TA/Prabhupada 0198 - கெட்ட பழக்கங்களை கைவிட்டு ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபியுங்கள்



Temple Press Conference -- August 5, 1971, London

பெண் பேட்டியாளர்: உலகம் முழுவதிலும் இப்பொழுது உங்களுக்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் அல்லது எண்ணுவது சாத்தியம் இல்லையா?

பிரபுபாதர்: எந்த உண்மையான விஷயத்திற்கும் தொண்டர்கள் மிக குறைவாக இருப்பார்கள், மேலும் எந்த பயன்படாத விஷயத்திற்கும் பல தொண்டர்கள் இருப்பார்கள்.

பெண் பேட்டியாளர்: எத்தனை... நான் கேட்டது என்னவென்றால், தீட்ஷை பெற்ற தொண்டர்கள்...

பிரபுபாதர்: ஏறத்தாழ எங்களிடம் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள்.

பெண் பேட்டியாளர்: மேலும் அது தொடர்ந்து வளர்ந்துக் கொண்டிருக்கிறதா?

பிரபுபாதர்: ஆம், அது மெதுவாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் எங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மக்கள் எந்த கட்டுப்பாட்டையும் விரும்புவதில்லை.

பெண் பேட்டியாளர்: ஆம். அதிகபட்சம் பின்பற்றுதல் எங்குள்ளது? அமெரிக்காவிலா?

பிரபுபாதர்: அமெரிக்காவில், ஐரோப்பாவில், மேலும் கனடாவில், ஜப்பானில், ஆஸ்திரேலியாவில். மேலும் இந்தியாவில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர் இலட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். இந்தியாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளில் குறைந்த அளவில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இலட்சம் இலட்சமாக இருக்கிறார்கள்.

ஆண் பேட்டியாளர்: பகவானை அறிந்துக் கொள்வதற்கு உங்கள் இயக்கம் தான் ஒரே வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பிரபுபாதர்: என்ன அது? பக்தர்: பகவானை அறிந்துக் கொள்வதற்கு இந்த இயக்கம் தான் ஒரே வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பிரபுபாதர்: ஆம்.

ஆண் பேட்டியாளர்: தாங்கள் இவ்வளவு உறுதியாக எப்படி கூறுகிறீர்கள்?

பிரபுபாதர்: அங்கிகாரம் பெற்றவர்களிடமிருந்து, பகவான் கிருஷ்ணரிடமிருந்து கிடைத்த உறுதியினால். கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66).

ஆண் பேட்டியாளர்: ஆனால் வேறு யாராவது, பகவான் தன்னிடம் வேறு ஏதோ ஒன்றை கூறினார் என்று சொன்னால், அவரை நீங்கள் சமமாக நம்புவீர்களா?

சியாமசுந்தரன்: நாங்கள் மற்ற மத செயல்முறைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்பதல்ல.

பிரபுபாதர்: அப்படி இல்லை, நாங்கள் மற்ற பாதைகளை நம்புகிறோம். இந்த படிகளைப் போல் தான். உச்சத்திலிருக்கும் மாடிக்கு படிப்படியாக தான் செல்ல முடியும். சிலர் ஐம்பது படிகள் சென்றிருப்பார்கள், சிலர் நூறு படிகள் சென்றிருப்பார்கள், ஆனால் இலக்கை சென்றடைய ஆயிரம் படிகள் ஏற தேவை இருக்கிறது.

ஆண் பேட்டியாளர்: தாங்கள் அந்த ஆயிரம் படிகளை கடந்ததாக கருதுகிறீர்களா?

பிரபுபாதர்: ஆம்.

பெண் பேட்டியாளர்: இன்று காலை இங்கிருக்கும் நம்மில் யாராவது தொண்டர் ஆக விரும்பினால் நாங்கள் எதை கொடுக்க, அல்லது கைவிட வேண்டும்?

பிரபுபாதர்: முதலில் ஒருவர் தவரான உடலுரவை கைவிட வேண்டும்.

பெண் பேட்டியாளர்: எந்த விதமான உடலுரவும் கூடாதா அல்லது...?

பிரபுபாதர்: என்ன?

பெண் பேட்டியாளர்: 'தவறான' என்றால் என்ன?

பிரபுபாதர்: தவறான உடலுரவு... திருமணமின்றி, எந்த சொந்தமும் இல்லாத, உடலுரவு, அதுதான் தவறான உடலுரவு.

பெண் பேட்டியாளர்: ஆக, திருமண வாழ்க்கையில் உடலுரவு அனுமதிக்கப்பட்டிருத்திறது, ஆனால் திருமணத்துக்குப் புறம்பானது கிடையாது.

பிரபுபாதர்: அது மிருகங்களைப் போன்ற உடலுரவு. மிருகங்களைப் போல், அவைகளுக்கு உறவுகள் இருப்பதில்லை, இருப்பினும் உடலுரவு இருக்கிறது. ஆனால் மனித சமுதாயத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மதத்திலும் திருமணம் என்கிற சடங்கு உள்ளது. ஆகையால் திருமணமின்றி உடலுரவு கொள்வது தவறான உடலுரவாகும்.

