TA/Prabhupada 0267 - வ்யாசதேவ் சொன்னார், கிருஷ்ணர் யார் என்று
Lecture on BG 2.10 -- London, August 16, 1973
ஆகையால் கிருஷ்ண-பக்தி அவ்வாறு தான். புலன்களின் முழு கட்டுப்பாடு. கிருஷ்ணருக்கு புலன்களின் மீது முழு கட்டுப்பாடு இருக்கிறது, அதேபோல், உண்மையிலேயே கிருஷ்ண பக்தர்களாக இருப்பவர்களுக்கும் முழுமையான புலன் கட்டுப்பாடு இருக்கிறது. ஹிருஷிகேஷ:. யமுனசாரிய போல். அவர் வணங்கிக் கொண்டிருக்கிறார், அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
யதாவதி மம சேத: க்ருஷ்ண பாதாரவிந்தே, நவ நவ ரஸ தாமனுத்யத ரந்துமாஸீத்
கிருஷ்ணரின் திருக்கமலப் பாதங்களில் புகலிடம் அடைந்த பின்னர், நான் உன்னத மகிழ்ச்சியை உணர ஆரம்பித்ததால்.
யதாவதி மம சேத: க்ருஷ்ண பாதாரவிந்தே, கிருஷ்ண பாதாரவிந்தே
கிருஷ்ணரின் திருக்கமலப் பாதங்கள். என்னுடைய மனம், என்னுடைய இதயம், கிருஷ்ணரின் திருக்கமலப் பாதங்களால் ஈர்க்கப்பட்டதால்.
ததாவதி பத நாரீ ஸங்கமே
அன்று முதல், காம சுகத்தைப் பற்றி எண்ணியவுடன்.
பவதி முக விகார
நான் அருவருப்பால் காறி துப்புகின்றேன். இதுதான் கிருஷ்ண-பக்தி. கிருஷ்ண-பக்தி அத்தகையது. பக்தி.
பரசாநுபவ-விரக்திர் அந்யத்ர ஸ்யாத் (SB 11.2.42)
இந்த பௌதிக உலகின் மிகுந்த வசீகரமான அம்சம் உடலுறவாகும். அதுதான் பௌதிக வாழ்க்கையின் அடித்தளம். இந்த மக்கள் அனைவரும் இரவு பகலாக கடினமாக உழைப்பது அந்த உடலுறவு இன்பத்திற்க்காகத்தான்.
யன மைத்துனாடி-குருஹ...
அவர்கள் அதிகமான ஆபத்தை எதிர் கொள்கிறார்கள். அவர்கள் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள், கர்மிகள், அவர்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சி என்ன? வாழ்க்கையின் மகிழ்ச்சி உடலுறவு தான்.
யன மைத்துனாடி- க்ரஹமெதி-சுகம் ஹி துச்சம்
மிகவும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகள், ஆனால் அதுதான் அவர்களுடைய மகிழ்ச்சி. இதுதான் பௌதிக வாழ்க்கை. ஆனால் கிருஷ்ணர் அதுபோன்று அல்ல. ஆனால் இந்த போக்கிரிகள், சித்திரரங்களுக்கு வர்ணம் தீட்டுகிறார்கள், மேலும் அந்த சித்திரங்கள் மிகுந்த பாராட்டு பெறுகிறது, அதாவது கிருஷ்ணர் கோபியர்களைத் தழுவிக் கொண்டிருக்கிறார். யாரோ என்னிடம் அதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்...கடைசியாக... யார் வந்தது? அந்த கிருஷ்ணர் சித்திரம். ஆனால் கிருஷ்ணர் புதனாவைக் கொன்றார், அந்த சித்திரத்தை அவர் சித்தரிக்கமாட்டார்காள், அல்லது கம்ஸனைக் கொன்றது, அல்லது... கிருஷ்ணரைப் பற்றி பல சித்திரங்கள் உள்ளன. இந்த சித்திரங்களை அவர்கள் செய்யமாட்டார்கள், ஓவியர்கள். அவர்கள் வெறுமனே சித்திரம் தீட்டுவார்கள், கோபியர்களுடனான அவருடைய அந்தரங்கமான நடவடிக்கைகளை. கிருஷ்ணரைப் புரிந்துக் கொள்ள முடியாத ஒருவர், கிருஷ்ணர் என்றால் என்ன, ஒன்பதாம் காண்டத்தில் கிருஷ்ணர் என்றால் என்ன என்று வியாசதேவரால் விவரிக்கப்பட்டுள்ளது, கிருஷ்ணரைப் புரிந்துக் கொள்வதற்காக, அதன் பிறகு பத்தாம் காண்டத்தில் அவர் கிருஷ்ணரின் பிறப்பின் வருகையைப் பற்றி ஆரம்பிக்கிறார். ஆனால் இந்த போக்கிரிகள், அவர்கள் உடனடியாக ராஸ-லீலாவிற்கு தாவி சென்றுவிட்டார்கள். முதலில் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளுங்கள். எவ்வாறு என்றால், நீங்கள் ஒரு பெரிய மனிதரின் நண்பரானால், முதலில் அவரை புரிந்துக் கொள்ள முயளுங்கள். பிறகு நீங்கள் அவருடைய குடும்ப விவகாரம் அல்லது அந்தரங்கமான காரியங்களை புரிந்துக் கொள்ள முயற்ச்சிப்பீர்கள். ஆனால் இந்த மக்கள் ராஸ-லீலாவிற்கு தாவி சென்றுவிட்டார்கள். மேலும் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள். மேலும் அதனால் அவர்கள் சில சமயங்களில் கூறுகிறார்கள், "கிருஷ்ணர் நெறியற்றவர்." கிருஷ்ணர் எவ்வாறு நெறியற்றவர் ஆவார்? ஏற்றுக் கொள்வதால், கிருஷ்ணர் பெயரை ஜெபிப்பதால், நெறியற்றவர்கள் அறநெறி உடையவர்களாக ஆகிறார்கள், அவ்வாறு இருக்க கிருஷ்ணர் நெறியற்றவர். சும்மா அவர்களுடைய அறியாமையை பாருங்கள். வெறுமனே கிருஷ்ணர் பெயரை ஜெபிப்பதால், அனைத்து நெறியற்றவர்கள் அறநெறி உடையவர்களாக ஆகிறார்கள். இருந்தும் கிருஷ்ணர் நெறியற்றவர். மேலும் இது ஒரு போக்கிரி பேராசிரியரால் பேசப்பட்டது.