TA/Prabhupada 0266 - கிருஷ்ணா, ஒரு கட்ட பிரமச்சாரி



Lecture on BG 2.10 -- London, August 16, 1973


பிரபுபாதர்: ஆகையால் பீஷ்மதேவர், ராஜாசூய-யக்ஞாவில், ஒப்புக் கொண்டார் அதாவது "கிருஷ்ணரைவிட சிறந்த பிரமச்சாரி வேறு யாருமில்லை. அவர் கோபியர்களுக்கு நடுவில் இருந்தார், அனைவரும் இளம் பெண்கள், ஆனால் அவர் ஒரு பிரமச்சாரியாகவே இருந்தார். நான் அந்த கோபியர்களுக்கு நடுவில் இருந்திருந்தால், எனக்குத் தெரியாது அது, என் நிலைமை என்னவாகியிருக்கும் என்று." ஆகையினால், கிருஷ்ணர் குற்றமற்ற பிரமச்சாரி, ஹிருஷிகேஷ. ஆனால் இந்த அயோக்கியர்கள் அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள் அதாவது கிருஷ்ணர் நெறியற்றவர் என்று. இல்லை. கிருஷ்ணர் குற்றமற்ற பிரமச்சாரி ஆவார். “தீர”. தீர என்றால் கிளர்ச்சி அடையக் கூடிய காரணம் இருப்பினும் கலவரம் அடையாதவர். ஆகையால் கிருஷ்ணர் இது போன்ற ஒரு சிறந்த பிரமச்சாரி. இருந்த போதிலும்... அவருடைய, யௌவனப் பருவம் நெருங்கும் நேரத்தில், 15, 16 வயதில், அனைத்து கிராமத்துப் பெண்களும் நண்பர்களாக இருந்தார்கள், அவர்கள் கிருஷ்ணரின் அழகால் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் கிராமத்தில் நடனம் ஆடுவதற்காக கிருஷ்ணரிடம் வழக்கமாக வருவார்கள். ஆனால் அவர் பிரமச்சாரியாவார். கிருஷ்ணர் முறைகேடான உடலுறவு கொண்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இல்லை. அது போன்ற வருணனை இல்லை. நடனம் புரிதல் ஒரு வருணனை, ஆனால் கருத்தடை மாத்திரைகள் இல்லை. அது இங்கு வருண்னிக்கப்படவில்லை. ஆகையினால் அவர் ஹிருஷிகேஷ: . ஹிருஷிகேஷ: என்றால் குற்றமற்ற (கட்ட) பிரமச்சாரி. விகார-ஹெது, கவலையை ஏற்படுத்தக் கூடிய காரணங்கள் இருந்தாலும், அவர் கவலையுறமாட்டார். அது தான் கிருஷ்ணர்.

