TA/Prabhupada 0310 - கர்த்தர் கடவுளின் பிரதிநிதி, மற்றும் ஹரி-நாமம் கடவுளே தான்



Lecture -- Seattle, October 2, 1968


பிரபுபாதர்: ஆம்?


மஹாபுருஷன்: பிரபுபாதர், ஏதாவது வேறுபாடுகள் உள்ளதா, ஏனென்றால் கர்த்தர் மற்றும் பகவான் சைதன்யர், இருவரும் கலியுகத்தில் அவதரித்தனர், மேலும் கர்த்தர் கூறினார், "கடவுளை என் மூலமாக மற்றுமே அடையமுடியும். என்னை நம்பி என்னிடம் சரணடையுங்கள்," ஆனால் பகவான் சைதன்யரோ ஹரி-நாமமே கலியுகத்தில் ஆன்மீக உணர்வை அடைய ஒரே வழி என்று கற்பித்தார்?


பிரபுபாதர்: அப்பொழுது உனக்கு எங்கே வேறுபாடு தெரிகிறது? கர்த்தர், "என் மூலமாக," என்றால் அவர் கடவுளின் பிரதிநிதி ஆவார், மற்றும் ஹரி-நாமம் கடவுளே தான். ஆக கடவுளின் பிரதிநிதியின் மூலமாகவோ அல்லது கடவுள் மூலமாகவோ, ஒரே விஷயம் தான். கடவுளுக்கும் அவர் பிரதிநிதிக்கும் நடுவிலே என்த வித்தியாசமும் இல்லை. பொது செயல்தொடர்புகளிலேயே, என் சார்பில் என் பிரதிநிதி கையெழுத்துப் போட்டால், நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவன் என் பிரதிநிதி. அதுபோலவே, கடவுளை, கடவுள் மூலமாகவோ அல்லது அவர் பிரதிநிதியின் மூலமாகவோ அணுக வேண்டும். ஒரே விஷயம் தான். புரிதலில் மற்றும் எதாவது வித்தியாசம் இருக்கலாம். ஏனென்றால் கர்த்தர் பேசிய சமுதாயம் அவ்வளவு முன்னேறியதல்ல. இவ்வளவு சிறந்த நபர், கடவுள் உணர்வு கொண்ட நபர், அவர் சித்திரவதைச்செய்யப் பட்டார் இதனால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த சமுதாயத்தின் நிலைமையை பாருங்கள். அது மிக கீழ்நிலையில் உள்ள சமுதாயம். ஆகையால் அவர்களால் கடவுளின் முழு தத்துவத்தையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அது போதுமானது. "கடவுள் படைத்தார். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்." படைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்ல. அறிவுத்திறன் உடையவர்களாக இருந்தால், கர்த்தரைப் போல் ஒரு சிறந்த நபரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆக சமுதாயத்தின் நிலைமை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


எடுத்துக்காட்டாக குரானில் முஹம்மத் கூறுகிறார் "இந்த நாள் முதல் நீ உன் தாயாருடன் உடலுறவு கொள்ளமாட்டாய்." சமுதாயத்தின் நிலைமையை கண்டறியுங்கள். ஆகையால் நாம் காலம், சூழ்நிலை, சமுதாயத்தை மனதில் வைத்து பின்னர் பிரசாரம் செய்யவேண்டும். அந்த மாதிரியான ஒரு சமுதாயத்தால் மேம்பட்ட தத்துவங்களை புரிந்துகொள்ள முடியாது. இது பகவத் கீதையிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் மூல உண்மையை, கடவுளின் ஆதிக்கியத்தை, பைபிளிலும் சரி பகவத்-கீதையிலும் சரி, இரண்டிலும் ஏற்கப் பட்டுள்ளது. பைபிள், "கடவுளின் அதிகாரம் தான் மீயுயர்ந்தது," என தொடங்குகிறது மற்றும் பகவத்-கீதை, "என்னிடம் சரணடை." என்று முடிகிறது. அப்போது வித்தியாசம் எங்கே இருக்கிறது? விளக்கும் முறை மற்றும் காலம், சமுதாயம், இடம் மற்றும் மக்களுக்கு எற்றது போல் இருக்கிறது. அவ்வளவுதான். அவர்கள் அர்ஜுனனைப் போல் கிடையாது. புரிகிறதா? ஆகையால் அர்ஜுனன் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள், கர்த்தரை சிலுவையில் அறைந்தவர்களால் புரிந்துகொள்வது சாத்தியம் இல்லை. அத்தகைய புரிதலின் வெளிச்சத்தில் நீங்கள் படிக்கவேண்டும். அதே விஷயங்கள் தான். ஒரு சட்டைப்பை அகராதி, குழந்தைகள் அகராதி மற்றும் ஒரு சர்வதேச அகராதி. எல்லாம் அகராதி தான், ஆனால் உட்பொருள் வெவ்வேறானது.


ஒரு அகராதி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது, மற்றும் வேறொரு அகராதி பெரிய அறிஞர்களுக்கானது, ஆனால் அவைகளில் எதையும் அகராதி இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி சொல்ல முடியாது. இரண்டுமே அகராதிகள் தான். ஆக நாம், காலம், இடம், மக்கள் எல்லாத்தையும் கருதவேண்டும். புத்த பெருமான் சொன்னார், "இந்த அறிவற்ற மிருகங்களின் கொலையை நிறுத்துங்கள்." அது தான் அவர் பிரசாரம். அப்போதைய மக்கள் மட்டமானவர்கள். அவர்கள் வெறும் மிருகங்களை கொல்வதில் இன்பம் பெறுவார்கள். ஆக அவர்களை உணர்ச்சியின் மேல்நிலைக்கு எடுத்துசெல்ல, புத்த பகவான் இந்த முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும் என்றார்: "தயவு செய்து இந்த கொலையை நிறுத்துங்கள்." ஆக ஒவ்வொரு காலகட்டத்திலும் கடவுளின் வெவ்வேறு பிரதிநிதிகள் வந்து வெவ்வேறு சூழ்நிலையில் மக்களை போதித்தனர். ஆகையால் சூழ்நிலைக்கு ஏற்றது போல் விளக்கத்தில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மூல தத்துவம் ஒன்றேயாகும். புத்த பகவான், "சரி, கடவுள் இல்லை ஆனால் நீ என்னிடம் சரணடை." என்றார். பிறகு வித்தியாசம் எங்கே இருக்கிறது? ஆகையால் ஒருவரால் கடவுளின் அதிகாரத்தை ஒரு வழியாக அல்லது மற்றொரு வழியாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.