TA/Prabhupada 0289 - பகவானின் இராஜ்யத்திலிருந்து வருபவர் யாராயினும் - அவர்கள் ஒரே மாதிரியானவர்களே



Lecture -- Seattle, September 30, 1968

பிரபுபாதர்: என்னது? பெண்: இராமரும் ஏசுநாதரும் ஒன்று தான் என்று சொல்ல முடியுமா? பக்தர்: "இராமர் ஏசுநாதரே தான் என்று சொல்ல முடியுமா?" பிரபுபாதர்: அதே நபர் என்று சொல்ல முடியாது, ஆனால் சமமானவர்கள். ஒரே நபர் என்று சொல்ல முடியாது, சமமானவர்கள். பெண்: ஓ, சமமானவர்கள். பிரபுபாதர்: ஆம். பூரண உண்மையின் தளத்தில் அனைத்தும் சமமானது தான். சார்காட்சியால் காணப்படும் இந்த ஜட உலகிலும் பார்த்தால், அனைத்தும் ஜட இயற்கையைச் சேர்ந்தது. ஆக ஒவ்வொன்றுக்கும் ஒரு பௌதிக அடையாளம் இருக்கிறது. அதுபோலவே, ஆன்மீக உலகிலும் அனைத்தும் ஆன்மீகத்தன்மை வாய்ந்தது. ஆக ஆன்மீக உலகில், கடவுளாகட்டும், கடவுளின் மைந்தன் ஆகட்டும், அவரது நண்பன் ஆகட்டும், காதலர் ஆகட்டும், யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரே நிலையைச் சேர்ந்தவர்கள் தான், ஆன்மீக நிலை. ஆகையினால் அவர்கள் சமமானவர்கள். பெண்: ஆனால் இராமர் என்றால் இந்தியாவில் எங்கேயோ பிறந்த ஒரு நபரையும், கிறிஸ்து என்றால் ஐரோப்பாவில் பிறந்த வேறு ஒரு நபரையும் குறிக்கிறது அல்லவா? இரண்டு வெவ்வேறு நபர்கள், இருப்பினும் சமமானவர்களா... பிரபுபாதர்: ஆம். சூரியன் தினமும் இந்தியாவில், ஐரோப்பாவில், அமேரிக்காவில் உதிக்கிறது, பிறக்கிறது. அதற்காக அவர் இந்தியர், அல்லது அமெரிக்கர் அல்லது சீனர் என்று அர்த்தமாகுமா? பெண்: இல்லை, நான் சொல்ல வந்தது அதுவல்ல. பிரபுபாதர்: பிறகு? ஆக இதுதான் கருத்து. நமக்கு ஞானம் போதாது. நமக்கு அப்படி சொல்லித் தந்திருக்கிறார்கள். கடவுள் பெரியவர். உதார்ணத்திற்கு, சூரியன் பெரியது; எனவே சூரியன் என்பது இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, சீனாவிலும் சரி, உலகின் எந்த பகுதியிலும், பிரபஞ்சத்தின் எந்த பகுதியிலிருந்து தென்பட்டாலும், சூரியன் அதே தான். "ஓ, இது அமேரிக்க சூரியன்" அல்லது "இது இந்திய சூரியன்," என்று ஒருவராலும் கூறமுடியாது. ஆக கடவுளின் இராஜ்யத்திலிருந்து வருபவர் யாராக இருந்தாலும் சரி, ஏசு கிறிஸ்துவாக இருந்தாலும் சரி, இராமராக இருந்தாலும் சரி, கிருஷ்ணராகவே இருந்தாலும் சரி, அவர்கள் சமமானவர்கள் தான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் வித்தியாசம் எப்படி என்றால், உங்கள் நாட்டில் வெப்பநிலை குறைவாக இருக்கிறது, மேலும் வேப்ப நாடுகளில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். அதற்காக சூரியனுக்குள் உள்ள வெப்பநிலை மாறிவிட்டது என்று அர்த்தமாகுமா? அது வெப்பத்தை யார் பெறுகிறார் என்பதை பொறுத்த விஷயம். இந்த நாட்டில் காற்றின் ஈரப்பசை அதிகம், அதனால் உங்களுக்கு சூரிய வெளிச்சம் சரியாக கிடைப்பதில்லை, ஆனால் சூரியன் தன் வெளிச்சத்தை எல்லாவற்றிலும் ஒருபோலவே தான் வழங்குகிறது. அதுபோலவே, எந்த தேசம், என்ன சூழ்நிலை, எந்த கிரகம், என்பதை பொறுத்து, கடவுள் வெவ்வேறு விதமாக தோற்றம் அளிக்கிறார், ஆனால் ஆன்மீக ரீதியாக அவர் வேறுபட்டவர் அல்ல. நீங்கள் குளிர் கால உடைகளால் உங்கள் உடம்பை போத்திக்கொள்கிரீர்கள். அதே சமயம், இந்தியாவில் தந்தி அடித்து கேட்டால், ஓ, அவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் காற்றாடியை பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்வீர்கள். வெப்பநிலையில் ஏன் அந்த வித்தியாசம்? ஆகையினால், ஏசுநாதர் எதை கூறுகிறாரோ, அல்லது கிருஷ்ணர் எதை கூறுகிறாரோ, அல்லது இராமர் எதை கூறுகிறாரோ, அது, இடம், நேரம், காலம், சூழ்நிலை, அக்கருத்தை பெறும் மக்கள், இவை அனைத்தையும் பொறுத்தது. அதில் தான் வித்தியாசம். ஒரு தந்தைக்கு புரியவைக்க முயலும் அதே கருத்தை அவன் பிள்ளைக்கும் புரியவைப்பது சாத்தியம் இல்லை. அதாவது, ஒரு சிறுவனுக்கு பாலின்ப வாழ்க்கை என்னவென்று புரியாது, ஆனால் ஒரு வாலிபனுக்கு புரியும். அதே பிள்ளை, வளர்ந்தபின், அவனுக்குப் புரியும். ஆக எல்லோருக்கும் எல்லாமே புரியும் என்று உங்களால் நினைக்க முடியாது. ஆக பைபிள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பேசப்பட்டது; பகவத்-கீதை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பேசப்பட்டது. சூழ்நிலைகளில் தான் வித்தியாசம். மற்றபடி, அடிப்படை கொள்கை அதேதான். "இறைவனை நேசியுங்கள்," என்று பைபளிலும் கூறப்பட்டுள்ளது, பகவத்-கீதையும், "இறைவனை நேசியுங்கள்," என்று தான் கூறுகிறது. இதில் வேற்றுமை இல்லை.