TA/Prabhupada 0286 - நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலுள்ள தூய்மையான அன்பின் வக்கிரமான பிரதிபலிப்பு



Lecture -- Seattle, September 30, 1968

ஆக இதில் எந்த கஷ்டமும் இல்லை. கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் விஷயம். ஆக வழிமுறை இருக்கிறது மற்றும் அதை நடைமுறையில் செய்ய, அதற்கான செயல்முறையும் இருக்கிறது, மேலும் நாங்களும் முடிந்தவரை உங்களுக்கு உதவ முயல்கிறோம். எங்கள் இளைஞர்களை, தெருத் தெருவாகச் சென்று, நகரங்களில் சென்று உங்களை அழைக்க அனுப்புகிறோம். மேலும் நீங்கள் தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை ஏற்றுக் கொண்டால், பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். ப்ரெமா பும்-அர்த்தொ மஹான். இந்த மனித வாழ்க்கை என்பது கடவுளின்மீதுள்ள அன்பை மேம்படுத்துவதற்கு தான். ஏனென்றால் மற்ற பிறவிகளிலும், நாம் நேசித்திருக்கிறோம். மிருக இனத்தில் பிறந்து நம் குழந்தைகளை நேசித்திருக்கிறோம், நம் மனைவியை நேசித்திருக்கிறோம், பறவையாகப் பிறந்து நம் கூட்டை நேசித்திருக்கிறோம். அங்கே நேசம், அன்பு இருக்கிறது. பறவைக்கோ அல்லது மிருகத்திற்கோ குழந்தைகளை எவ்வாறு நேசிப்பது என்று கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் அது இயல்பானது. உங்கள் வீட்டை, நாட்டை, கணவரை, உங்கள் குழந்தைகளை, உங்கள் மனைவியை, என்று போய்க்கொண்டே இருக்கலாம்; இந்த எல்லா அன்பும், கிட்டத்தட்ட எல்லாமே மிருகங்களின் இராஜ்ஜியத்திலும் உள்ளது தான். ஆனால் அப்படிப்பட்ட நேசம் உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தராது. நீங்கள் ஏமாந்து போவீர்கள் ஏனென்றால் இந்த உடல் தற்காலிகமானது. ஆகையினால் இந்த அன்பு பரிமாற்றங்கள் அனைத்துமே தற்காலிகமானவை மேலும் அவை ஒன்றும் புனிதமானவை அல்ல. அவை வெறும், உங்களுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் இருக்கின்ற தூய்மையான அன்பின் மாசுப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு தான். ஆக உங்களுக்கு உண்மையிலேயே நிம்மதி வேண்டுமென்றால், உங்களுக்கு உண்மையிலேயே திருப்தி அடைய விருப்பம் இருந்தால், குழப்பம் அடையாமல் இருக்க விரும்பினால், அப்போது கிருஷ்ணரின்மீது அன்பு செலுத்த முயற்சி செய்யுங்கள். இதுதான் எளிதான திட்டம். பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது, மக்களை ஏமாற்றி, தவறான வழியில் நடத்திச்செல்வதற்கு, உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. இது மிகவும் அங்கீகாரம் பெற்ற ஒரு இயக்கம். பகவத்-கீதை, ஸ்ரீமத்-பாகவதம், வேதாந்த-சூத்ரம், புராணங்கள், என்று வேத இலக்கியத்தின் அடிப்படையிலானது, மேலும் பற்பல சிறந்த புனிதர்கள் இந்த வழிமுறையை பின்பற்றினார்கள். மேலும் இதற்கு தெளிவான உதாரணம், பகவான் சைதன்யர் ஆவார். நீங்கள் அவருடைய சித்திரத்தை பாருங்கள், அவர் நடனம் ஆடும் மனநிலையில் இருக்கிறார். ஆக நீங்களும் இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டும், பிறகு நம் வாழ்க்கை பக்குவம் அடையும். நீங்கள் செயற்கையான எதையும் பயிற்சி செய்ய தேவையில்லை. தேவையில்லாமல் ஊகித்து உங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ... மற்றவர்களை நேசிக்கும் இயல்பறிவு உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. அது இயற்கையானது. தவறான இடத்தில் நம் அன்பை செலுத்துவதால் தான் நாம் ஏமாந்து போகிறோம். வெறுத்துப் போகிறோம். குழப்பம் அடைகிறோம். ஆக நீங்கள் குழப்பம் அடையாமல் இருக்க விரும்பினால், ஏமாற்றம் அடையாமல் இருக்க விரும்பினால், பிறகு கிருஷ்ணரை நேசிக்க முயற்சி செய்யுங்கள். அப்போது அமைதியிலும், ஆனந்ததிலும், நீங்கள் விரும்பும் அனைத்திலும், எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைகிறிர்கள் என்பதை நீங்களே உணர்வீர்கள். மிக்க நன்றி.