TA/Prabhupada 0331 - உண்மையான மகிழ்ச்சி என்பது கடவுளிடம் திரும்பிச் செல்வதில் தான் இருக்கிறது



Lecture on SB 6.2.16 -- Vrndavana, September 19, 1975

மொத்தத்தில், இந்த ஜட உலகில் இருக்கும் ஒவ்வொருவனும் பாவப்பட்டவன் என்று தீர்மானிக்கலாம். யாராக இருந்தாலும் சரி. இல்லாவிட்டால் இந்த ஐட உடல் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை. உதாரணமாக, சிறையில் அடைப்பட்டிருக்கும் ஒவ்வொருவனும் பாவம் செய்தவன், குற்றவாளி என தீர்மானிக்கலாம். ஒவ்வொருவனையும் ஆராய தேவை இல்லை. அவன் சிறையில் அடைப்பட்டிருப்பதனால் "இவன் குற்றவாளி" என தீர்மானிக்கலாம். அதுபோலவே, யாரொருவன் இந்த ஜட உலகில் இருக்கிறானோ, அவன் குற்றவாளி. ஆனால் சிறையின் மேலதிகாரி அப்படி கிடையாது. "சிறையில் இருக்கும் எல்லோரும் குற்றவாளி என்பதால் சிறையின் மேலதிகாரியும் குற்றவாளி." என தீர்மானிக்க முடியாது. அது தவறு. இந்த பாவப்பட்டவர்களை கடவுளின் திருவீட்டிற்கு வழிநடத்தி செல்பவன், குற்றவாளி கிடையாது. அவன் வேலை, இந்த அயோக்கியனை இந்த சிறையிலிருந்து எப்படி விடுவித்து கடவுளின் திருவீட்டிற்கு திரும்பி வழிநடத்தி செல்வது, என்பது தான். ஆக மஹத்-விசலனம் ந்ருணாம் க்ரஹிணாம் தீன-சேதஸாம். க்ருஹிணாம். இந்த உடலில் அதாவது ஜட உலகில் வாழும் யாவரும் க்ருஹி என்றழைக்கப்படுவார். இது எளிதான விஷயம். ஆக அவர்கள் தாழ்ந்த மனப்பான்மை உடையவர்கள். அவர்களுக்கு வாழ்வின் மதிப்பு என்னவென்றே தெரியாது.

ந தே விது: ஸ்வார்த கதிம் ஹி விஷ்ணும் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31)


ஆக அவர்களை விழிப்பூட்டவதற்கு மாறாக, மஹாத் அதாவது மஹாத்மா என்பவர்கள், அவர்களை இருளில் வைத்திருந்தால், அது பெரிய அபகாரமாகும். அவர்களை விழிப்பூட்டியாகவேண்டும். "தன்னை இந்த ஐட உலகிலேயே வைத்திருக்காதே. ஆன்மீக உலகிற்கு வந்து விடு." என்று பிரசாரம் செய்வது தான் மஹாத்மாவின் வேலை. மஹத்-விசலம் ந்ருணாம் க்ரஹிணாம் தீன-சேதஸாம். அவர்கள் குறுகிய அறிவுடையவர்கள், மூட. அவர்கள், மூட, துஷ்க்ருதின என விவரிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மனிதர்கள் எல்லோரும் தனது அறியாமையினால் பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். "இல்லை. அவர்கள் அறியாமையில் இருப்பதாக நீங்கள் எப்படி கூறலாம்?" நீ இப்படி ஒரு கேள்வியை கேட்கலாம். பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவர்கள் எம்.எஸ்.ஸி, டி.எஸ்.ஸி, டாக்டர், பி.எச்.டி என பட்டங்களை பெற்ற பின்னும் எதற்காக அறியாமையில் இருக்கிறார்கள்? "ஆமாம். எப்படி?" மாயையாபஹ்ருத-க்ஞான. வெறும் பெயரளவில் இருக்கும் அவரது அறிவு மாயையால் கவரப்படுகிறது. இல்லாவிட்டால் எதற்காக அவர்கள் இந்த ஐட உலகில் சிக்கி இருக்கிறார்கள்? அறிவு பெற்றவனாக இருந்தால், உனக்கு தெரிந்திருக்கவேண்டும், இந்த ஐட உலகம் நமக்கு ஏற்ற வாழ்விடம் இல்லை என்று. நாம் கடவுளிடம் திரும்பச் செல்லவேண்டும். ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் இதை பிரசாரம் செய்கிறது. "இது உன் இருப்பிடம் அல்ல. இங்கு மகிழ்ச்சியுடன் வாழ முயற்சி செய்யாதே."

துராஷயா யே பஹிர்-அர்த-மானின:. பஹிர்-அர்த-மானின


பஹிர், அதாவது வெளிப்படை சக்தி. அவர்கள் நினைக்கிறார்கள், "ஐடப் பொருள் ரீதியாக, நாம் ஏதாவது ஏற்பாடு செய்தால்..." அவர்களில் சிலர் அறிவியலில் முன்னேற்றத்தின் மூலம் மகிழ்ச்சி அடைய முயற்சி செய்கிறார்கள், அல்லது சிலர் சுவர்கத்தை அடைவதற்காக முயற்சி செய்கிறார்கள், பிறகு சிலர் இதுவோ, அதுவோ ஆக முயற்சி செய்கிறார்கள், ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது கடவுளிடம் திரும்பிச் செல்வதில் தான் இருக்கிறது, என்பதை அவர்கள் அறிவதில்லை.

ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31)


அவர்களுக்கு அது தெரியாது. ஆக இது மிக முக்கியமான இயக்கம் ஏனென்றால் நாம் அவர்களுக்கு குறிப்புகளையும் கல்வியையும் வழங்குகிறோம், எப்படி கடவுளிடம் திரும்பிச் செல்வது. மிக நன்றி.