமாகும். அபவத் வையாசகி-கீர்தனே. வையாசகி, வியாசதேவின் மைந்தன், ஸுகதெவ கோஸ்வாமீ, அவர் வெறுமனே ஸ்ரீமத் பாகவதத்தை விவரித்து பூரணம் அடைந்தார். அபவத் வையாசகி-கீர்தனே. ஸ்ரீ-விஷ்ணு-ஷரவனே பரீக்ஸத். பரீக்ஸத் மகாராஜா வெறுமனே கேட்டுக் கொண்டார்; அவர் பூரணத்துவம் அடைந்தார். மேலும் ஸுகதெவ கோஸ்வாமீ வெறுமனே விவரித்தார். அதுவும் கீர்தனமாகும். ஆகையால் இதுவும் கீர்தனமாகும். பிரபோதானந்த சாரஸ்வதி நமக்கு கற்பிப்பது போல், ஹெ சாத்ஹவ: சகலம் யேவ விஹாய தூராத் சைதன்ய-சந்தர-சரணே குறுதானுராகம: "நீங்கள் சாது, சிறந்த மனிதன், உத்தமர், ஆனால் இதுதான் என் வேண்டுகோள்." இதுதான் பணிவு. நீங்கள் கூறினால், "ஓ நீங்கள் ஓர் கர்மீ, நீங்கள் ஓர் மூடா..." உண்மையிலேயே அவர் ஓர் மூடா, ஆனால் வேண்டாம்... ஆரம்பத்திலேயே, நீங்கள் கூறினால், பிறகு அங்கு உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது. அவர் ஓர் மூடா, அதில் சந்தேகம் இல்லை.... பன்றிகளையும் நாய்களையும் போல் இரவு பகலாக புலன்நுகர்வுக்காக உழைக்கிறான், நிச்சயமாக அவன் மூடா, கர்மீ. அதேபோல், ஞானி, அவர்கள் வெறுமனே யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தர்க்கம், காகா-தலிய நயாய: "காகா முதலில் நொங்கில் உட்கார்ந்ததா; பிறகு நொங்கு கீழே விழுந்ததா? அல்லது நொங்கு கீழே விழுந்தது, ஆகையினால் காகாவால் நொங்கின்மேல் உட்கார முடியவில்லை?" தர்க்கம். ஒரு பண்டிதர் கூறுகிறார், "இல்லை, இல்லை, நொங்கு விழுந்தது, மேலும் காகா அதன் மேல் உட்கார் விரும்பியது, ஆனால் அதனால் முடியவில்லை." இப்பொழுது மற்றொரு பண்டிதர் கூறுகிறார், "இல்லை, இல்லை, நொங்கு அங்கிருந்தது, மேலும் காகா அதன் மேல் உட்கார்ந்ததால், அது கீழே விழுந்தது." இப்பொழுது இது தான் தர்க்கம். அவர்கள் யூகம் செய்வதில் நேரத்தை வீணாக்குகிறார்கள். காகா-தலிய நயாய குப-மனடுக-நியாய.