TA/Prabhupada 0309 -ஆன்மீக குரு நிலையானவர்



Lecture -- Seattle, October 2, 1968


மதுத்விசன்: ஒரு கிறித்துவனுக்கு ஏதாவது வழி இருக்கிறதா, ஆன்மீக குருவின் உதவி இல்லாமல், கர்த்தரின் வார்த்தைகளை நம்பி, அவர் கற்பித்தலை பின்பற்றுவதால் ஆன்மீக வானத்தை அடைய முடியுமா?


பிரபுபாதர்: எனக்கு புரியவில்லை.


தமால கிருஷ்ணன்: இந்த யுகத்தில் ஒரு கிறித்துவால், ஆன்மீக குரு இல்லாமல், ஆனால் பைபிளை படித்து மற்றும் இயேசுவின் வார்த்தையை பின்பற்றி, போய் சேர...


பிரபுபாதர்: பைபிளை படிக்கும் பொழுது, நீ ஆன்மீக குருவை பின்பற்றுகிறாரய். குரு இல்லாமல் என்று எப்படி நீ செல்லலாம்? பைபிளை படிக்கும் பொழுது நீ கர்த்தரின் கட்டளைகளை பின்பற்றுகிறாய், ஆகையால் நீ ஆன்மீக குருவை பின்பற்றுகிறாய். ஆக குரு இல்லாமல் இருப்பதற்கு எங்கே வாய்ப்பிருக்கிறது?


மதுத்விசன்: நான் உயிருள்ள ஆன்மீக குருவை குறிப்பிட்டு சொன்னேன்.


பிரபுபாதர்: ஆன்மீக குரு என்றால் கேள்வியை இல்லை... ஆன்மீக குரு முடிவற்றவர். ஆன்மீக குரு நிலையானவர். ஆ‌க உன் கேள்வி, ஆன்மீக குரு இல்லாமல். ஆன்மீக குரு இல்லாமல் உன்னால் இருக்க முடியாது, வாழ்க்கையின் எந்த கட்டத்திலும். நீ இந்த ஆன்மீக குருவையோ, அந்த ஆன்மீக குருவையோ ஏற்றுக்கொள்ள விரும்பலாம். அது வேறு விஷயம். ஆனால் நீ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். மேலும் நீ "பைபிளைப் படித்து" என்றாய். பைபிளைப் படிப்பதால் நீ ஆன்மீக குருவைத் தான் பின்பற்றுகிறாய் அல்லது கர்த்தரின் வழியில் பிரதிநிதியாக இருக்கும் ஏதாவது ஒரு பாதிரியாரை பின்பற்றுகிறாய். எல்லா வகையிலும் ஆன்மீக குருவை பின்பற்றி ஆகவே வேண்டும். ஆன்மீக குரு இல்லாமல் இருப்பதற்கான கேள்வியே இல்லை. புரிந்ததா?


மதுத்விசன்: நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால் உங்கள் வழிகாட்டுதல் இல்லாமல் எங்களால் பகவத் கீதையின் கற்பித்தலைப் புரிந்திருக்கமுடியாது.


பிரபுபாதர்: அதுபோலவே பைபிளை கோயிலில் இருக்கும் பாதிரியாரின் உதவியினால் புரிந்துக் கொள்ளவேண்டும்.


மதுத்விசன்: ஆமாம். ஆனால் அவர் தன் குரு பரம்பரையில் அல்லது தன் ஆயரிடமிருந்து சரியான பொருள் விளக்கத்தைத் தான் பெறுகிறாரா என்பது கேள்விக்குரியது. ஏனென்றால் பைபிளின் பொருள் விளக்கத்தில் வேறுபாடு இருக்குமாறு தோன்றுகிறது. பைபிளின் பொருளை வெவ்வேறு அர்த்தத்தில் விளக்கும் பல பிரிவுகள் உள்ளன.


