TA/Prabhupada 0210 - முழு பக்தி மார்க்கமும் பகவானின் கருணையை பொறுத்து உள்ளது
Lecture on SB 1.15.30 -- Los Angeles, December 8, 1973
ஆகையால் உங்களுக்கு பகவத் கீதையை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், அதை நேரடியாக கேட்டு அறிந்து கொண்டவரைப் போல் நாமும் அதே விதத்தில் புரிந்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் பரம்பரை முறை என்றழைக்கிறோம். ஒருவேளை நான் என் ஆன்மீக குருவிடமிருந்து கேட்டறிந்து இருந்தால், பிறகு அதையே நான் உங்களிடம் கூறுவேன். ஆகையால் இதுதான் பரம்பரை முறை. என்னுடைய ஆன்மீக குரு என்ன கூறினார் என்று உங்களால் கற்பனை செய்ய முடியாது. அல்லது நீங்கள் சில புத்தகங்கள் படித்தால் கூட, என்னிடமிருந்து புரிந்துக் கொள்ளவில்லையெனில், உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. இதைத்தான் பரம்பரை முறை என்றழைக்கிறோம். நீங்கள் மிகமேம்பட்ட குருவிடம் நேரடியாக செல்ல முடியாது, நான் சொல்வதாவது, அடுத்து ஆச்சாரியரை தவிர்த்து, நேரடியான அடுத்து ஆச்சாரியரை. எவ்வாறு என்றால் நம்முடைய, சைதன்ய மஹாபிரபுவின் சமயக் கோட்பாட்டு முறை; சைதன்ய மஹாபிரபுவை நம்மால் நேரடியாக புரிந்துக் கொள்ள முடியாது. அது சாத்தியமல்ல. நாம் கோஸ்வாமிகள் மூலம்தான் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையினால் சைதன்ய-சரிதாம்ருத்தாவில் நீங்கள் காணலாம் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும், நூலாசிரியர் கூறுகிறார், ரூப-ரகுநாத-பதே... அது என்னது? கிருஷ்ணடாஸ. ரூப-ரகுநாத-பதே சத யார ஆஸ சைதன்ய-சரிதாம்ருத கஹெ கிருஷ்ணடாஸ இதுதான் செயல்முறை. "சைதன்ய மஹாபிரபுவை நான் நேரடியாக புரிந்துக் கொண்டேன்." என்று அவர் கூறவில்லை. இல்லை. அது புரிந்துக் கொள்வதல்ல. அது அறியாமை. சைதன்ய மஹாபிரபு யார் என்று உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. ஆகையினால் அவர் மேலும் கூறுகிறார், ரூப-ரகுநாத-பதே சத யார ஆஸ சைதன்ய-சரிதாம்ருத கஹெ கிருஷ்ணடாஸ. "நான்தான் அந்த கிருஷ்ணடாஸ, கவிராஜ், எப்பொழுதும் கோஸ்வாமிக்களின் கீழ்நிலை ஊழியராக இருப்பவர்." இதுதான் பரம்பரா முறை. அதேபோல், நிரோதம தாஸ தாகுரும் கூறுகிறார், ஐ சே கோசா ஜார் தார் முய்தாஸ், "இந்த ஆறு கோஸ்வாமீகளையும் தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்ட அந்த நபருக்கு நான் ஒரு சேவகன். இவர்களுடைய வழிவகைகளை ஏற்றுக் கொள்ளாத எவருக்கும் நான் சேவகனாக இருக்கப் போவதில்லை..." ஆகையினால் நாம் கூறுவது, அல்லது நம் பிராத்தனைகளை நம் ஆன்மீக குருவிற்கு அளிக்கிறோம், ரூபானுக-வராய தே, ரூபானுக-வராய தே, ஏனென்றால் அவர் ரூப கோஸ்வாமியை பின்பற்றுகிறார், ஆகையினால் நாம் ஆன்மீக குருவை ஏற்றுக் கொள்கிறோம். ரூப கோஸ்வாமியைவிட திறமையாக அல்லது அவரைவிட இன்னும் அதிகமாக.... இல்லை. தாண்டேர-சரண-செபி-பக்த-சனெ வாஸ். இதுதான் பரம்பரா முறை. இப்பொழுது இங்கு, அதே முறை ஒப்பிக்கப்படுகிறது: கிருஷ்ணரிடமிருந்து, நேரடியாக