TA/Prabhupada 0332 - இந்த உலகில் மிக நிம்மதியான நிலைமையை ஏற்படுத்த முடியும்



Room Conversation -- April 27, 1976, Auckland, New Zealand

இந்த உலகில் மிக நிம்மதியான நிலைமையை ஏற்படுத்த முடியும். வெறும் அயோக்கிய தலைவர்களால் கேடு விளைவிக்கும் வகையில் நிர்வகிக்கப்படுகிறது. இல்லாவிட்டால், மக்கள் நிம்மதியாக வாழலாம், திருப்தியாக உண்ணலாம், நேரத்தை மிச்சப்படுத்தலாம், மேலும் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை. உண்பது, உறங்குவது, உடலுறவுக்கான ஏற்பாடும் இருக்கிறது. ஆனால் மூடர்களைப்போலோ அயோக்கியர்களைப்போலோ அல்ல. ஒரு தெளிவான மனிதனைப் போல். ஆனால் இது நவீன நாகரீகமுடைய சமுதாயம், அறிவற்ற, பைத்தியக்கார நாகரீகம். உடலுறவில் இருக்கும் அற்பமான இன்பத்தை மேலும் அதிகரியுங்கள், உடலுரவு தான் மையம், எல்லாம் வீணாகிவிடும். இது பைத்தியக்காரத்தனம். உண்பது - எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், எக்கேடோ சாப்பிட்டு பன்றியாகிவிடவேண்டியது தான். உறங்குவது - அளவில்லாமல், முடிந்தால் இருபத்தி-நான்கு மணி நேரம் உறங்குவது. இது தான் நடந்து கொண்டிருக்கிறது. உண்பது, உறங்குவது, உடலுறவு மற்றும் தற்காப்பு - அணு குண்டு, இந்த ஆயுதம், அந்த ஆயுதம் இவையை கண்டுபிடித்து, அப்பாவி மக்களை கொல்லுவது, தற்காப்பின் பெயரில் தேவையில்லாததெல்லாம் செய்வது. இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது எல்லாம் சாந்தியை நிலைநாட்டுவதற்காக சரியாக பயன்படுத்த முடியும். பிறகு மனம் அமைதியாக இருந்து, எந்த தொந்தரவும் இல்லாதப்போது, உன்னால் மகிழ்ச்சியுடன் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்ய முடியும் மற்றும் நீ உன் வாழ்க்கையின் இலக்கை வெற்றிகரமாக அடையலாம். இது தான் நம் திட்டம்.


நாம் எதையும் முற்றிலும் நிறுத்த விரும்புவதில்லை. எப்படி நிறுத்த முடியும்? எது அடிப்படை தேவை... நாங்கள் சன்னியாசம் ஏற்றிருக்கிறோம். அப்படி என்றால் என்ன? "நாங்கள் உடலுறவை மற்றும் தான் கொள்வதில்லை. மற்றபடி நாங்களும் உண்பது உண்டு, நாங்களும் உறங்குவது உண்டு." அதுவும் நன்கு முதுமை அடைந்த பிறகு தான் நிறுத்தப்படுகிறது. வயதான காலத்தில், என்னைப்போல் ஒருவன், எண்பது வயதில், உடல் இன்பம் பெறுவதற்காக அலைந்தால் அது பார்க் சகிக்காதல்லவா? இளைஞர்களாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு வயதானவன் விபச்சார விடுதிக்கு சென்று இவ்வளவு பணத்தை செலவழிக்கிறான். ஆகையால் இளம் தலைமுறையினருக்கு, இருபத்தி ஐந்திலிருந்து அம்பது வயது வரை க்ரிஹஸ்த வாழ்க்கை அதாவது குடும்ப வாழ்க்கை அனுமதிக்கப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான். அதன் பிறகு உடலுறவை நிறுத்தவேண்டும். அவர்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அப்போது எதற்காக உடலுறவை நீடிக்கவேண்டும்? இல்லை, அவர்கள் உடலுறவுக் கொள்வார்கள், அதே நேரத்தில் மக்கள் தொகையையும் கட்டுபடுத்த விரும்புகிறார்கள், அப்படி என்றால் குழந்தைகளை கொல்லவேண்டியது தான். என்ன இது? வெறும் பாவப்பட்ட வாழ்க்கை. இதற்கு ஈடாக துன்பத்தை அனுபவிப்பார்கள், தொடர்ந்து துன்பப்பட்டுவார்கள். ஆக நாம் அந்த துன்பத்தை நிறுத்த விரும்புகிறோம். இந்த அயோக்கியர்களுக்கு புரிவதில்லை. அவர்கள் "இந்த ஹரே கிருஷ்ண இயக்கம் வெறும் தொந்தரவு" என நினைக்கிறார்கள். ஒரு அயோக்கியத்தனமான நாகரீகம். ஆக நாம் முடிந்த வரை முயற்சி செய்வோம். என்ன செய்வது? நீங்களும் இந்த இயக்கத்துக்கு உதவி செய்யுங்கள். புது சிந்தனைகளை உற்பத்தி செய்து இந்த இயக்கத்தை கெடுத்து விடாதீர்கள். அப்படி செய்யாதீர்கள். பரிந்துரைக்கப்பட்ட வழியில் செல்லுங்கள், தன்னை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள், பிறகு இந்த இயக்கம் நிச்சயமாக வெற்றிகரமாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை மனம் வகுத்ததுப் போல் கெடுக்க நினைத்தால், யாரால் காப்பாற்ற முடியும்? இது கெட்டுவிடும். புதிய கருத்துகளை உற்பத்தி செய்து, கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி உங்களுக்குள்ளேயே சண்டை போட்டால், இது மற்ற போலி இயக்கங்களின் வேறொரு வடிவம் ஆகிவிடும். இது தன் ஆன்மீக ஆற்றலை இழந்து விடும். இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்படி... தற்போது மக்கள் ஆச்சர்யப்பட்டு போகிறார்கள்: "இவ்வளவு வேகமாக நன்மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்திற்கு அப்படி என்ன தான் ஆற்றல் இருக்கிறது ?" மறுபுறம், ஆற்றல் இல்லாமல் எப்படி நன்மாற்றங்களை ஏற்படுத்த முடியும்? இதை ஒத்துக் கொள்ளவேண்டும். ஆக நாம் அந்த ஆற்றலை பாதுகாக்க வேண்டும். இதை ஒரு சாதாரண இசை ரீதியான உச்சரிப்பு ஆக்கிவிடாதீர்கள். இது வேறு, ஆன்மீகமானது. இது இசை ரீதியான உச்சரிப்பாக தோன்றினாலும், இது முற்றிலும் ஆன்மீகமானது. மந்த்ரஷுத்தி-வாச. பாம்புகளைக்கூட மந்திரத்தால் வசீகரப்படுத்தலாம். ஆக மந்திரம் என்பது சாதாரண இசை அல்ல. ஆக நாம் அபராதமின்றி ஜெபித்து, தூய்மையாக இருந்து இந்த மந்திரத்தின் ஆற்றலை பாதுகாக்க வேண்டும். நீங்கள் மந்திரத்தை அசுத்தப்படுத்தினால், அது அவ்வளவு பலன் அளிக்காது.