TA/Prabhupada 0272 - பக்தி நித்தியமானது



Lecture on BG 2.7 -- London, August 7, 1973

ஆகையால் இவைகள் தான் நடவடிக்கைகள், முட்டாள்தனமான நடவடிக்கைகள். ஆனால் ஒருவர் நற்குனத்துடன் இருக்கும் போது, அவர் நிதானமாக இருப்பார். வாழ்க்கையின் மதிப்பு என்ன, ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் அவரால் புரிந்துக் கொள்ள முடியும், வாழ்க்கையின் நோக்கம் என்ன, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன. அந்த வாழ்க்கையின் குறிக்கோள் பிரமனைப் புரிந்துக் கொள்வது.


ப்ரம ஞானாதீதி பிராமணா


ஆகையினால் நல்ல தன்மை என்றால் பிராமண. அதேபோல், க்ஷத்ரிய. ஆகையால் அவர்கள் குண-கர்ம-விபாகச:. குணா, குணா கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. ஆகையினால் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.


சதுர் வார்ணயம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகச (பகவத் கீதை 4.13)


நாம் சில வகையான குணங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அது மிகவும் கடினம். ஆனால் நாம் உடனடியாக அனைத்து குணங்களையும் கடந்து செல்லலாம். உடனடியாக. எவ்வாறு? பக்தி யோகா செயல்முறையால்.


ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம- பூயாய கல்பதே (பகவத் கீதை 14.26)


நீங்கள் பக்தி-யோக செயல்முறையை ஏற்றுக் கொண்டால், பிறகு நீங்கள் மேலும் பாதிப்பு அடையமாட்டீர்கள் இந்த தரத்தின் யாதேனும் ஒன்றால், நற்குணம், பற்று மேலும் அறிவின்மை. அதுவும் . பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.


மாம் ச அவ்யபிசாரினீ பக்தி-யோகேன ஸெவதே


கிருஷ்ணரின் பக்தி தொண்டில் ஈடுபட்டிருக்கும் எவரும்,


அவ்யபிசாரினீ (பகவத் கீதை 14.26)


வழி தவறாமல், விசுவாசமுள்ள, மனப்பூர்வமான கவனம், அத்தகைய நபர், மாம் சஅவ்யபிசாரினீ யோகேன


மாம் ச அவ்யபிசாரண யோகேன பஜதே மாம் ஸ குணான் ஸமதீத்யைதான் (பகவத் கீதை 14.26)


உடனடியாக, அவர் தன்மைகள் அனைத்து உன்னதம் அடைகிறது. ஆகையால் பக்தி தொண்டு இந்த பௌதிக தரத்திற்குள் உள்ளதல்ல. அவை நித்தியமானது. பக்தி நித்தியமானது. ஆகையினால், நீங்கள் கிருஷ்ணரை அல்லது பகவானை பக்தி இல்லாமல் புரிந்துக் கொள்ள முடியாது.


பக்த்யா மாம் அபிஜானாதி (பகவத் கீதை 18.55). பக்த்யா மாம் அபிஜானாதி மட்டுமே. இல்லையெனில், அது சாத்தியமல்ல. பக்த்யா மாம் அபிஜானாதி யாவான்யஷ்ச்சாஸ்மி தத்வத


நிதர்சனம், உண்மையில், பகவான் என்றால் என்ன என்று நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், அப்பொழுது நீங்கள் இந்த பக்தி மார்க்கதைப் பின்பற்ற வேண்டும், பக்தி தொண்டு. பிறகு நீங்கள் உன்னதமடைவீர்கள். ஆகையினால், ஸ்ரீமத் பாகவதத்தில், நாரதர் கூறுகிறார் அதாவது.


த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரேர் (ஸ்ரீமத் பாகவதம் 1.5.17)


யாராவது, உணர்ச்சிபூர்வமாக கூட, இதுபோல் கொடுத்து, தன்னுடைய கடமைகளை குணாவிற்கேற்ப அர்ப்பணித்தால்... அதை தான் ஸ்வதர்ம என்று கூறுகிறோம்... ஸ்வதர்ம என்றால் அவர் பெற்ற கடமையின் தரத்திற்கு ஏற்ப. அதை தான் ஸ்வதர்ம என்று கூறுகிறோம். பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர், சூத்ர,


குண-கர்ம-விபாகச (பகவத் கீதை 4.13), குணாவால் மேலும் கர்மாவால் அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.


ஆகையால் இங்கே அர்ஜுன் கூறுகிறார் அதாவது


கார்ப்பண்ய தோஷோபஹத ஸ்வபாவ (பகவத் கீதை 2.7)


"நான் ஒரு க்ஷத்ரியன்." அவர் புரிந்துக் கொண்டார் அதாவது: "நான் தவறு செய்கிறேன். நான் போரிட மறுக்கிறேன். ஆகையினால், அது கார்ப்பண்ய தோஷோ, உலோபி." உலோபி என்றால் எனக்கு செலவு செய்ய சில வழிகள் இருக்கின்றன, ஆனால் நான் இதைச் செலவு செய்யாமல் இருந்தால் இதை உலோபி என்றழைக்கிறோம், குருபணதா. ஆகையால் க்ருபணதா, அங்கே இரண்டு ரகமான மனிதர்கள் இருக்கிறார்கள், பிராமணரும், சூத்ரரும். பிராமணரும், சூத்ரரும். பிராமண என்றால் அவர் கஞ்சன் அல்ல. அவருக்கு இந்த வாய்ப்பு உள்ளது, மனித உருவம் கொண்ட இந்த உடல் பெரும் சொத்தாக. பல இலட்சம் மதிப்புள்ள இந்த, மனித... ஆனால் அவர் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை. வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டிருந்து: "நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்." அவ்வளவு தான். சும்மா உங்கள் அழகை செலவழிப்பது அல்லது உங்கள் சொத்தை உபயோகிப்பது, இந்த மனிதர்கள்... அதுதான் பிராமண, தாராளவாதி.