பிரபுபாதர்: நிச்சயமாக நமது எண்ணப்படி பைபிளின் தாத்பரியம் அளிப்பது கூடாது. பின்னர் பைபிளின் புரிதலில் அதிகாரம் பொருந்தியவராக இருக்கமுடியாது. எதற்கும் உன் எண்ணப்படி தாத்பரியம் அளித்தால்... "மண்வெட்டியை மண்வெட்டி என்றழைக்க வேண்டும்."அது போல தான். அதை வேறு எதோ பொருளைப் போல் விளக்கினால் அவர் ஆன்மீக குரு அல்ல. எடுத்துக்காட்டாக இது ஒரு கடிகாரம். எல்லோரும் இதை கடிகாரம் என்கிறார்கள். ஆனால் நான் இதை கண்ணாடி என்று விளக்கினால், நான் ஆன்மீக குருவாக இருப்பதற்கு என்ன அர்த்தம்? இது கடிகாரம் என்று நான் சொல்லவேண்டும். (சிரிப்பு) ஆக எப்பொழுது தவறான பொருள் விளக்கப்படுகிறதோ, அவர் வாஸ்தவத்தில் அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குரு அல்ல. அவரை வாஸ்தவத்தில் அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குரு என்று எண்ண முடியாது. இந்த கடிகாரத்தை உனக்கு விளக்கவேண்டும் என்றால், "இதோ இதை கடிகாரம் என்பார்கள் மற்றும் இதை நிமிட முள் என்பார்கள், இது சமையம் எப்படி கூறுகிறது; இதை இப்படி என்பார்கள்..."என்று நான் கூறலாம். அது சரி. மற்றும் நான் , "எல்லோரும் இதை கடிகாரம் என்கிறார்கள் ஆனால் நான் இதை கண்ணாடி என்கிறேன்" , என்றால் பின்னர் நான் எப்படிப்பட்ட ஒரு ஆன்மீக குரு ஆவேன்? அவனை உடனேயே நிராகரிக்க வேண்டும். ஒருவர் மேல் பார்வையில் மற்றும் ஆன்மீக குருவா அல்லது உண்மையான ஆன்மீக குருவா என்று அறிய, அத்தகைய அறிவாற்றல் உன்னிடம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நீ ஏமாற்ற படுவாய். அது நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. எல்லோரும் தனக்கு பிடித்தது போல் தாத்பரியம் அளிக்கிறார்கள்.


பகவத் கீதையின் ஆயிர கணக்கான பதிப்புகள் உள்ளன. அவர்கள் தன் எண்ணப்படி தாத்பரியம் அளிக்க முயற்சி செய்திருக்கிறார்கள், எல்லாம் அர்த்தமற்றவை. அவையை தூக்கியெறிய வேண்டும். பகவத் கீதையை உண்மையுருவில் படித்தால் போதும். அப்பொழுது தான் உனக்கு புரியும். பொருளை மனம் போல் அளிப்பதற்கான கேள்வியே ஏற்படுவதில்லை. அப்பொழுதே அது வாய்மை இழந்து விடுகிறது. உன் சுய தாத்பரியத்தை அளித்த உடனேயே அதன் வாய்மையை இழந்து விடுகிறது. சட்ட நூல். நீதிபதியின் முன்னால் நீ, "என் அன்புக்குரியவரே, இந்த பக்கத்திற்கான அர்த்தத்ம் இப்படித்தான் என்பது என் அபிப்பிராயம்." என்று சொன்னால் அதை ஒத்துப்பாரா ? நீதிபதி உடனேயே, " அர்த்தம் அளிப்பதற்கு நீ யார்? உனக்கு அதிகாரமே கிடையாது." என்பார். ஆக எல்லோரும் வந்து, "நான் என் வழியில் இவ்வாறு தாத்பரியத்தை புரிந்துக் கொள்கிறேன்." என்றால், சட்ட நூல் தனது அதிகாரத்தையே இழந்துவிடும். தாத்பரியம் எப்பொழுது தேவை? ஒரு விஷயம் புரியாத பொது. "இது கடிகாரம்." என்று நான் சொல்லி எல்லோரும் "ஆம், இது கடிகாரம்" என்று புரிந்துக் கொண்டால், பின்னர் இது கண்ணாடி என்ற தாத்பரியம் அளிக்கும் வாய்ப்பு எங்கே இருக்கிறது? யாரும் புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியம் தெளிவாக இருந்தால்...


