TA/Prabhupada 0334 - ஆன்மாவுக்கு சுகங்களை வழங்குவது தான் உண்மையில் வாழ்க்கையின் தேவை
Lecture on SB 1.8.33 -- Los Angeles, April 25, 1972
உடலுக்கான வசதிகளால் உன்னை காப்பாற்ற முடியாது. ஒருவன் மிகவும் வசதியாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்காக அவன் சாக மாட்டான் என்று அர்த்தமாகுமா? அவன் இறந்து விடுவான். வெறும் உடலைச் சார்ந்த சுகங்களுடன் வாழ முடியாது. தக்கனபிழைத்துவாழ்தல். பிழைப்புக்கானப் போராட்டம். நாம் வெறும் உடலை கவனித்தால் அதை தர்மஸ்ய க்லானி என்பார்கள், அசுத்தப்படுத்துவது உடலின் தேவைகள் எவை மற்றும் ஆன்மாவின் தேவைகள் எவை என்பது ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆன்மாவுக்கு சுகங்களை வழங்குவது தான் உண்மையில் வாழ்க்கையின் தேவை. மேலும் ஆன்மாவுக்கு பௌதீக மாற்றங்களால் சுகம் தரமுடியாது. ஏனென்றால் ஆன்மாவுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. ஆன்மாவுக்கு ஆன்மீக உணவை வழங்கவேண்டும். அந்த ஆன்மீக உணவு தான் இந்த கிருஷ்ண உணர்வு. நீ ஆன்மாவுக்கு ஆன்மீக உணவை தந்தால்... ஒரு நோயாளிக்கு இரண்டு விஷயங்கள் தேவை. பத்திய உணவு மற்றும் மருந்து. மருந்தை மற்றும் தந்து, பத்திய உணவை தராமல் இருந்தால், அது வெற்றிகரமாக இருக்காது. இரண்டும் இருக்கவேண்டும். ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது ஆன்மாவுக்கு பத்திய உணவு மற்றும் மருந்தை வழங்குவதற்காக உள்ளது. ஹரே கிருஷ்ண மஹா-மந்திரம் தான் மருந்து.
பாவௌஷதச் ச்ரோத்ர-மனோ-அபிராமாத் கா உத்தமஷ்லோக-குணானுவாதாத் புமான் விரஜ்யேத வினா பஷுக்னாத் (ஸ்ரீமத் பாகவதம் 10.1.4)
பரீக்ஷித் மஹாராஜா சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார்: "தாங்கள் எனக்கு வழங்க விரும்பும் இந்த பாகவத உபந்நியாசம், சாதாரண விஷயம் அல்ல." நிவ்ருத்த-தர்சைர் உபகீயமனாத். நிவ்ருத்த-த்ருஷ்ண என்கிற குணமுடையவர்களால் மட்டுமே இந்த பாகவத உபந்நியாசத்தை ருசித்து மகிழ முடியும். த்ருஷ்ண என்றால் ஏங்குதல். இந்த ஜட உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாரொருவன் இந்த ஏக்கங்களிலிருந்து விடுபடுகிறானோ, அவனால் மட்டுமே இந்த பாகவதம் எவ்வளவு சுகமானது என்பதை ருசித்து உணர முடியும். இது அவ்வளவு நல்ல ஒரு விஷயம். நிவ்ருத்த-தர்ஷை... ஹரே கிருஷ்ண மந்திரத்துக்கும் பாகவத எனப்பொருள். முழுமுதற் கடவுளுடன் சம்பந்தப்பட்ட எதுக்கும் பாகவத எனப்பொருள். அது தான் பாகவத. முழுமுதற் கடவுள், பகவான் என்றழைக்கப்படுகிறார். மேலும் அவரை சம்பந்தப்பட்ட எந்த சொல்லும், பாகவத-சப்தமாக மாறிவிடும்.
ஆக பரீக்ஷித் மகாராஜா கூறுவது என்னவென்றால், பாகவதத்தை ருசிக்கும் திறன், பௌதீக ஏக்கங்களை நிறுத்திய ஒருவனுக்கு மட்டுமே இருக்கும். நிவ்ருத்த-தர்ஷைர் உபகீயமானாத். இந்த மாதிரி ஒரு விஷயத்தை எதற்காக ருசிக்க வேண்டும்? பவௌஷதி. பவௌஷதி, அதாவது நமது பிறப்பு மற்றும் இறப்பு என்கிற நோய்க்கான மருந்து. பவ என்றால் "இருப்பு". தற்போது நாம் நோயுற்ற நிலையில் இருக்கிறோம். இந்த அயோக்கியர்களுக்கு எது நோயுற்ற நிலை, எது ஆரோக்கியமான நிலை என்பதே தெரியாது. அவர்களுக்கு எதுவுமே தெரியாது. இருப்பினும் அவர்கள் பெரிய விஞ்ஞானிகள், தத்துவவாதிகளைப் போல் அலைகிறார்கள். "நான் மரணமடைய விரும்பவில்லை. எதற்காக நான் இந்த மரணத்தை அனுபவிக்க வற்புறுத்தப் பட்டிருக்கிறேன்?" இத்தகைய ஆராய்ச்சியே இல்லை. அதற்கு தீர்வும் அவர்களிடம் இல்லை. அதன்பிறகும் அவர்கள் விஞ்ஞானிகள். எப்படிப்பட்ட விஞ்ஞானிகள்? வாழ்வின் துன்பங்களை குறைக்க உதவும் கல்வியின் முன்னேற்றத்துக்கு தான் விஞ்ஞானம் என்று அர்த்தம். அது தான் விஞ்ஞானம். இல்லாவிட்டால் இது என்ன விஞ்ஞானம்? அவர்கள் வெறும் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்; "எதிர்காலத்தில்." ஆனால் நீர் இப்பொழுது என்னத்தை வழங்குகிறீர், ஐய்யா?" "தற்போது உன் துன்பங்கள் அப்படியே நீடிக்கட்டும். எதிர்காலத்தில் நாங்கள் ஏதாவது ரசாயனங்களை கண்டுபிடிப்போம்." இல்லை. வாஸ்தவத்தில் ஆத்யந்திக-துக்க-நிவ்ருத்தி. ஆத்யந்திக என்றால் மிக தீவிரமான. துக்க என்றால் துன்பங்கள். அதுவே மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு ஆத்யந்திக-துக்க என்றால் என்னவென்று தெரியாது. துக்க என்றால் துன்பம். ஆத்யந்திக-துக்க என்பது பகவத்-கீதையில் குறிப்பிட்டப் பட்டிருக்கிறது. "இதோ இருக்கிறது ஐய்யா ஆத்யந்திக-துக்க." என்னது இது?
ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி (பகவத்-கீதை 13.9)
பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய்.