TA/Prabhupada 0285 - கிருஷ்ணர் மற்றும் அவரது திருவூரான விருந்தாவனம் மட்டுமே நம் அன்புக்கு உரியவை



Lecture -- Seattle, September 30, 1968

ஆக கிருஷ்ணர், பசுக்களுடன் மேய்ச்சல் நிலத்திற்குச் செல்வார், மற்றும் கோபியர்கள், வீட்டில்... அவர்கள் பெண்கள், தாய்க்குலம். அவர்கள்... பெண்களுக்கு கூலிக்கு பணியாற்றுவதற்கு அனுமதி இல்லை. அதுதான் வேத பண்பாடு. அவர்கள் வீட்டை கவனித்துக்கொள்வார்கள் மற்றும் அவர்களுக்கு தந்தையோ, கணவனோ அல்லது வளர்ந்த மகன்களோ பாதுகாப்பளிக்க வேண்டும். வெளியே சென்று வேலை பார்ப்பது அவர்கள் பொறுப்பு கிடையாது. எனவே அவர்கள் வீட்டிலேயே தன் கடமையை செய்தார்கள். ஆனால் கிருஷ்ணர், பல மைல் தூரத்தில் மேய்ச்சல் இடத்தில் இருப்பார், மற்றும் கோபியர்கள் தன் வீட்டிலிருந்து அவரையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்., "ஓ, கிருஷ்ணரின் பாதங்கள் எவ்வளவு மென்மையானவை, இப்போ அவர் கல்லும் முள்ளும் உள்ள கரடுமுரடான பாதைகளில் நடக்கிறாரே. சிறு கற்கள் அவர் உள்ளங்காலை குத்துமே. அவருக்கு வலிக்குமே." இப்படி நினைத்து, கண்ணீர் விடுவார்கள். பாருங்கள். கிருஷ்ணர் பல மைல் தூரத்தில் இருக்கிறார் மற்றும் கிருஷ்ணர் எப்படி உணருவார் என்பதைப் பற்றி மட்டும் தான் அவர்கள் நினைக்கிறார்கள்: "கிருஷ்ணர் ஒருவேளை இப்படி உணர்கிறாரோ." இது தான் அன்பு. இது தான் அன்பு. அவர்கள் கிருஷ்ணரிடம், "என் அன்பு கிருஷ்ணா, எனக்காக மேய்ச்சல் இடத்திலிருந்து என்ன கொண்டுவந்திருக்கிறாய்? உன் பையில் என்ன வைத்திருக்கிறாய்? பார்க்கட்டும்." இப்படி எதையும் எதிர்பார்க்கவில்லை. இல்லை. வெறும் கிருஷ்ணரைப் பற்றி, கிருஷ்ணர் எப்படி திருப்தி அடைவார் என்பதைப் பற்றி நினைப்பார்கள். அவர்கள் தன்னை அழகுபடுத்துவதும்... நல்ல உடையை அணிந்து, "ஓ, அவர் என்னை இப்படி பார்த்து மகிழ்வார்," என்ற எண்ணத்துடன் கிருஷ்ணரிடம் செல்ல ஆசைப் படுவார்கள். பொதுவாக, ஒரு ஆண், தன் காதலியோ, மனைவியோ அழகாக ஆடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து மகிழ்வான். ஆக தன்னை அழகுப்படுத்திக் கொள்வது, ஒரு பெண்ணின் இயல்பு. மேலும் வேத பண்பாட்டின்படி, ஒரு பெண், தன் கணவனை திருப்திபடுத்துவதற்காகவே, சிறப்பாக ஆடையை அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். இதுதான் வேத பண்பாடு. கணவன் வீட்டில் இல்லாதபட்சத்தில், அவள் தன்னை அழகுபடுத்திக்கொள்ளக் கூடாது. இவை தான் அறிவுரைகள். ப்ரோஷித பர்த்ருகா. பெண்கள் அணியும் வெவ்வேறு விதமான உடைகள் உள்ளன. அந்த உடையை பார்த்து, அந்த பெண் யார் என்பதை ஒருவர் புரிந்துகொள்ளலாம். உடையை பார்த்தே ஒருவள், திருமணம் ஆகாதவள் என்பதை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். வெறும் அணிந்திருக்கும் உடையை பார்த்து அவள் திருமணம் ஆனவள், ஒருவனுக்கு மனைவி என்பதை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். அவள் விதவை என்பதை உடையை பார்த்தே புரிந்துகொள்ளலாம். ஒருத்தி வேசி என்பதை உடையை பார்த்து புரிந்துகொள்ளலாம். ஆக உடை என்பது அவ்வளவு முக்கியமானது. ஆக ப்ரோஷித பர்த்ருகா. சமூக விவகாரங்களைப் பற்றி நாம் இப்போது பேசப்போவதில்லை. நாம் கிருஷ்ணரின் அன்பு விவகாரங்களைப் பற்றி பேசுகிறோம், ஆக கோபியர்கள்... கிருஷ்ணருக்கும் கோபியர்களுக்கும் இடையில் இருந்த உறவு அவ்வளவு நெருக்கமானது, அவ்வளவு புனிதமானது, அதாவது கிருஷ்ணரே ஒப்புக்கொண்டார், "என் அன்பு கோபியர்களே, உங்கள் அன்புக்கு கைமாறு செய்வது என் சக்திக்கு அப்பாற்பட்டது." கிருஷ்ணர், பரமபுருஷரான முழுமுதற் கடவுள். அவரே ஏழை ஆகிவிட்டார், அதாவது "என் அன்பு கோபியர்களே, என்மீது அன்பை செலுத்தி, எனக்கு அளித்த அன்புக் கடனை திருப்பி கொடுப்பது எனக்கு சாத்தியமே இல்லை." ஆக அதுதான் அன்பின் தலைசிறந்த பக்குவ நிலை. ரம்யா காசித் உபாசனா வ்ரஜவதூ.

