TA/Prabhupada 0311 - தியானம் தோல்வி அடையும், நாங்கள் உங்களுக்கு புதிய ஒளியை தருகிறோம், ஏற்றுக் கொள்ளுங்கள்



Lecture -- Seattle, October 2, 1968


சிறுவன்: புத்தர் இருந்தப் பொழுது அவர் அமர்ந்து தியானம் செய்தது உண்டா ? ‌


பிரபுபாதர்: ஆம்.


சிறுவன்: இந்த யுகத்தில் தியானம் செய்வது சாத்தியமில்லை என்று நினைத்தேன். ஆனால் கடவுளின் மகனாகிய புத்தரோ தியானம் செய்தாரே. ‌


பிரபுபாதர்: ஆம்.


சிறுவன்: ஆனால் அது கலியுகம் தானே ? ‌


பிரபுபாதர்: ஆம்.


சிறுவன்: அப்படித் தானே? ‌


பிரபுபாதர்: ஆம்.


சிறுவன்: அப்படியானால் எப்படி தியானம் செய்ய முடியும்? ‌


பிரபுபாதர்: பலே. (சிரிப்பு) ஆகையால் நாம் புத்தரைவிட சிறந்தவர் ஆவோம். நாம் தியானம் சாத்தியம் இல்லை என்கிறோம். உனக்கு இப்போ புரிகிறதா ? புத்தர், "தியானம் செய்" என்றார், ஆனால் அவரை பின்பற்றுபவர்களால் அது முடியவில்லை. அவர் தோல்வி அடைந்தார். நாங்கள் , "தியானம் தோல்வி அடையும். இதோ இதை ஏற்றுக் கொள்ளுங்கள்", இந்த புதிய தரிசனத்தை(ஒளியை, வெளிச்சத்தை) வழங்குகிறோம். புரிந்ததா? ஆம். உனக்கு யாராவது ஏதாவது அறிவுறுத்தி, அதில் நீ தோல்வி அடைந்தால், பிறகு நான், "இதை செய்யாதே. இதோ இதை ஏற்றுக் கொள். சிறப்பாக இருக்கும்." என்பேன். ஒரு குழந்தையைப் போல் தான், தியானம் செய்ய முடியாது ஆனால் ஹரே கிருஷ்ணா என ஆடி பாடலாம். இவர்களால் தியானம் செய்ய முடியாது என்று புத்தருக்கு தெரியும். நீ புத்திசாலி பையன். ஆனால் அவர்களின் முட்டாள்தனத்தை நிறுத்த, "உக்கார்ந்து தியானம் செய்யுங்கள்", என்றார். அவ்வளவுதான். (சிரிப்பு) ஒரு குறும்பு பையனைப் போல் தான், ஷிஷமம் செய்துக் கொண்டிருப்பான். அவன் பெற்றோர்கள், "ஜான் செல்லம், சற்று இங்கு உக்காரு." என்பார். அவனால் ஒரிடத்தில் உக்கார முடியாது என்று அவருக்கு தெரியும், ஆனால் தற்போதைக்கு அவன் உக்காந்திருப்பான். அவன் உக்கார மாட்டான் என்று தந்தைக்கு தெரியும், ஆனால் தற்போதாவது அவன் விஷமம் செய்யாமல் இருப்பானே. சரி. ஹரே கிருஷ்ணா.