TA/Prabhupada 0243 - ஒரு சிஷ்யன் குருவிடம் ஞானஒளி பெறுவதற்காக வருகிறான்



Lecture on BG 2.9 -- London, August 15, 1973

பிரத்யும்னன்: மொழிபெயர்ப்பு, "சஞ்சயர் கூறினார்: "இவ்வாறு கூறி, எதிரிகளை தண்டிப்பவர், அந்த அர்ஜுனன், கிருஷ்ணரிடம் கூறினான், "கோவிந்தா நான் சண்டையிடப்போவதில்லை" என்று கூறிவிட்டு அமைதியாக நின்றான்."." பிரபுபாதர்: முந்தைய பதத்தில், இந்த சண்டையில் எந்த இலாபமும் இல்லை, ஏனென்றால் எதிர் கட்சியில் இருப்பவர்கள் என்னுடைய உறவினர்கள், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை கொன்று நான் வெற்றி பெற்றாலும், அதனால் என்ன மதிப்பு இருக்கும்?" என அர்ஜுனர் கூறியிருந்தார். இப்படிப்பட்ட துறவறம் சிலசமயம் அறியாமையால் ஏற்படும், என்பதை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். வாஸ்தவத்தில் அது அறிவார்ந்த தீர்வல்ல. ஆக இவ்வாறு, ஏவம் உக்த்வா, "ஆக சண்டையிடுவதில் எந்த நன்மையும் இல்லை," ஏவம் உக்த்வா, "என்று கூறி", 'ஹ்ருஷீகேஷம்', அவர், புலன்களை ஆளும் முழுமுதற் கடவுளிடம் பேசுகிறார். மேலும் முந்தைய பதத்தில், ஷிஷ்யாஸ் தே அஹம் ப்ரபன்னம் : (பகவத் கீதை 2.7) "நான் தங்களிடம் ஒரு சீடனாக சரணடைகிறேன்," என அவர் கூறியிருந்தார். ஆக கிருஷ்ணர் குரு ஆகிறார் மற்றும் அர்ஜுனர் சீடர் ஆகிறார். முன்பு இருவரும், நண்பர்களாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நட்பார்ந்த உரையாடலால் கம்பீரமான கேள்விகளுக்கு தீர்வு காண முடியாது. விஷயம் கம்பீரமாக இருந்தால், அதற்கு தீர்வு காண, அதில் தெளிவான ஞானமுள்ள அதிகாரிகளுக்கு இடையே தான் பேச்சுவார்த்தை நடக்கவேண்டும். ஆக ஹ்ருஷீகேஷம், இதை நான் பல முறை விளக்கியிருக்கிறேன். ஹ்ருஷீக என்றால் புலன்கள், மற்றும் ஈஷ என்றால் ஆள்பவர். ஹ்ருஷீக-ஈஷ, இரண்டையும் சேர்த்தால் ஹ்ருஷீகேஷ. அதுபோலவே அர்ஜுனரும், குடாக ஈஷ. குடாக என்றால் இருள் மற்றும் ஈஷ... இருள் என்றால் அறியாமை. அஞான-திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன-ஷலாகயா சக்ஷுர்-உன்மிளிதம் யேன தஸ்மை ஸ்ரீ-குருவே நமஹ. குருவின் கடமை என்னவென்றால்... ஒரு சிஷ்யன் குருவிடம் செல்வதன் நோக்கம், மெய்ஞானத்லில் தெளிவை பெறுவதற்கு தான். எல்லாருமே முட்டாள்களாகத் தான் பிறக்கின்றோம். அனைவருமே. மனிதனும் தான், ஏனென்றால், பல ஜென்மங்களாக மிருக இனத்தில் பிறந்தபிறகு தானே மனித பிறவியை பெறுகிறான். ஆக அதே பிறப்பு தான், அறியாமையும் மிருகங்களைப் போல் தான். எனவே, அவன் மனிதனாகவே இருந்தாலும் அவனுக்கும் கல்வி தேவை. மிருகத்தினால் கல்வியை கற்க இயலாது, ஆனால் மனிதனால் முடியும். எனவே சாஸ்திரம் கூறுகிறது, 'நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே வித்-புஜாம் யே' (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1). நான் இந்த வரியை பலமுறை குறித்திருக்கிறேன், அதாவது... மனிதனைவிட தாழ்ந்த பிறவிகளில், நாம் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதுவும் வெறும் வாழ்க்கையின் நான்கு அடிப்படை தேவைகளுக்காக: அதாவது உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தற்காத்துக் கொள்வது. புலன் இன்பம். வாழ்க்கையின் மையமே புலன் இன்பம் தான். ஆகவே எல்லோரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் மனித பிறவியில், கிருஷ்ணர் நமக்கு இவ்வளவு வசிதகளை, அறிவாற்றலை வழங்கியிருக்கிறார். நம்முடைய வாழ்க்கை தரத்தை நாம் வசதியாக அமைத்துக் கொண்டால் பரவாயில்லை, ஆனால், கிருஷ்ண உணர்வில் பக்குவ நிலையை அடையும் நொக்கத்துடன். வசதியாக வாழுங்கள். பரவாயில்லை. ஆனால் விலங்குகளை போல், வெறும் புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்காக மட்டுமே வாழாதீர்கள். வாழ்க்கையை வசதியாக எப்படி வாழ்வது, என்பதற்காக மனிதன் முயன்று வருகிறான், அனால் அவர்கள் லட்சியம் வெறும் புலன் இன்பம் தான். நவீன நாகரீகத்தின் தவறு இது தான். யுக்தாஹார-விஹாரஸ் ச யோகோ பவதி ஸித்திஹி. பகவத் கீதையில் யுக்தாஹார என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மை தான், உண்ண வேண்டியது தான், உறங்க வேண்டியது தான், புலன்களை மகிழ வைப்பது தேவை தான், பாதுகாப்பு தேவை தான் - ஆனால் முடிந்தவரை கவனத்தை அதில் அளவுக்கதிகமாக செலுத்தாமல் இருக்கவேண்டும். நாம் உண்ண வேண்டியது தான், யுக்தாஹார. அது நிஜம் தான். ஆனால் அத்யாஹாரம் கூடாது. ரூப கோஸ்வாமி, தனது உபதேசாம்ருதம் என்ற நூலில் அறிவுரை வழங்குகிறார், அத்யாஹாரஹ ப்ரயாஸஸ் ச ப்ரஜல்போ நியமாக்ரஹஹ லௌல்யம் ஜன-ஸங்கஸ் ச ஷட்பிர் பக்திர் வினஷ்யதி (உபதேஷாம்ருதம் 2) நீ உன் ஆன்மீக உணர்வில் முன்னேற நினைத்தால் - ஏனென்றால் அது தான் வாழ்க்கையின் ஒரே நோக்கம் - பிறகு நீ அளவுக்கதிகமாக உண்ணக் கூடாது, அத்யாஹாரஹ, அதாவது எதையும் அதிகமாக சேர்க்கக்கூடாது. அத்யாஹாரஹ ப்ரயாஸஸ் ச ப்ரஜல்போ நியமாக்ரஹஹ. அது தான் நமது தத்துவம்.