நான் பகவான் சைதன்யரின் திட்டப்பணியை வர்ணிக்கிறேன், அவ்வளவு தான். அவர் நமக்கு அறிவுரை வழங்குகிறார், அவருடைய திட்டப்பணி, அதாவது நம் அன்புக்கு உரிய ஒரே விஷயம், கிருஷ்ணரும் அவருடைய இருப்பிடமுமான விருந்தாவனமும் தான். மேலும் அவரை நேசிக்கும் செயல்முறையின் எடுத்துக்காட்டாக கோபியர்கள் இருந்தார்கள். அந்த நிலையை யாராலும் நெருங்க முடியாது. பக்தர்களில் வெவ்வேறு நிலைகள் உள்ளன, மற்றும் கோபியர்கள் தலைசிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படுகின்றனர். மேலும் கோபியர்களிலும் மீஉயர்ந்தவள் ராதாராணி. ஆகவே யாராலும் ராதாராணியின் அன்பை மிஞ்ச முடியாது. ரம்யா காசித் உபாசனா வ்ரஜவதூ-வர்கேண யா கல்பிதா, ஸ்ரீமத்-பாகவதம் அமலம் புராணம். இப்போ கடவுளை நேசிக்கும் இந்த மொத்த விஞ்ஞானத்தையும் கற்பதற்கு, ஒரு புத்தகம் இருக்க வேண்டும், ஒரு அங்கீகாரம் பெற்ற, ஆணையுரிமை வாய்ந்த இலக்கியம் இருக்கவேண்டும். ஆம். சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், ஸ்ரீமத்-பாகவதம் அமலம் புராணம். கடவுளை எப்படி நேசிப்பது என்பதைப் பற்றிய புரிதலின் தூய்மையான விளக்கம் தான் இந்த ஸ்ரீமத்-பாகவதம். வேறு எந்த விளக்கமும் கிடையாது. ஆரம்பத்திலிருந்தே, கடவுளை எப்படி நேசிப்பது என்பதை அது கற்றுத்தருகிறது. ஸ்ரீமத்-பாகவதத்தை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும், முதல் காண்டத்தின் முதல் பதம் என்னவென்றால், ஜன்மாதி அஸ்ய யதஹ, சத்யம் பரம் தீமஹி (ஸ்ரீமத்-பாகவதம் 1.1.1). ஆரம்பம் என்னவென்றால், "யாரிடமிருந்து அனைத்தும் தோன்றுகிறதோ, அப்பேர்பட்ட பரமனிடம், நான் என் கலப்பற்ற பக்தியை அர்ப்பணிக்கிறேன்." ஜன்மாதி அஸ்ய யதஹ. ஆக இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த விளக்கம். ஆனால் ஸ்ரீமத்-பாகவதம் என்பது... நீங்கள் கடவுளை, அதாவது கிருஷ்ணரை எப்படி நேசிப்பது என்பதை கற்க விரும்பினால், ஸ்ரீமத்-பாகவதத்தை படியுங்கள். மேலும் ஸ்ரீமத்-பாகவதத்தை புரிந்துகொள்வதற்கு, ஆரம்ப நிலை ஆய்வு தான் பகவத்-கீதை. ஆக கடவுள் யார், நான் யார் என்ற உண்மையான அடையாளத்தையும் , உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள உறவையும் புரிந்துகொள்ள, பகவத்-கீதையை படியுங்கள்., பிறகு நீங்கள் ஓரளவுக்கு அதை புரிந்துகொண்டதும், "ஆம், அன்புக்கு உரிய ஒரே நபர் கிருஷ்ணரே," என்பதை ஏற்க தயார் ஆனவுடன், பிறகு அடுத்த புத்தகத்தை, ஸ்ரீமத்-பாகவதத்தை படியுங்கள். அப்படி மேல் மேலும் நீங்கள் படிக்கலாம். எப்படி என்றால், பகவத்-கீதை உண்மையுருவில் என்பது ஆரம்பநிலை கல்வி. உதாரணத்திற்கு, மாணவர்கள் பள்ளிப் பரீட்சைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவுடன் கல்லூரிக்கு செல்வார்கள். ஆக நீங்கள் உங்கள் பள்ளிப் பரீட்சையில், அதாவது கடவுளை எப்படி நேசிப்பது என்பதன் புரிதலில், பகவத்-கீதை உண்மையுருவில் புத்தகத்தை படித்து, தேர்ச்சி பெறுங்கள். அதன்பிறகு ஸ்ரீமத்-பாகவதத்தை படியுங்கள், பிறகு... அது தான் பட்டப்படிப்பு. பிறகு நீங்கள் இன்னும் முன்னேற்றம் அடைந்தபின், முதுநிலை-பட்டப்படிப்பு, அப்போது நீங்கள் பகவான் சைதன்யரின் போதனைகள் என்ற புத்தகத்தை படியுங்கள்.