TA/Prabhupada 0287 - உங்கள் ஞாபகத்திற்கு உயிரூட்டுங்கள், கிருஷ்ணருக்கான உங்கள் அன்பு



Lecture -- Seattle, September 30, 1968

பிரபுபாதர்: கேள்விகள் ஏதாவது உண்டா? மதுத்விஷன்: பிரபுபாதரே, உங்களுடைய பகவத் கீதையின் பிரதி, பதிப்பு செய்யப்பட்டு நாங்கள் பெற்றப்பிறகும், ஸ்ரீமத் பாகவதத்தை படித்தால் பரவாயில்லையா ? அல்லது 'பகவத் கீதை உண்மையுருவில்' புத்தகத்தை முதலில் முழுதாக படித்தப்பிறகு நாங்கள்..., மேற்கொண்டு அடுத்த நிலைக்கு செல்லவேண்டுமா, அல்லது நாங்கள் ஸ்ரீமத் பாகவதத்தை தொடர்ந்து படிக்கலாமா? பிரபுபாதர்: இல்லை. நீங்கள் பகவத் கீதை உண்மையுருவில் புத்தகத்தை படிக்க வேண்டும். இந்த வரையறுத்தல் வெறும் புரிதலை எளிதாக்குவதற்கு தான். ஆன்மீக தளத்தில், அனைத்துமே பரிபூரணமானது. நீங்கள் பகவத் கீதையைப் படித்தால், அதே கருத்துரையை ஸ்ரீமத் பாகவதத்திலும் காணலாம். நீங்கள் ஸ்ரீமத்-பாகவதத்தைப் படிப்பதால், பகவத் கீதையைப் படிக்க தேவை இல்லை என்று எண்ணக்கூடாது. அது அப்படி கிடையாது. நீங்கள் இந்த இலக்கியங்களை படித்து, ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யுங்கள், விதிமுறைகளை பின்பற்றி சந்தோஷமாக வாழுங்கள். நம் பணி மிகவும் இனிமையான பணி. நாம் ஜெபிப்போம், ஆடுவோம், கிருஷ்ண பிரசாதம் உண்போம், கிருஷ்ணரின் அழகான சித்திரங்களை வரைவோம, அவரை அழகாக அலங்கரித்துப் பார்ப்போம், மற்றும் கிருஷ்ண உணர்வின் தத்துவத்தை படிப்போம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்? (சிரிப்பு). ஜஹ்னவா: ஆரம்பத்தில் நாம், கிருஷ்ணரின்மீது இருந்த உண்மையான அன்பின் உணர்வை எப்படி இழந்தோம் ? பிரபுபாதர்: என்ன ? தமால் கிருஷ்ணன்: கிருஷ்ணரின்மீது இருந்த அன்பை நாம் எப்படி இழந்தோம் ? ஜஹ்னவா: இல்லை, அன்பை அல்ல. கிருஷ்ணரின்மீது நமக்கு உண்மையான அன்பு இருக்கிறது என்ற அந்த உணர்வை எப்படி இழந்தோம். பிரபுபாதர்: அந்த உணர்வு எப்போதுமே இருக்கிறது. நீங்கள் யாரோ ஒருவரை நேசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை நேசிக்க வேண்டியவர்கள், அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஆக மறதியும் நம் இயல்பு தான். சில நேரங்களில் நாம் மறப்போம். அதிலும் குறிப்பாக நாம் மிகவும் சிறியவர்கள், மிகவும் நுணுக்கமானவர்கள், எனவே, நேற்று இரவு இந்த நேரத்தில் நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன் என்பதும் கூட எனக்கு சரியாக ஞாபகம் இருப்பதில்லை. ஆக மறதி என்பது நமக்கு இயல்பானது தான். மேலும், மறுபடியும், யாராவது நமக்கு ஞாபகப்படுத்தினால், அதை ஏற்றுக் கொள்வதும் செயர்க்கையான விஷயம் அல்ல. ஆக நம் அன்புக்கு உரிமையாளர் கிருஷ்ணரே. எப்படியோ, நாம் அவரை மறந்துவிட்டோம். நாம் மறந்த அந்த தருணம் எது என்ற வரலாற்றை நாம் ஆராய்வதில்லை. அது பயனற்ற சிரமம். ஆனால் நாம் மறந்துவிட்டோம் என்பது உண்மை தான். இப்போது அந்த உணர்வை மீட்டெடுங்கள. இங்கிருக்கும் எல்லாமே அதை நினைவூட்டத் தான். ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஏன் மறந்துவிட்டீர்கல், மறந்த தேதி என்ன என்ற வரலாற்றை எல்லாம் ஆராய முயலாதீர்கள். அப்படி அதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொண்டாலுமே, அதனால் என்ன பயன்? நீங்கள் மறந்துவிட்டீர்கள். இப்போது இதை ஏற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்றால், உங்களுக்கு இந்த நோய் எப்படி வந்தது, இந்த நோயின் சரித்திரம் என்ன, எந்த தேதிக்கு, எத்தனை மணிக்கு தொற்றிக் கொண்டது என்பதையெல்லாம் அவர் ஒருபோதும் கேட்கமாட்டார். அது முக்கியம் இல்லை. அவர் வெறும் உங்கள் நாடியை பிடித்து பார்த்து, உங்களுக்கு நோய் இருக்கிறது என்பதை அறிந்தவுடன் உங்களுக்கு மருந்து கொடுப்பார். "சரி. நீங்கள் இதை எடுத்துக்கொள்ளுங்கள்." அதுபோலவே, நாம் துன்பப்படுகிறோம். அது உண்மை. யாராலும் மறுக்க முடியாது. நீங்கள் ஏன் துன்பப்படுகிறீர்கள்? கிருஷ்ணரை மறந்ததனால். அவ்வளவு தான். இப்போது கிருஷ்ணரைப் பற்றிய உங்கள் ஞாபகத்தை மீட்டெடுங்கள், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். அவ்வளவு தான். மிகவும் எளிதான விஷயம். நீங்கள் எப்போது நினைவை இழந்தீர்கள் என்ற வரலாற்றை ஆராய முயலாதீர்கள். நீங்கள் மறந்துவிட்டீர்கள், அது உண்மை, ஏனென்றால் நீங்கள் துன்பப்படுகிறீர்கள். இப்போது இதோ இங்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது, இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். உங்கள் ஞாபகத்தை, கிருஷ்ணரின்மீதுள்ள உங்கள் அன்பை தட்டி எழுப்புங்கள். எளிதான விஷயம். ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள், ஆடுங்கள், கிருஷ்ண பிரசாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு எழுத படிக்க முடியாத பட்சத்தில், காதால் கேளுங்கள். உங்களுக்கு இயற்கையின் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது, காது. இயற்கையான நாக்கு இருக்கிறது. ஆக நீங்கள் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யலாம் மற்றும் பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்தை, அதை கற்றவர்களிடமிருந்து கேட்கலாம். ஆக இதில் கஷ்டம் எதுவுமில்லை. எந்த தடையும் இல்லை. இதற்கு முன் தகுதி எதுவும் தேவையில்லை. சும்மா உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை பயன்படுத்த வ்ண்டியது தான். அவ்வளவு தான். நீங்கள் சம்மதிக்க வேண்டும். அதுதான் தேவை. "ஆம், நான் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்வேன்." அது உங்களைப் பொறுத்தது ஏனென்றால் அது உங்கள் சுதந்திரமான விருப்பம். நீங்கள் மறுத்தால், "இல்லை, நான் ஏன் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள வேண்டும்?" பிறகு ஒருவராலும் உங்களுக்கு அதை வழங்க முடியாது. ஆனால் நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு தேவையானது அனைத்தும் இங்கிருக்கிறது, மிகவும் எளிதானது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.