TA/Prabhupada 0223 - இந்த இயக்கம் முழு மனித சமுதாயத்திற்கும் கல்வி கற்பிக்க இருக்க வேண்டும்



Room Conversation with Ratan Singh Rajda M.P. "Nationalism and Cheating" -- April 15, 1977, Bombay

பிரபுபாதர்: என்ன ஆட்சேபனை? திரு ராஜ்தா: எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. பிரபுபாதர்: பகவத் கீதை அங்கீகாரம் பெற்றது, மற்றும் எனக்குத் தெரிந்தவரை, மொரார்ஜி கைது செய்யப்படும் போது, "என்னை பகவத் கீதையை படித்து முடிக்க விடுங்கள்,” என்று அவர் கூறினாராம். நான் செய்தியில் படித்திருக்கிறேன். திரு ராஜ்தா: ஆமாம், அவர் அப்படித் தான் சொன்னார். பிரபுபாதர்: எனவே அவர்... அவர் பகவத் கீதையின் பக்தர், மேலும் அப்படி பல பேர் இருக்கிறார்கள். பிறகு ஏன் இந்த போதனையை முழு உலகத்திற்கும் வழங்கக்கூடாது? திரு ராஜ்தா: நான் பார்த்திருக்கிறேன், பொதுவாக அவர் காலை 3.30 மணிக்கு எழுந்து, முதலில் தன் பக்தி செயல்களை செய்வார், அதாவது பகவத் கீதை வாசிப்பது, எல்லாம். அது இரண்டு, மூன்று மணி நேரம் வரை நடக்கும். பிறகு, ஏழு மணிக்கு, அவர் குளித்தபிறகு தான் தனது அறையிலிருந்து வெளியே வருவார். பிறகு தான் அவர் எல்லோரையும் சந்திகப்பார் (மங்கிய குரல்). பிரபுபாதர்: இந்த வெளிநாட்டு இளைஞர்கள், பகவத் கீதையை 3.30 முதல் 9.30 வரை பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை கிடையாது. பார்த்தீர்களா. இந்த கிரிராஜனை போல் தான். அவன் நாள் முழுதும் சேவையில் ஈடுபட்டிருக்கிறான். அவர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். காலை, 3.30 முதல், 9.30 க்கு அவர்கள் சோர்வடையும் வரை, பகவத் கீதை தான் அவர்கள் வாழ்க்கை. திரு ராஜ்தா: அற்புதம். பிரபுபாதர்: மேலும் எங்களிடம் கற்பதற்கு பல இலக்கியங்கள் இருக்கின்றன. ததா தேஹாந்தர-ப்ராப்திஹி (பகவத் கீதை 2.13), இந்த ஒரு வரியைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தால், அதை புரிந்துகொள்ளவே பல நாட்கள் எடுக்கும். திரு. ராஜ்தா: சரி தான். பிரபுபாதர்: இப்போது, ததா தேஹாந்தர-ப்ராப்திஹி மற்றும் ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20), இது உண்மையென்றால், இதற்கு நாம் என்ன செய்கிறோம்? அது தான் பகவத் கீதை. ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசின் ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20). ஆக, என் உடல் அழிவை அடையும்போது, நான் சென்று... (இடைவெளி) ...நானே நேரடியாக வாசலுக்கு வாசல் செல்கிறேன், புத்தகங்களை விற்று பணம் அனுப்புகிறேன். இவ்வாறு நாங்கள் இந்த இயக்கத்தை முன்னோக்கி நடத்தி வருகிறோம். எனக்கு அரசாங்கத்திடமிருந்தோ, மக்களிடமிருந்தோ, எந்த உதவியும் கிடைப்பதில்லை. மேலும் பாங்க் ஆஃப் அமெரிக்காவின் கணக்குவழக்கிலிருந்து நாங்கள் எவ்வளவு வெளிநாட்டு பணம் கொண்டு வறோம் என்பதை நீங்களே பாருங்கள். உடல்நிலை சரியில்லாத இந்த நிலையிலும், இரவில் நான், குறைந்தது நான்கு மணி நேரம் உழைக்கிறேன். அவர்களும் எனக்கு உதவுகிறார்கள். இது வெறும் எங்கள் தனிப்பட்ட முயற்ச்சி தான். இங்கே ஏன் வரக் கூடாது? நீங்கள் உண்மையிலேயே பகவத் கீதையின் தீவிர மாணவராக இருந்தால், நீங்கள் ஏன் வந்து ஒத்துழைக்கக் கூடாது? மேலும் ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா மனோரதேநாசதி தாவதோ (ஸ்ரீமத் பாகவதம் 5.18.12). வெறும் சட்டங்களை அமைத்து பொது மக்களை நேர் வழிக்கு கொண்டுவர முடியாது. அது சாத்தியம் இல்லை. மறந்துவிடுங்கள். அது சாத்தியம் இல்லை. ஹராவ் அபக்தஸ்ய குதோ... யஸ்யாஸ்தி பகவதி அகிஞ்சனா சர்வைஹி... ஒருவன் பகவானுடைய பக்தன் ஆனால், எல்லா நற்குணங்களுக்கும் அவன் சொந்தக்காரன் ஆகிறான். மேலும், ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்... ஒருவன் பக்தனாக இல்லாத பட்சத்தில்... இப்போது பல விஷயங்களை ஒட்டி, கண்டனங்கள் நடக்கின்றன, பெரிய, பெரிய தலைவர்கள். இன்றைய செய்தித் தாளில் பார்த்தேன். "இன்னார், பெரிய நபர் ஒருவர், நிராகரிக்கப்பட்டார்." ஏன்? ஹராவ் அபக்தஸ்ய குதோ. ஒருவன் பக்தனே இல்லாத பட்சத்தில், பெரிய தலைவன் ஆகி என்ன பயன்? (இந்தி) நீங்கள் நல்ல அறிவுள்ளவர், இளம் வயது, அதனால் தான் நான் உங்களுக்கு சற்று புரிய வைக்க முயல்கிறேன், மேலும் இந்த யோசனைகளுக்கு உங்களால் வடிவம் கொடுக்க முடிந்தால்... அது ஏற்கனவே இருப்பது தான். அது ஒன்றும் இரகசியமில்லை. முழு மனித சமுதாயத்திற்கும், வெலைமதிப்பில்லாத இந்த கல்வியை வழங்கும் வகையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும், என நாம் சற்று தீவிரமாக இருந்தால் போதும். எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் வழிதவராத ஒரு உன்னதமான எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.