TA/Prabhupada 0333 - எல்லோருக்கும் தெய்வீகமானவன் ஆகும் கல்வியை கற்பிப்பது தான்



Lecture on BG 16.6 -- Hawaii, February 2, 1975


ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது(பகவத்-கீதை 4.2)


அப்படியே தான். இங்கு சூரியன் கடவுளின் படைப்பில் ஒரு சிறிய அம்சம். மேலும் அந்த சூரியன் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது, அதாவது அவரது உடலிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள், முழு பிரம்மாண்டத்துக்கும் வெளிச்சமும் வெப்பத்தையும் தருகின்றன. அதை உன்னால் மறுக்க முடியாது. இது தான் சூரியனின் நிலை. மேலும் பல கோடிக்கணக்கான சூரியன்கள் உள்ளன, சிலசமயம் ஒவ்வொன்றும் இந்த சூரியனைவிட பல மடங்கு பெரியதாக இருக்கும். இது தான் எல்லாத்தைவிட சிறியது. பல மடங்கு பெரிய சூரியன்களும் உள்ளன. ஆக உடலிலிருந்து வரும் அந்த ஒளிக்கதிர்கள் எப்பேர்ப்பட்டது என்று புரிந்து கொள்ளலாம். இதில் எந்த குழப்பமும் இல்லை. உடலிலிருந்து வரும் அந்த ஒளிக்கதிர்களுக்கு தான் பிரம்மன் எனப் பெயர். யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி கோடிஷு வஸுதாதி-விபூதி-பின்னம் தத் ப்ரம்ம: (பிரம்ம ஸம்ஹிதா 5.40) 'அது தான் பிரம்மன், அந்த ஒளி." அதுபோலவே, கிருஷ்ணரும் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்கிறார். இது தான் அருவமாக எங்கும் நிறைந்திருக்கும் தன்மை. எப்படி சூரிய வெளிச்சம் என்பது சூரிய ஒளிக்கதிர்களின் அருவமான விரிவோ, அப்படியே, பிரம்மன் எனப்படும் பிரகாசமும் கிருஷ்ணரின் உடலிலிருந்து வரும் ஒளிக்கதிர்களின் அருவமான விரிவாகும். மேலும் எல்லாவற்றிலும் வசிக்கும் அவரது தன்மை , அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம்... (பிரம்ம ஸம்ஹிதா 5.35). அவர் இந்த பிரம்மாண்டத்திலும் இருக்கிறார். அவர் உன் இதயத்திலும், என் இதயத்திலும் இருக்கிறார். எல்லாம் அவரே. "எல்லாம்" என்றால் ஒவ்வொரு அணுவிலும், பரமாணு. அது தான் அவர் பரமாத்மா தோற்றம். பிறகு கடைசி மற்றும் உன்னதமான தன்மை என்பது கிருஷ்ணரின் தனிப்பட்ட தேகம். ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ:. ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச் சித் ஆனந்த-விக்ரஹ: (பிரம்ம ஸம்ஹிதா 5.1). விக்ரஹ: என்றால் தேகம். அந்த தேகம் நம் தேகத்தைப் போன்றதல்ல. அது சத், சித், ஆனந்த. அவரது தேகத்திற்கு மூன்று குணாதிசயங்கள் உள்ளன. சத் என்றால் சாசுவதமான. ஆகையால் அவர் தேகம், நம்முடைய தேகத்தைவிட வித்தியாசமானது. நம்முடைய இந்த தேகம் வரலாற்றில் நித்தியமானதல்ல. தாய் தந்தையால் இந்த உடல் பெற்றெடுக்கும்போது, தொடக்கத் தேதி ஒன்று இருக்கிறது. மற்றும் இந்த உடல் முடிவடையும் போது, கடைசி தேதி ஒன்று இருக்கிறது. இவ்வாறு இரண்டு தேதிகளுக்கு நடுவில் நிகழும் எதுவும் வரலாறு எனப்படுகிறது. ஆனால் கிருஷ்ணர் அப்படி கிடையாது. அனாதி. கிருஷ்ணரின் தேகம் எப்பொழுது தொடங்கியது என்பதை மதிப்பிட முடியாது. அனாதி. மேலும், ஆதி என்றால் அவரே எல்லோருக்கும் மூத்தவர் ஆவார். அனாதி. அவரே அனாதி; ஒருவராலையும் அவர் முதல்முதலாக தோன்றிய நாளை கண்டுபிடிக்க முடியாது. அவர் வரலாற்றுக்கு அப்பால் பட்டவர். ஆனால் எல்லோரின் ஆரம்ப இடமும் அவர் தான். எப்படி என் தந்தை என் உடலின் ஆரம்ப இடமோ அப்படி தான். என் உடல், உன் உடல், நம் எல்லோருடைய ஆரம்பத்தின் காரணமானவர், தந்தை என்பவர் ஆவார். ஆகையால் அவருக்கு ஆரம்பமே கிடையாது, அதாவது அவருக்கு தந்தையே கிடையாது, ஆனால் அவரே முழுமுதற் தந்தை ஆவார். அது தான் கருத்து, கிறித்துவ கருத்து: கடவுள் தான் முழுமுதற் தந்தை. அது உண்மை, எல்லாருடைய ஆரம்பமும் அவர் தான்.