அவருக்கு ஆயிரம் ஆயிரமாக பக்தர்கள் இருக்கிறார்கள், மேலும் சில பக்தர்கள், கிருஷ்ணரை காதலனாக விரும்பினால், கிருஷ்ணர் அதை ஏற்றுக் கொள்கிறார், ஆனால் அவருக்கு வேறு யாரும் தேவையில்லை. அவருக்கு தேவையில்லை. அவர் தன்னிறைவு உள்ளவர். அவருடைய புலன்நுகர்வுக்கு யாருடைய உதவியும் அவருக்கு தேவையில்லை. ஆகையினால் கிருஷ்ணர் ஹிருஷிகேஷ: ஆவார், புலன்களின் எஜமானர். ஆகையால் கிருஷ்ணரின் பக்திர்கள் மாத்திரம்... கிருஷ்ணரின் பக்தர்கள் பல சந்தர்பங்களில், அவர்களும் கூட... ஏன் பல? ஏறக்குறைய அனைத்து பக்தர்களும், அவர்கள் புலன்களின் எஜமானர், .கோஸ்வாமீ. எவ்வாறு என்றால் ஹரிதாஸ் தாகூர் போல், உங்களுக்கு தெரியும். ஹரிதாஸ் தாகூர் ஒரு வாலிபன், மேலும் சிற்றூரின் ஜமீன்தார், அவர் ஓர் முகமதியர். ஆகையால் அனைவரும் ஹரிதாஸ் தாகூரை புகழ்ந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள், எவ்வளவு அபாரமான பக்தர் என்று. ஆகையால் ஜமீன்தார், சிற்றூரின் ஜமீன்தார், அவர் மிகவும் பொறாமை கொண்டார். ஆகையால் அவர் ஒரு விலைமாதை ஹரிதாஸ் தாகூரை மாசுபடுத்த பணியில் அமர்த்தினார். மேலும் அவர் நடு இரவில் அழகாக உடை அணிந்து, கவர்ச்சியாக வந்தாள். அவள் இளமையாகவும், அழகாகவும் இருந்தாள். அவள் முன்மோழிந்தாள் அதாவது "உங்கள் அழகில் ஈர்க்கப்பட்டு, நான் வந்திருக்கிறேன்." ஹரிதாஸ் தாகூர் கூறினார், "அப்படியா, அதனால் பரவாயில்லை. வா, உட்காரு. என்னுடைய உச்சாடனத்தை முடிக்கவிடு. பிறகு நாம் அனுபவிப்போம்." ஆகையால் அவள் கீழே உட்கார்ந்தாள். ஆனால் ஹரிதாஸ் தாகூர் உச்சாடனம் செய்துக் கொண்டிருந்தார், அவர் உச்சாடனம் செய்துக் கொண்டிருந்தார். நாம், நம்மால் பதினாறு சுற்று கூட உச்சாடனம் செய்ய முடியவில்லை, ஆனால் அவர் மூன்று மடங்கு அறுபத்து நான்கு சுற்று உச்சாடனம் செய்துக் கொண்டிருந்தார். அது எத்தனை?

ரேவதினந்தன: 196.

பிரபுபாதர்: 196 சுற்று. அதுவே அவருடைய ஒரே வேலை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண..... இதனால் சில சமயத்தில் சிலபேர் ஹரிதாஸ் தாகூரைப் போல் இருக்க முயன்றார்கள். அது சாத்தியமல்ல. ஆகையால் ஹரிதாஸ் தாகூர், அது காலை ஆனதும் , அந்த விலைமாது, "ஐயா, இப்போது காலையாகிவிட்டது." "ஆம், அடுத்த இரவு நான் கண்டிப்பாக... அடுத்த இரவு வரவும். இன்று என் உச்சாடனதை என்னால் முடிக்க முடியவில்லை." அது ஒரு வேண்டுகோள். இவ்வாறாக மூன்று தினங்கள் கடந்தன. பிறகு அந்த விலைமாது மனமாறினார், அவருடைய காலில் விழுந்து..., "ஐயா, நான் உங்களை மாசுபடுத்த வந்தேன். இப்போது என்னை காபாற்றுங்கள், நான் தாழ்வானவள்." அதனால் ஹரிதாஸ் தாகூர் கூறினார் "ஆம், எனக்கு அது தெரியும். நீ வந்தபோது நான் உடனடியாக இந்த இடத்தைவிட்டு போய் இருக்கலாம், ஆனால் நீ என்னிடம் வந்ததினால் நான் விரும்புவது, உன்னை ஒருவேளை வைணவதிற்கு மாற்றலாம் என்று." ஆகையால் அந்த விலைமாது, கருணையால் அபாரமான பக்தை ஆனார்... ஹரிதாஸ் தாகூர் கூறினார் "நீ இந்த இடத்தில் உட்கார்ந்துக்கொள். நீ இந்த துளசி செடிக்கு முன் உட்கார்ந்து ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய். இப்போது நான் இந்த இடத்தை விட்டுச் செல்கிறேன்."