TA/Prabhupada 0229 - கிருஷ்ண தத்துவத்தை புரிந்துக் கொண்ட ஒரு சீடரை நான் பார்க்க வேண்டும்



Conversation with Indian Guests -- April 12, 1975, Hyderabad

பிரபுபாதர்: இதன் சிரமம் யாதெனில் நாம் நிலையான மாணவர்களாக விரும்புவதிலை. வேண்டா வெறுப்பாக கண்டபடி, இங்கும் அங்கும், இங்கும் அங்கும், ஆனால் தொடர்ந்து நான் அப்படியே இருக்கிறேன். இது ஒரு விஞ்ஞானம். வேதம் கூறுகிறது, தத் விஞ்ஞாணார்தம் ஸ குரும ஏவாபிகச்செத் (மு.உ.1.2.12). நீங்கள் அதைப் பற்றி கற்பதில் மிகவும் அக்கறையுடன் இருந்தால், தத் விஞ்ஞாண. .தத் விஞ்ஞாணம், குரும ஏவாபிகச்செத் (மு.உ.1.2.12). உங்களுக்கு கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு அங்கீகரிக்கப்பட்ட குருவிடம் நீங்கள் செல்ல வேண்டும். யாரும் அக்கறைக் கொள்ளவில்லை. அதுதான் வருத்தம். காதை இயற்கையினால் இழுக்கப்பட்டும் எல்லோரும் நினைக்கிறார்கள், "நான் சுதந்திரமாக இருக்கிறேன்," என்று. ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ: (பகவத் கீதை 3.27). நீங்கள் இவ்வாறு செய்துவிட்டீர்கள், இங்கே வாருங்கள், உட்காருங்கள். இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது, ப்ரக்ருதி. அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹம இதி மன்யதே (பகவத் கீதை 3.27). போக்கிரிகள், தன்னுடைய பொய் அஹங்காரத்தால், நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், "அனைத்தும் நானே. நான் சுதந்திரமானவன்." அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்களை பகவத் கீதையில் அஹங்கார விமூடாத்மா, என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. பொய் அஹங்காரம் தடுமாற்றமடைந்து மேலும் சிந்திக்கிறது, "நான் என்ன நினைக்கிறேனோ அது சரியானதே." இல்லை, நீங்கள் உங்கள் சொந்த முறையில் சிந்திக்கக் கூடாது. கிருஷ்ணர் கூறியதைப் போல் சிந்திக்க வேண்டும், பிறகு அதுதான் நல்லது. மற்றபடி, நீங்கள் மாயாவின் தாக்கத்தால் சிந்திக்கிறீர்கள், அவ்வளவு தான். த்ரிபிர் குணமாயார் பவை மொஹித, நாபிஜானாதி மாம் எபைய: பரமவியயம். மயாத்யக்ஷெண ப்ரக்ருதி: ஸுயதே ஸசராசரம் (பகவத் கீதை 9.10). இந்த விஷயங்கள் அதில் உள்ளது. பகவத் கீதையை ஒன்று விடாமல் படியுங்கள், விதிமுறைகளை பின்பற்றுங்கள், பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மேலும் உங்களிடம், இதுவும் சரி, அதுவும் சரி என்பது இருக்கும்வரை, நீங்கள் சரியானதை செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் தவறாக வழிநடத்தப்படுவீர்கள். அவ்வளவு தான். அதுவல்ல.... கிருஷ்ணர் என்ன கூறுகிறாரோ, அதுவே சரியானது. இல்லையெனில் நீங்கள் தவறாக வழிநடத்தப்படுவீர்கள். ஆகையால் நாங்கள் இந்த மெய்யியலை அந்த முறையில் சொற்பொழிவாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். சிலவேளை, குறைவானவர்காளாக இருக்கும், ஆனால் ஏகஷ் சந்தரஸ் தமொ ஹந்தி ந சித்தர ஸஹஸ்ர. அங்கே ஒரு சந்திரன் இருந்தாலே, அது போதுமானது. பத்து இலட்சம் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம். ஆகையால் அதுதான் எங்கள் கொள்கைப் பிரச்சாரம். கிருஷ்ண தத்துவம் என்பது என்ன என்று ஒருவர் புரிந்துக் கொண்டாலே, பிறகு என்னுடைய சமயச் சொற்பொலிவுக்கு வெற்றியே, அவ்வளவு தான். எங்களுக்கு பல இலட்சத்தில் ஒளி இல்லாத நட்சத்திரங்கள் வேண்டாம். இலட்சக் கணக்கான ஒளி இல்லாத நட்சத்திரங்களால் என்ன பிரயோகம்? அதுதான் சாணக்கிய பண்டிதரின் அறிவுரை, வரம ஏக புத்ர ந சவுர்கஸதன அபி. ஒரு மகன், அவன் கற்றறிந்தவனாக இருந்தால், அதுவே போதுமானது. ந சவுர்கஸதன அபி. எல்லாம் முட்டாள்களும் அயோக்கியர்களாகவும், நூறு மகன்கள் இருந்து என்ன பிரயோகம்? ஏகஷ் சந்தரஸ் தமொ ஹந்தி ந சித்தர ஸஹஸ்ர. ஒளியூட்ட ஒரு சந்திரன் போதுமானது. இலட்சக் கணக்கில் நட்சத்திரங்கள் அவசியமில்லை. அதேபோல், நாங்கள் பல இலட்சத்தில் சீடர்களை