எடுத்துக்காட்டாக பைபிளில், "கடவுள் சொன்னார், 'படைப்பு ஆகட்டும்,' மற்றும் படைப்பு நிகழ்ந்தது." இதில் தாத்பரியம் அளிக்க கேள்வி எங்கே இருக்கிறது? ஆம், கடவுள் படைத்தார். உன்னால் படைப்பை நிகழ முடியாது. தாத்பரியம் ஆராய்வதற்கு என்ன அவசியம்? தேவையில்லாத பொருளை ஆராய்வதற்கு அவசியமில்லை மற்றும் அதற்கு அங்கீகாரமும் இருப்பதில்லை. அப்படி தேவையற்ற ஆராய்ச்சி செய்வோரை உடனேயே நிராகரிக்க வேண்டும். உடனேயே, வேறு எதுவும் கருதாமல். கடவுள் சொன்னார், "படைப்பு நிகழட்டும்." ஆகப் படைப்பு நிகழ்ந்தது. எளிதான விஷயம். இங்கு தாத்தபரியத்தை ஆராய என்ன அவசியம்? அப்படி என்ன வேறு அர்த்தம் அளிக்க முடியும்? வேறு எதாவது அர்த்தம் யோசியுங்கள் பார்க்கலாம். நான் கூறுவது சரிதானே? பைபிளின் ஆரம்பத்தில் அப்படி கூறப்பட்டிருக்கிறது அல்லவா? "கடவுள் சொன்னார், 'படைப்பு நிகழட்டும்,' மற்றும் படைப்பு நிகழ்ந்தது." உன் தாத்பரியம் என்ன? உன் தாத்பரியம் என்னவென்று எனக்கு சொல். வேறு அர்த்தம் விளக்க முடியுமா? உங்களில் யாராவது யோசித்து சொல்ல முடியுமா? அப்போது தாத்பரியத்தை ஆராய எங்கே இடம் இருக்கிறது? ஒருவரால் உள்ளதை விளக்க முடியும். அது வேறு விஷயம், ஆனால் கடவுள் படைத்தார் என்கிற உண்மை, அது அப்படியே இருக்கும். அதை உன்னால் மாற்ற முடியாது. எப்படி அந்த படைப்பு நிகழ்ந்தது என்பது பாகவதத்தில் விளக்கி இருக்கிறது. முதலில் ஆகாயம் வந்தது, பின்னர் ஒலி வந்தது, பின்னர் அது, இது இவ்வாறு. இப்படி படைப்பு நிகழ்ந்தது. அது வேறு விஷயம். ஆனால் கடவுள் படைத்தார் என்கிற உண்மை எந்த சூழ்நிலையிலும் அப்படியே இருக்கும். அயோக்கியர்களான விஞ்ஞானிகள் கூறுகிறார்கள், "ஓ, ஒரு பெரும் துண்டு இருந்தது, பின்னர் அது சிதறியதால் இந்த கிரகங்கள் உருவானது. இப்படி இருந்திருக்கலாம் மற்றும் அநேகமாக இப்படி," இதெல்லாம் அர்த்தமற்றவை. அவர்கள் வெறும் மனதிற்குத் தோன்றியப்படி விளக்கம் அளிப்பார்கள், "அநேகமாக," "ஒருவேளளை." அது விஞ்ஞானம் அல்ல - "அநேகமாக," "ஒருவேளளை." எதற்கு அநேகமாக? இதோ இங்கே தெளிவாக கூறி இருக்கிறது, "கடவுள் படைத்தார்." அவ்வளவுதான். முடிந்தது.