பெண் பேட்டியாளர்: ஆனால் திருமண வாழ்க்கையில் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது அல்லவா.

பிரபுபாதர்: ஆம்.

பெண் பேட்டியாளர்: இன்னும் வேறு எதையெல்லாம் ஒருவர் கைவிட வேண்டும்?

பிரபுபாதர்: ஒருவர் அனைத்து வகையான போதை உண்டாக்கும் பொருள்களை கைவிட வேண்டும்.

பெண் பேட்டியாளர்: போதைப் பொருள்களும் மதுபானங்கலுமா?

பிரபுபாதர்: போதையைக் கொடுக்கக் கூடிய எந்த வகையான போதைப் பொருளும்.

சியாமசுந்தரன்: தேநீர் உட்பட...

பிரபுபாதர்: தேநீர், சிகரட் உட்பட. இவை போதையை உண்டாக்கும்.

பெண் பேட்டியாளர்: ஆக சாராயம், கஞ்சா, தேநீர். இவையைத் தவிர்த்து வேறு எதாவது உண்டா?

பிரபுபாதர்: ஆம். ஒருவர் அசைவ உணவைக் கைவிட வேண்டும். அனைத்து வகையான அசைவ உணவுகளையும். மாமிசம், முட்டை, மீன் போன்றவை. மேலும் ஒருவர் சூதாட்டத்தைக் கைவிட வேண்டும்.

பெண் பேட்டியாளர்: ஒருவர் தன்னுடைய குடும்பத்தை கைவிட வேண்டுமா? எல்லோரும் கோயிலில் தான் வசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன், அப்படித்தானே?

பிரபுபாதர்: ஓ, ஆமாம். இந்த பாவச்செயல்களை செய்து கொண்டிருக்கும் வரை ஒருவரால் தீட்ஷை பெற முடியாது.

பெண் பேட்டியாளர்: ஒருவர் தன் குடும்பத்தை கைவிட வேண்டுமா?

பிரபுபாதர்: குடும்பத்தையா?

பெண் பேட்டியாளர்: ஆம்.

பிரபுபாதர்: குடும்பம் இருக்கிறது. ஆனால் எங்கள் நோக்கம் குடும்பத்தை சம்பந்தப்பட்டது அல்ல, எங்கள் நோக்கம் ஒரு தனிப்பட்ட நபரை சம்பந்தப்பட்டது. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஒருவர் தீட்சை பெறுவதற்கு, இத்தகைய பாவ செயல்களை தியாகம் செய்தே ஆகவேண்டும்.

பெண் பேட்டியாளர்: ஆக குடும்பத்தையும் தியாகம் செய்ய வேண்டும். ஆனால்...

சியாமசுந்தரன்: இல்லை, இல்லை, குடும்பத்தை கைவிட வேண்டிய அவசியம் இல்லை.

பெண் பேட்டியாளர்: நான் கூறுவது என்னவென்றால், ஒருவேளை நான் தீட்ஷை பெற விரும்பினால். நான் இங்கு வந்து வசிக்க வேண்டும் அல்லவா?

சியாமசுந்தரன்: இல்லை.

பிரபுபாதர்: அவசியமில்லை.

பெண் பேட்டியாளர்: ஓ, நான் விட்டீலேயே இருக்கலாமா?

பிரபுபாதர்: ஓ, ஆமாம்.

பெண் பேட்டியாளர்: இருப்பினும் என் உத்தியோகம் என்னாவது? ஒருவர் தன் வேலையை விட்டுவிட வேண்டுமா?

பிரபுபாதர்: நீங்கள் இந்த கெட்ட பழக்கங்களை கைவிட்டு, இந்த ஜெப மலையில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அவ்வளவு தான்.

பெண் பேட்டியாளர்: நான் ஏதாவது நிதி உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறதா?

பிரபுபாதர்: இல்லை, அது உங்கள் விருப்பப்படி செய்யலாம். நீங்கள் கொடுத்தால், அது சரி. இல்லையெனில், நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்.

பெண் பேட்டியாளர்: மன்னிக்கவும், எனக்கு புரியவில்லை.

பிரபுபாதர்: நாங்கள் யாருடைய நிதி உதவியையும் நாடியிருக்கவில்லை. நாங்கள் பகவானை அதாவது கிருஷ்ணரை நாடியிருக்கிறோம்.

பெண் பேட்டியாளர்: அவ்வாறு என்றால் நான் எந்த பணமும் கொடுக்க வேண்டியதே இல்லையா?

பிரபுபாதர்: இல்லை.

பெண் பேட்டியாளர்: உண்மையான குருவை போலியான குருவிடமிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கியமான விஷயம் இது தானா?

பிரபுபாதர்: ஆம். உண்மையான குரு ஒரு தொழில் அதிபர் அல்ல.