TA/Prabhupada 0320 - பாக்யவான் அதாவது அதிருஷ்டசாலி எப்படி ஆவது, என்பதை நாம் கற்பிக்கிறோம்



Lecture on BG 16.6 -- South Africa, October 18, 1975


பெண்மணி: ஸ்ரீல பிரபுபாதரே, இருந்தாலும்... அனைத்து உயிர்வாழீகளும் கிருஷ்ருடைய அம்சங்கள். இந்த ஜென்மத்தில் நாம் கிருஷ்ணரிடம் சரணடையாமல் போனாலும், இறுதியில் நம் ஒவ்வொருவருக்கும் அவரிடம் சரணடைந்து தானே ஆகவேண்டும்.


புஷ்த கிருஷ்ணன்: அனைவரும்... இந்த ஜென்மத்தில் நாம் கிருஷ்ணரிடம் சரணடையாமல் போனாலும், ஒவ்வொருவரும் கிருஷ்ணரிடம் சரணடைவார்களா? ஒவ்வொருவரும் இறுதியில் பகவானிடம் செல்வார்களா?


பிரபுபாதர்: என்ன? உனக்கு எதாவது சந்தேகம் இருத்கிறதா? நிச்சயமாக ஒவ்வொருவரும் அப்படி செய்யமாட்டார்கள். ஆக நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எல்லோரும் அப்படி செய்யவார்கள் என்பதில்லை. ஆகையால் சைதன்ய மகாபிரபு கூறுகிறார்,


எய் ரூபே ப்ரம்மாண்ட ப்ரிமதே கோனா பாக்யவான் ஜீவ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151)


ஒருவன் 'பாக்யவானாக' , மிக பாக்கியசாலியாக இருந்தால் ஒழிய அவன் பெருமாளின் திருவீட்டிற்கு திரும்பி செல்லமாட்டான். அவன் இங்கேயே வீணாகிவிடுவான். ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நாம் மக்களை பாக்யவானாக ஆக்க முயற்சி செய்கிறோம். அவனுக்கு விருப்பம் இருந்தால் அவன் 'பாக்யவான்' ஆகலாம். இதுதான் நம் முயற்சி. நாம் பல மையங்களை உருவாக்குகிறோம். 'பாக்யவான்' அதாவது அதிருஷ்டசாலி எப்படி ஆவது, எப்படி திருவீட்டிற்கு திரும்பி செல்வது, என்பதை நாம் கற்பிக்கிறோம். ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவர் இந்த கற்பித்தலை எற்று தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்வார். ஆக இதுதான் செயல்நோக்கம். ஆனால் 'பாக்யவான்' ஆகாமல் ஒருவரும் செல்லமுடியாது. அதிர்ஷ்டசாலி. ஆக நாம் அவர்களுக்கு அதிர்ஷ்டசாலி ஆக வாய்ப்பைத் தருகிறோம். இது தான் நம் செயல்நோக்கம்.


ஒருவன் மிக்க துரதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவனுக்கும் அதிர்ஷ்டசாலி ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. எவ்வாறு துரதிர்ஷ்டத்திலிருந்து இவர்கள் வாழ்வு அதிர்ஷ்டம் உடையதாக மாறுகிறது என்பதை, நம்மில் யார் வேண்டுமானாலும் யோசித்து பார்க்கலாம். இது தான் கிருஷ்ண பக்தி இயக்கம், இதில் நாம் துரதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறோம். எல்லோரும் துரதிர்ஷ்டசாலிகள், எல்லோரும் அயோக்கியர்கள் தான். நாம் புத்திசாலியும் அதிர்ஷ்டசாலியும் ஆக ஒரு வாய்ப்பை அளிக்கிறோம். இதுதான் கிருஷ்ண உணர்வு. மக்கள் அவ்வளவு துரதிர்ஷ்டசாலியாகவும் அயோக்கியர்களாகவும் இல்லாவிட்டால் நமது பிரசாரத்துக்கு என்ன அர்த்தம்? பிரசாரம் என்றால் இந்த அயோக்கியர்களை, துரதிர்ஷ்டசாலிகளை நீங்கள் புத்திசாலிகளாக, அதிர்ஷ்டசாலிகளாக மாற்ற வேண்டும். அது தான் பிரசாரம். ஆனால் அதிர்ஷ்டசாலியாக, புத்திசாலியாக இருந்தால் ஒழிய உங்களால் கிருஷ்ண பக்தியை ஏற்க முடியாது. அது உண்மை.