TA/Prabhupada 0271 - கிருஷ்ணரின் பெயர் அச்யுதர். அவர் வீழ்ச்சி அடைவதில்லை



Lecture on BG 2.7 -- London, August 7, 1973

ஆகையால் அதன் தரம் ஒன்றே, ஆனால் அதன் அளவு வேறுபட்டது. ஆகையால் தரம் ஒரே மாதிரியாக இருப்பதால், பகவானுக்கு இருக்கும் அனைத்து இயற்கையான மனப்பாங்கும் நமக்கும் இருக்கிறது, கிருஷ்ணருக்கு இருப்பது போல். கிருஷ்ணருக்கு ஸ்ரீமதி ராதாராணியிடம் அவருடைய மகிழ்ச்சியான ஆற்றல், அன்பான இயற்கையான மனப்பாங்கு இருக்கிறது. அதேபோல், நாம் கிருஷ்ணரின் அங்க உறுப்பாக இருப்பதால், நமக்கும் இந்த மகிழ்ச்சியான ஆற்றல் இருக்கிறது. ஆகையால் இதுதான் ஸ்வபாவ. ஆனால் நாம் இந்த பௌதிக இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் போது... இந்த பௌதிக இயற்கையுடன் தொடர்பு கொள்ள கிருஷ்ணர் வருவதில்லை. ஆகையினால், கிருஷ்ணரின் பெயர் அச்யுதர். அவர் தாழ்வை அடைவதில்லை. ஆனால் நாம் சரிந்து தாழ்வை அடைய வாய்ப்புள்ளது, கீழ் இருக்க.


ப்ரக்ருதெ: க்ரியமாணானி நாம் இப்போது ப்ரக்ரூத்தியின் பாதிப்பின் கீழ் இருக்கிறோம்.


ப்ரக்ருதெ க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ (பகவத் கீதை 3.27)


நாம் ப்ரக்ரூத்தியின் பிணைப்பில் நிலைத்தவறிய உடனேயே, பௌதிக இயற்கை, அப்படியென்றால்... ப்ரக்ரூத்தி மூன்று தரத்தில் உருவாக்கப்பட்டது, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகையால் நாம் ஒரு குணத்தை கைப்பற்றுகிறோம். அதுதான் காரணம், காரணம்


குண-ஸங்கோ (பகவத் கீதை 13.22)


குண-ஸங்கோ. அப்படியென்றால் வேறுபட்ட தரத்துடன் இணைந்துக் கொள்வது. குண-ஸங்க அஸ்ய ஜீவஸ்ய, உயிர்வாழி உடையது. அதுதான் காரணம். ஒருவர் கேட்கலாம்: "உயிர்வாழி, பகவானைப் போல் சிறந்தவர்களா? ஏன் ஒரு உயிர்வாழி நாயாக, மேலும் மற்றொரு உயிர்வாழி பகவானாக, தேவராக, ப்ரமாவாக ஆகிறார்கள்?" இப்பொழுது இதன் பதில் காரணம். இதன் காரணம் குண-ஸங்க அஸ்ய. அஸ்ய ஜீவஸ்ய குண-ஸங்க. ஏனென்றால் அவர் ஒரு குறிப்பட்ட குணத்தோடு இணைந்துக் கொள்கிறார். சத்வ-குண, ரஜொ-குண, தமொ-குண. ஆகையால் இந்த விபரங்கள் மிகவும் தெளிவாக உபநிஷத்தில் வர்ணிக்கப்பட்துள்ளது, குண-ஸங்க எவ்வாறு செயல்படுகிறது என்று. எவ்வாறு என்றால் நெருப்பைப் போல். அங்கே தீப்பொறி உள்ளது. சில நேரங்களில் தீப்பொறி நெருப்பிலிருந்து கீழே விழுந்துவிடும். இப்போது தீப்பொறி கீழே விழுவதில் அங்கே மூன்று நிபந்தனைகள் உள்ளன. தீப்பொறி காய்ந்த புல்லில் விழுந்தால், அது உடனடியாக தீப்பற்றிவிடும், காய்ந்த புல்லில். தீப்பொறி சாதாரண புல்லில் விழுந்தால், அது சிறிது நேரம் எரிந்து, பிறகு மறுபடியும் தணிந்துவிடும். ஆனால் தீப்பொறி தண்ணீரில் விழுந்தால், அது உடனடியாக தணிந்துவிடும், தீ உட்கோள்ளும் தரம். ஆகையால், சத்வ-குணத்தால் கைப்பற்றப்பட்டவர்கள், சத்வ-குண, அவர்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு அறிவு உள்ளது. பிராமணர் போல். மேலும் ரஜொ-குணத்தால் கைப்பற்றப்பட்டவர்கள், அவர்கள் பௌதிக் செயல்களில் மும்முரமாக இருப்பார்கள். மேலும் தமொ-குணத்தால் கைப்பற்றப்பட்டவர்கள், அவர்கள் சோம்பேறிகளாகவும் தூங்குமூஞ்சியாகவும் இருப்பார்கள். அவ்வளவுதான். இவைகள்தான் அறிகுறி. தமொ-குண என்றால் அவர்கள் சோம்பேறிகளாகவும் தூங்குமூஞ்சியாகவும் இருப்பார்கள். ரஜொ-குண என்றால் மிகவும் சுறுசுறுப்பான, ஆனால் குரங்கைப் போல் சுறுசுறுப்பு. எவ்வாறு என்றால் குரங்கு மிகவும் சுறுசுறுப்பானது, ஆனால் அவைகள் எல்லாம் ஆபத்தானது. இயன்றவரை அது... குரங்குகள், செயலற்று இருப்பதை நீங்கள் பார்க்க முடியாது. எப்பொழுதெல்லாம் உட்காருகிறதோ, அது "கத் கத் கத் கத்", என்று சத்தமிடும்.