எதிர்பார்க்கவில்லை. கிருஷ்ண தத்துவம் என்பது என்ன என்று ஒரு சீடர் புரிந்துக் கொண்டதை நான் பார்க்க வேண்டும். அதுவே வெற்றி. அவ்வளவு தான். கிருஷ்ணர் கூறுகிறார், யததாமபி ஸித்தானாம் கஸ்சின்மாம் வேத்தி தத்வத: (பகவத் கீதை 7.3) ஆகையால், முதன் முதலாக, ஸித்தாவாக வருவது மிகவும் கடினமான வேலையாகும். அதன் பிறகு, யததாமபி ஸித்தானாம் (பகவத் கீதை 7.3). இன்னமும் கடினமான வேலை இருக்கிறது. ஆகையால், கிருஷ்ணர் தத்துவம்புரிந்துக் கொள்வது சிறிது கடினம். அவர்கள் மிக இலகுவாக புரிந்துக் கொண்டாள், அது புரிந்துக் கொண்டதாகாது. அது எளிதானது, அது எளிதானது, நீங்கள் கிருஷ்ணரின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டால், அது மிகவும் எளிதானது. சிரமம் எங்குள்ளது? மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி நமஸ்குரு, எப்பொழுதும் என்னை பற்றி சிந்தித்துக் கொண்டிரு. பிறகு ஏது கஷ்டம்? நீங்கள் கிருஷ்ணரின் சித்திரத்தைப் பார்‌த்திருப்பீர்கள், கிருஷ்ணரின் ஸ்ரீமூர்த்தி, மேலும் நீங்கள் கிருஷ்ணர் என்று நினைத்தால், கஷ்டம் எங்கிருக்கிறது? எப்பொழுதும், நாம் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டிருப்போம். ஆகையால் ஏதோ ஒன்றுக்கு பதிலாக, ஏன் கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்கக் கூடாது? எங்குள்ளது கஷ்டம்? ஆனால் அவன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கிருஷ்ணரைத் தவிர, அவர் பல காரியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், மன்மனா பவ மத்பக்தோ. கிருஷ்ணர் உணர்வை ஏற்றுக் கொள்வதில் கஷ்டமே இல்லை. இல்லவே இல்லை. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், அதுதான் கஷ்டம். அவர்கள் வெறுமனே வாதாடுவார்கள். கூடக. கிருஷ்ணர் கூறுகிறார், மன்மனா பவ மத்பக்தோ, அதற்கு எதிரான விவாதம் எங்கே? நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அதாவது, அவர்கள் அநேகமாக கிருஷ்ணரைப் பற்றி நினைக்கமாட்டார்கள், அவர்கள் அநேகமாக கிருஷ்ணரைப் பற்றி சொல்லமாட்டார்கள். மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், மன்மனா பவ மத்பக்தோ. இது விவாதம், இது மெய்யியல் அல்ல. மெய்யியல் அங்குள்ளது, நேரடியாக, நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும், அவ்வளவு தான். நீங்கள் அதைச் செய்து அதன் விளைவை பெறுங்கள். நீங்கள் ஏதோ ஒன்று வாங்க செல்கிறீர்கள், அதன் விலை வரையறுக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதற்கான விலையை கொடுத்து பெற்றுக் கொள்கிறீர்கள். விவாதம் எங்கே? அந்த பொருளைப் பற்றி நீங்கள் உக்கிரமாக இருந்தால், சிலவேளை அதற்கான விலையைகொடுத்து எடுத்துக் கொள்ளலாம். அதுதான் ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் அறிவுரை. கிருஷ்ண-பக்தி ரஸ-பாவிதா-மதி க்ரியதாம் யதி குதொபி லப்யதெ. கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையை எங்கேயாவது வாங்க முடிந்தால், கிருஷ்ண-பக்தி ரஸ-பாவிதா-மதி. அதைத் தான், நாங்கள் "கிருஷ்ணர் உணர்வு" என்று மொழிமாற்றம் செய்தோம். உங்களால் இந்த உணர்வை எங்கேயாவது, வாங்க முடிந்தால், கிருஷ்ணர் உணர்வு, உடனடியாக அதை வாங்கிவிடுங்கள். கிருஷ்ண-பக்தி ரஸ-பாவிதா-மதி க்ரியதாம், சும்மா கொள்முதல் செய்யுங்கள், யதி குதொபி லப்யதெ அது எங்கேயாவது கிடைத்தால். மேலும் நான் வாங்க வேண்டும் என்றால், என்ன விலை? தத்ர லௌலியம் ஏகம் மூலம். ந ஜென்ம-கொதிபி: லப்யதெ. உங்களுக்கு வேண்டும் என்றால் என்ன விலை, அதன் விலை உங்ளுடைய ஆர்வம் என்று அவர் கூறுகிறார். மேலும் அதைப் பெறக்கூடிய அந்த ஆர்வம், பல இலட்சம் பிறவிகள் எடுக்கும். உங்களுக்கு ஏன் கிருஷ்ணர் வேண்டும்? எவ்வாறு என்றால் அன்றொரு நாள் நான் கூறியது போல் அதாவது ஒருவர் கிருஷ்ணரைப் பார்த்திருந்தால், அவர் கிருஷ்ணரை நினைத்து பைத்தியமாவார். அதுதான் அறிகுறி.