ஜன்மாதி அஸ்ய யத (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1)


"இருப்பதெல்லாம் கிருஷ்ணரிலிருந்து தான்." அது பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது.


அஹம் ஆதிர் ஹி தேவானாம் (பகவத்-கீதை 10.2)


தேவர்கள்... இந்த பிரம்மாண்டம் பிரம்ம தேவரின் படைப்பு. அவர் தேவர்களில் ஒருவராக கூறப்படுகிறார். ஆக கிருஷ்ணர் கூறுகிறார், அஹம் ஆதிர் ஹி தேவானாம், "நானே தேவர்களின் நிதிமூலம்." ஆக இவ்வாறு கிருஷ்ணரை அறிந்தால் நீ திவ்யமானவன் ஆவாய். திவ்யம். நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் எல்லோருக்கும் தெய்வீகமானவன் ஆகும் கல்வியை கற்பிப்பது தான். அது தான் நம் திட்டம். தைவீகமானவனாவதில் என்ன இலாபம்? இது முந்தைய பதத்தில் விவரிக்கப் பட்டிருக்கிறது.


தைவீ ஸம்பத் விமோக்ஷய (பகவத்-கீதை 16.5)


நீ தைவீக குணங்களை பெற்றால், அபயம் ஸத்வ-ஸம்ஷுத்தி: க்ஞான-யோக-வ்யவஸ்திதி


அதை பற்றி நாம் முன்பே பேசியிருக்கிறோம். ஆக நீ தைவீகமானவன் ஆனால்... தைவீகமானவனாவதில் எந்த தடையும் இல்லை. நீ வெறும் பயிற்சி செய்ய வேண்டியது தான். எடுத்துக்காட்டாக, யார் வேண்டுமானாலும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆகமுடியும். யார் வேண்டுமானாலும் அமெரிக்க ஜனாதிபதி ஆகமுடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் நீ தகுதி பெற்றிருக்க வேண்டும். நீ தகுதி அடைந்தால், நீ எதுவாகவும்... எந்த பதவியையும் அடையலாம். அதுபோலவே, தைவீகமானவன் ஆவதற்கு, அத்தகைய தகுதியை நீ பெற்றிருக்கவேண்டும். எப்படி தைவீகம் அடைவது? அதை முன்பே விவரித்திருக்கிறோம். ஆக நீ தைவீக குணங்களால் தகுதி பெற்றிருந்தால், அதற்கு என்ன பலன்? தைவீ ஸம்பத் விமோக்ஷய. மோக்ஷ. மோக்ஷ என்றால் முக்தி. ஆக நீ தைவீக குணங்களை உள்ளத்தில் வளர்த்திருந்தால், பிறகு நீ முக்தி அடைவதற்கு யோக்கியமானவன் ஆவாய். முக்தி என்றால் என்ன? மீண்டும் மீண்டும் ஏற்படும் பிறப்பும், இறப்பிலிருந்தும் விடுபடுவது. அது தான் உண்மையான துன்பம். இந்த நவீன, அயோக்கிய நாகரீகத்தினருக்கு வாஸ்தவத்தில் இந்த துன்பத்தின் முடிவு என்னவென்று தெரியாது. அவர்களுக்கு தெரியாது. அத்தகைய கற்றலே இல்லை. அந்த கல்வியே அவர்களிடம் இல்லை. அவர்கள் நினைக்கிறார்கள், "இந்த சிறிய வாழ்க்கையில், ஐம்பதோ, அறுபதோ, அதிகபட்சம் நூறு வயதுக்குள், ஒரு நல்ல மனைவி, நல்ல வீடு மற்றும் நல்ல மோட்டார் வாகனம், எழுபது மைல் வேகத்தில் செல்லுமாறு, அப்பரம் ஒரு விஸ்கி பாட்டில்..." அது தான் அவன்‌ உன்னத நிலை. ஆனால் அது விமோக்ஷய கிடையாது. உண்மையான விமோக்ஷய, முக்தி, என்றால் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய், இதுவெல்லாம் இனிமேல் ஒருபோதும் ஏற்படாது. அது தான் விமோக்ஷய. ஆனால் அவர்களுக்கு தெரியவே தெரியாது.