TA/Prabhupada 0251 - கோபியர்கள் கிருஷ்ணரைச் சேர்ந்த நித்தியமாணவர்கள்



Lecture on BG 2.6 -- London, August 6, 1973

அக பகவத் கீதையின் உபதேசத்தின் மொத்த சாரமும் என்னவென்றால்: நீங்கள் சுய திருப்திக்காக செயல்படக் கூடாது; கிருஷ்ணருக்காக மட்டும் செயல்பட வேண்டும். அக போர் புரிவதும் கிருஷ்ணருக்காக, அல்லது அதைவிட வெறுக்கத்தக்க செயலாக இருந்தாலும் சரி, கிருஷ்ணருக்காக செய்ய தயாராக... கோபியர்களைப் போல் தான். கோபியர்கள் கிருஷ்ணரால் முற்றிலும் கவரப்பட்டிருந்தனர். கிருஷ்ணர் மிகவும் அழகான ஒரு குமரனாக இருந்தார், மற்றும் கோபியர்களோ இளம் பெண்கள். அது வெளித்தோற்றம்... உண்மையில், கோபியர்கள் கிருஷ்ணரின் நிரந்தர துனைமையர்கள். ஆனந்த-சின்மய-ரச-ப்ரதிபாவிதாபிஹி (ப்ரஹ்ம சம்ஹிதா 5.37). அவர்கள் கிருஷ்ணரின் விரிவங்கங்கள், அவர்கள் கிருஷ்ணரின் இன்பாற்றலின் விரிவங்கங்கள். கிருஷ்ணருக்கு இன்பம் அளிப்பதே அவர்களது வாழ்வின் நோக்கம். அவர்கள் சாதாரண பெண்கள் அல்ல. ஆனால் அனைத்தையும் பணையம் வைத்து கிருஷ்ணரை நேசிப்பது எப்படி என்பதை, வெறும் வெளியுலகத்திற்கு உணர்த்துவதற்காக, நமக்குக் கற்பிப்பதற்காக... எனவே கோபியர்கள், நடு இரவில் கிருஷ்ணரால் ஈர்க்கப்பட்ட போது... கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார். அவர்களும் அதை கேட்டு, ஈர்க்கப்பட்டு, தம் வீட்டை விட்டு சென்றார்கள். சிலர் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தம் உயிரை கொடுக்கவும் தயங்கவில்லை. அவர்கள் அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தனர். இப்படிப்பட்ட நடத்தை இளம் பெண்களுக்கு... வேத பண்பாட்டின்படி, அவர்கள் தம் தந்தையின் அல்லது கணவனின் அல்லது சகோதரனின் பாதுகாப்பில்லாமல் வெளியே போகக் கூடாது. கூடாது, அவர்கள் போகக் கூடாது, அதுவும் நடு இரவில் போகவே கூடாது. ஆக இது வேத கொள்கைக்கு விரோதமானது. அது வெளிப்படையாகவே ஒரு வகையான விபச்சாரமாகும். ஆனால் அது கிருஷ்ணருக்காகச் செய்யப்பட்டதால், பகவான் சைதன்ய மஹாபிரபு இவ்வாறு பரிந்துரைக்கிறார், ரம்யா காசித் உபாசனா வ்ரஜ-வதுபிஹி கல்பிதா: "வ்ரஜ கோபியர்கள் பாவித்த வழிபாட்டு முறையைவிட சிறந்தது வேறு எதுவும் கிடையாது." வ்ரஜ-வது. மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு இளம் பெண் தன் கணவரின், தந்தையின் பாதுகாப்பை விட்டு மற்றொரு இளைஞனிடம் செல்வது என்பது வேத கலாச்சாரத்தின்படி, மிகவும் கண்டனத்திற்குரியது. இருந்தாலும், கிருஷ்ணரின் திருப்தி மட்டுமே அச்செயலின் நோக்கமாக இருந்ததால், அது மிகச்சிறந்த வழிபாடு என்று ஏற்கப்பட்டுள்ளது. அது தான் கிருஷ்ண உணர்வு. எப்படி கிருஷ்ணருக்காக மட்டுமே செயல்பட வேண்டும், கிருஷ்ணரிடம் மட்டுமே எப்படி அன்பு செலுத்த வேண்டும், என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் வாழ்க்கை வெற்றிகரமாக இருந்ததாக அர்த்தமாகும். மேலும் மனித வாழ்க்கை... பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நாமும் வைகுண்டத்திலிருந்து தான் வந்தோம். அநாதி கரம-ஃபலே. அநாதி என்றால் படைப்பிற்கு முன்பு. உயிர்வாழிகளான நாம் நித்தியமானவர்கள். இந்த மொத்த ஜட படைப்பும் பல கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் அழிந்துவிடும், ஆனால் ஆன்மாவான உயிர்வாழிகள் நாம் அழிவதில்லை. ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20). அவை தொடர்ந்து இருக்கும். ஆக இந்த முழு அண்ட சராசரமும் அழிந்தபிறகு, உயிர்வாழிகள் விஷ்ணுவின் திருமேனியில் அடைக்கலம் பெறுகின்றன. பின்னர் மீண்டும் படைப்பு நடக்கும்போது, அவை மீண்டும் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற வெளியேறுகின்றன. கடவுளிடம், அவரது திருவீட்டிற்கு எப்படி திரும்பிச் செல்வது என்பது தான் உண்மையான ஆசை. எனவேதான் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆக இந்த வாய்ப்பை, இந்த மனித பிறவியை தவறாகப் பயன்படுத்தினால், அது மிக, மிக ஆபத்தானது. மீண்டும் நாம், பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியை ஏற்க வேண்டி வரும். அது மட்டும் இல்லை, நாம் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற தவறினால், பின்னர் மீண்டும் முழு படைப்பின் அழிவும் ஏற்படும் மற்றும் நாம் பல கோடிக்கணக்கான வருட காலம் வரை விஷ்ணுவின் திருமேனிக்குள் தங்க வேண்டிவரும். மீண்டும் நாம் இங்கு வர வேண்டியிருக்கும். எனவே இது அநாதி கரம-ஃபலே என்று அழைக்கப்படுகிறது. அநாதி என்றால் "படைப்புக்கு முன்," என்று அர்த்தம். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அறிவற்ற உயிர்வாழிகளுக்கு கற்பிக்கக் கிருஷ்ணரே நேரடியாக வருகிறார். கிருஷ்ணர் மீண்டும் தனது திருவீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார். ஏனென்றால் நாம் அனைவரும் கிருஷ்ணரின் அம்சங்கள். ஒருவேளை உங்கள் மகன் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், உங்களுக்கு கவலையாக இருக்காதா, அதாவது, "ஓ, ஏதாவது விபத்து நடந்துவிடப் போகிறதே. பாவம் என் பையன் உயிரிழந்து விடுவானே." எனவே நீங்கள் சென்று அவனை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அதுபோலவே தான் கிருஷ்ணரின் நிலைமையும். நாம் இந்த பௌதிக உலகில் ஜென்மம் ஜென்மமாக, மீண்டும் மீண்டும் அவதி பட்டு வருகிறோம். துக்காலயம் அஷாஷ்வதம் (பகவத் கீதை 8.15). இந்த இடம் துன்பம் நிறைந்தது. ஆனால் மாயையின் ஜாலத்தால், நாம் இந்த பரிதாபத்திற்குறிய நிலையை, மகிழ்ச்சியான வாழ்க்கை என்று கருதுகிறோம். இது தான் மாயை. ஆனால் அது... இந்த பௌதிக உலகில் மகிழ்ச்சி ஏதும் இல்லை. எல்லாம் துயரம் தான். இந்த பௌதிக உலகில் அனைத்தும் மோசமானது என்று எவ்வளவு சீக்கிரமாக நாம் புரிந்து கொள்கிறோமோ, எவ்வளவு விரைவாக நாம் இந்த பௌதிக உலகை விட்டு, மீண்டும் இறைவனின் திருவீட்டிற்குச் செல்லத் தயார் ஆகிறோமோ…,அது தான் புத்திசாலித்தனம். இல்லையெனில், நாம் என்ன செய்தாலும் அது நமக்கு தோல்வி தான். ஏனென்றால் நாம் நம் இலக்கையே தவறிவிடுகிறோம். ந தே விதுஹு ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31). துராஷயா. நாம், வீண் நம்பிக்கை வைத்திருக்கிறோம் – அது ஒருபோதும் நிறைவேறாது- நாம் இங்கு இறையுணர்வு இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்காக நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிலைமையை சரிகட்ட முயல்கிறோம். அது ஒருபோதும்... ந தே விதுஹு ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா. துராஷயா என்றால் "என்றும் நிறைவேற முடியாத நம்பிக்கை".