கேட்ட அர்ஜுன். சில நேரங்களில், சில மக்கள் கூறுகிறார்கள், - இது கீழ்தரமான மக்கள் - அதாவது "அர்ஜுன் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக கேட்டார், ஆனால் நாம் கிருஷ்ணரை நம் முன்னிலையில் காணவில்லை, ஆகையால் நான் எவ்வாறு இதை ஏற்றுக் கொள்வது?" இது முன்னிலை தோன்றுவதைப் பற்றிய கேள்வியில்லை, ஏனென்றால் உங்களுக்கு பூரண அறிவைப் பற்றிய சிந்தனை இல்லை. கிருஷ்ணரின் வார்த்தைகள், பகவத் கீதை, கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதல்ல. அது கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதல்ல. நீங்கள் பகவத் கீதை கேட்கும் போது, நீங்கள் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக கேட்கிறீர்கள், ஏனென்றால் கிருஷ்ணர் வேறுபட்டவர் அல்ல. கிருஷ்ணர் பரிபூரணமானவர். கிருஷ்ணர், கிருஷ்ணருடைய பெயர், கிருஷ்ணருடைய உருவம், கிருஷ்ணருடைய தன்மை, கிருஷ்ணருடைய அறிவுரை, கிருஷ்ணருடையஅனைத்தும், அவைகள் அனைத்தும் கிருஷ்ணரே. அவைகள் அனைத்தும் கிருஷ்ணரே. இது புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். அவை கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதல்ல. ஆகையினால் கிருஷ்ணரின் திருவுருவம் இங்கு, அவரே கிருஷ்ணர். அவர் ஒரு சிலையல்ல. "அவர் ஒரு பளிங்கு சிலை." இல்லை அவர் கிருஷ்ணர். அவர் உங்கள் முன் தோன்றியுள்ளார் ஏனென்றால் உங்களால் கிருஷ்ணரை பார்க்க முடியாது. உங்களால் கற்கள், மரக்கட்டை, பார்க்க முடியும்; ஆகையினால் அவர் அந்த உருவத்தில் தோன்றியுள்ளார். நீங்கள் நினைக்கிறீர்கள் அது கற்களும், மரக்கட்டையும் என்று, ஆனால் அவர் கற்களும், மரக்கட்டையும் அல்ல; அவர் கிருஷ்ணர். இதைத் தான் பூரண உண்மை என்றழைக்கிறோம். அதேபோல், கிருஷ்ணரின் வார்த்தைகளும் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதல்ல. கிருஷ்ணரின் வார்த்தைகள் பகவத் கீதையில் இருக்கும் போது, அது கிருஷ்ணரே. எவ்வாறு என்றால் தேன் இந்திய பிராமணர்கள் போல். உடனடியாக பகவத் கீதையை திறந்தவுடன், அவரால் படிக்க முடியவில்லை, அவர் எழுத்தறிவற்றவர். ஆனால் அவர் குரு மஹாராஜ் கூறியிருக்கிறார் அதாவது "தினமும் நீங்கள் பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயம் படிக்க வேண்டும்." அவர் பதற்றமடைந்தார், அதாவது "நான் எழுத்தறிவற்றவன், என்னால் முடியாது.... சரி எனக்கு பகவத் கீதையை கொடுங்கள்," ஆகையால் அவர் ஓர் ரங்கநாதர் கோயிலில் இருந்தார். அவர் பகவத் கீதையை எடுத்துக் கொண்டார் மேலும் இவ்வாறு செய்தார். அவரால் படிக்க முடியவில்லை. ஆகையால் அவரைப் பற்றி அறிந்திருந்த நண்பர்கள், பரிகாசம் செய்துக் கொண்டிருந்தார்கள், "சரி பிராமண, எவ்வாறு பகவத் கீதையை படிக்கிறீர்கள்?" அவர் பதில் கூறவில்லை ஏனென்றால் நண்பர்கள் பரிகாசம் செய்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டார் "எனக்கு தெரியாது.... நான் கல்லாதவன்." ஆனால் சைதன்ய மஹாபிரபு