TA/Prabhupada 0222 - இந்த இயக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதை நிறுத்தி விட வேண்டாம்
ஆக இது அவ்வளவு நல்ல ஒரு இயக்கம். அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுசஹ (பகவத் கீதை 18.66). பகவத் கீதை கூறுகிறது, பகவான் கூறுகிறார், மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு அவர்களின் பாவச் செயல்களே காரணம். அறியாமை. அறியாமை தான் பாவச் செயல்களுக்குக் காரணம். என்னை போன்ற ஒரு வெளிநாட்டுக்காரர் அமெரிக்காவிற்கு வருகிறார் ஆனால் அவருக்கு இங்குள்ள சட்டம் எதுவும் தெரியாது என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவில்... உங்கள் நாட்டில், வாகனங்களை சாலையின் வலது பக்கமாக ஒட்டவேண்டும் என்பது தான் சட்டம். இந்தியாவிலும் சரி, நான் லண்டனிலும் பார்த்திருக்கிறேன், இடது புறமாக வாகனங்களை ஓட்டுவது தான் முறை. ஆக அவருக்கு அது தெரியாது என்று வைத்துக்கொள்வோம். அவர் இடது பக்கத்திலிருந்து வண்டியை ஓட்டி விபத்திற்கு ஆளாகினால், அவரைப் காவல்காரர்கள் எடுத்துச் செல்வார்கள். "ஐயா, இங்கு வண்டியை வலது புறமாக ஓட்ட வேண்டும் என்று எனக்குத் தெரியாது,” என்று அவர் சொன்னால் அவரை மன்னித்துவிட முடியாது. சட்டம் அவரைத் தண்டிக்கும். எனவே அறியாமை தான் சட்டவிரோதமான செயல்களுக்கு, அதாவது பாவச் செயல்களுக்கு காரணம். மேலும் நீங்கள் ஒரு பாவச் செயலை செய்தாலே அதன் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும். ஆக இந்த உலகமே அறியாமையில் இருக்கிறது, மேலும் அறியாமையில் செயல்படுவதால், அவர்கள் பற்பல செயல்கள் மற்றும் கர்மவினைகளின் சூழலில் சிக்கிவிடுகிறார்கள், அவை நல்லதாகவும் இருக்கலாம் கேட்டதாகவும் இருக்கலாம். இந்த பௌதீக உலகில் நல்லது என்று எதுவுமில்லை; எல்லாமே மோசமானது தான். ஆக நாமே, இது நல்லது , இது கேட்டது என்று தீர்மானித்து அவ்வாறே செயல்புரிகிறோம். இங்கே... பகவத் கீதையிலிருந்து, இந்த இடம் துக்காலயம் ஆஷாஸ்வதம் (பகவத் கீதை 8.15) என நாம் புரிந்துகொள்கிறோம். துன்பத்தை அனுபவிப்பதற்காகத் தான் இந்த இடம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆக இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில் எப்படி உங்களால் "இது நல்லது" , “இது கேட்டது” என்று சொல்ல முடியும், எல்லாமே கேட்டது தான். ஆக இது தெரியாதவர்கள் - பௌதீகத்தால் கட்டுண்ட வாழ்க்கையை உணராதவர்கள் - "இது நல்லது, இது கேட்டது," என்று எதையாவது புதிதாக மனசுக்கு பட்டதுபோல் உருவாக்குவார்கள், ஏனென்றால், இங்கு எல்லாமே கேட்டது, எதுவுமே நல்லதல்ல என்று அவர்களுக்குத் தெரியாது. இந்த பௌதிக உலகில் மிகவும் அவநம்பிக்கையோடு இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஒருவனால் ஆன்மீகத்தில் முன்னேற முடியும். துக்காலயம் ஆஷாஸ்வதம் (பகவத் கீதை 8.15). இந்த இடம் துயரங்கள் நிறைந்தது, மேலும் இதை நீங்கள் ஆராய்ந்துப் பார்த்தால், வெறும் பரிதாபமான ஒரு நிலையை மட்டுமே உங்களால் காண முடியும். ஆகவே மொத்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்னவென்றால், நாம் பௌதீகத்தால் கட்டுண்ட இந்த வாழ்க்கையை துறந்து, கிருஷ்ண பக்தியால் தம்மை ஆன்மீக தளத்திற்கு உயர்த்தி, பிறகு பரமபுருஷரான முழுமுதற் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை அடைய முயல வேண்டும், யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாமம் பரமம் மம (பகவத் கீதை 15.6), அங்கு சென்ற யாரும், மீண்டும் இந்த மோசமான உலகிற்கு திரும்பி வருவதில்லை. அதுவே இறைவனின் உன்னதமான இருப்பிடம் ஆகும். ஆக பகவத் கீதையில் இது விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அங்கீகரிக்கப்பட்டது, மிகவும் முக்கியமானது. இப்போது, இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஆண்களும் பெண்மணிகளுமான நீங்கள், தயவு செய்து இதை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்... அதுவே பகவான் சைதன்யர் மற்றும் என் குரு மகாராஜரின் திட்டப்பணி, மேலும் நாங்களும் இந்த பணியை சீடப் பரம்பரையின் வழியாக நிறைவேற்ற விரும்புகிறோம். நீங்கள் எனக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறீர்கள். ஒரு நாள் நான் இந்த உடலைவிட்டு சென்றுவிடுவேன், ஆனால் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். இந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுச் செல்வதை நிறுத்தி விடாதீர்கள், நீங்கள் பகவான் சைதன்யர் மற்றும் அருள்மிகு பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதர் அவர்களின் அருளை பெறுவீர்கள். மிக்க நன்றி.