வந்தபோது, அவரும் வியப்படைந்தார், "பிராமண, நீங்கள் பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறீர்களா?" அவர் கூறினார், "ஐயா, நான் கல்லாதவன், என்னால் படிக்க முடியாது. அது சாத்தியமல்ல. ஆனால் என் குரு மஹாராஜ் என்னை படிக்க சொல்லி கட்டளையிட்டார். நான் என்ன செய்வேன்? நான் இந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டேன்." குருவின் வார்த்தைகளை விசுவாசமுடன் பின்பற்றுபவர். அவர் கல்லாதவர். அவரால் படிக்க முடியாது. அதற்கு சாத்தியமில்லை. ஆனால் அவர் குரு மஹாராஜ் கட்டளையிட்டார், "நீங்கள் பகவத் கீதையை தினமும் படிக்க வேண்டும், பதினெட்டு அத்தியாயம்." இப்போது இது என்ன? இது வியவஸாயாத்மிகா புத்தி: என்று அழைக்கப்படுகிறது. நான் கூறியது முழுமையடையாததாக இருக்கலாம். அதனால் பரவாயில்லை. ஆனால் நான் என் குரு மஹாராஜின் வார்த்தைகளை பின்பற்றினால், பிறகு நான் முழுமையடைந்துவிடுவேன். இதுதான் அதன் இரகசியம். யஸ்ய தேவே பராபக்திர் யதா தேவே ததா குரெள (சா. உ. 6.23). ஒருவருக்கு முழுமுதற் கடவுளிடம் பலமான நம்பிக்கையும் மேலும் அதே அளவு நம்பிக்கை குருவிடமும் இருந்தால், யதா தேவே ததா குரெள, பிறகு வெளிப்படுத்தப்பட்ட வேதங்கள் தெளிவுபடும். அது அந்த கல்வியல்ல. அது அந்த புலமையால் வந்த கல்வி உதவி நிதியல்ல. அது கிருஷ்ணர் மீதும் குருவின் மீதும் உள்ள நம்பிக்கை. ஆகையினால் சைதன்ய-சரிதாம்ருத்தாவில் கூறப்பட்டுள்ளது குரு-கிருஷ்ண-க்ருபாய பாய பக்தி-லதா-பீஜ (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.151). கல்வியால் அல்ல. அது அந்த புலமையால் வந்த கல்வி உதவி நிதியால் அல்ல, சொல்லப்படவில்லை. சைதன்ய மஹாபிரபு கூறினார், குரு-கிருஷ்ண-க்ருபாய, குருவின் கருணையால், கிருஷ்ணரின் கருணையால். இது கருணை சம்மந்தமான கேள்வி. இது கல்வி உதவி நிதி அல்லது செழிப்பு, அல்லது வசதிகளைப் பற்றியதல்ல. இல்லை. அனைத்து பக்தி-மார்கமும் பகவானின் கருணையைச் சார்ந்துள்ளது. ஆகையால் நாம் கருணையை நாடிச்செல்ல வேண்டும். அதாபி தே தேவ பதாம்புஜ-த்வய-ப்ரஸாத-லேஸானுக்ருஹீத ஏவ ஹி ஜானாதி தத்வம்....(ஸ்ரீமத் பாகவதம் 10.14.29). ப்ரஸாத-லேஸா, லேஸா என்றால் துண்டு. ஒப்புயர்வற்ற கடவுளின் ஒரு சிறு துண்டு கருணையை பெற்றிறுப்பவறால் புரிந்துக் கொள்ள முடியும். மற்றவர்கள், ந சான்ய ஏகோ'பி சிரம் விசின்வன். மற்றவர்கள், இலட்சக் கணக்கான வருடங்களுக்கு யூகம் செய்துக் கொண்டு போகலாம். அதைப் புரிந்துக் கொள்வது சாத்தியமல்ல. அதனால் பகவத் கீதை உண்மையுருவில், ஆகையினால் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம், ஏனென்றால் பகவத் கீதை அர்ஜுனரால் புரிந்துக் கொள்ளப்பட்டதைப் போலவே நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். நாங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணரிடம் செல்லவில்லை, இந்த கல்விமான், அந்த கல்விமான், இந்த போக்கிரி அந்த போக்கிரி இல்லை. நாங்கள் செல்லவில்லை. அது எங்கள் வேலையல்ல. அது தான் பரம்பரா.