TA/Prabhupada 0339 - கடவுள் ஆள்பவர், நாம் ஆளப்படுபவர்கள்
Lecture on SB 5.5.2 -- Hyderabad, April 11, 1975
நாம் இந்த பௌதீக தளத்தில் இருக்கும்வரை, உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை, வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்: "நான் இந்தியன்," "நீ அமெரிக்கன்," "நீ ஆங்கிலேயன்," "நீ இது, அது," பல விஷயங்கள், பல அடையாளங்கள். ஆகையால் நீ ஆன்மீக உணர்வின் தளத்திற்கு உயர விரும்பினால், ஸர்வோபாதி-வினிர்முக்தம் என்பது தான் அதற்கு தீர்வு.
ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170)
அது தான் ஆரம்பம். அப்படி என்றால்
ப்ரஹ்ம-பூத தளம் தான் ஆரம்பம். ப்ரஹ்ம-பூத... (ஸ்ரீமத் பாகவதம் 4.30.20)
அதே தான். நாரத பஞ்சராத்திரத்தில், ஸர்வோபாதி-வினிர்முக்தம், மற்றும்
ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா (பகவத்-கீதை 18.54)
பகவத்-கீதை, ஆதே விஷயம் தான். வேத இலக்கியத்தில் எங்கு தேடினாலும், அதே விஷயம் தான். ஆக இது ஆணையுரிமை வாய்ந்தது. இதற்கு எந்த மறுப்பும் கிடையாது. பௌதீக தளத்தில், நீ ஒரு புத்தகம் எழுதலாம், நான் ஒரு புத்தகம் எழுதிருக்தலாம், பிறகு நான் உன் கருத்தை மறுக்கலாம், நீயும் என் கருத்தை மறுக்கலாம். அது தான் பௌதீக தளம். ஆனால் ஆன்மீக தளம் என்பது தன்னுணர்வைப் பெற்றிருக்கும் தளமாகும். இதில் எந்த விதமான தவறும் இல்லை, எந்த பிரமையும் இல்லை, குறைபாடுள்ள புலன்களின் குறுக்கீடு இல்லை மற்றும் எந்த ஏமாற்றுதலும் இல்லை. அது தான் ஆன்மீக தளம். ஆகையால் பகவத்-கீதை கூறுகிறது,
ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி (பகவத்-கீதை 18.54)
நாரத பஞ்சராத்திரத்திலும் இதே தான் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது
ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத் பரத்வேன நிர்மலம் ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேஷ-ஸேவனம் பக்திர் உச்யதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170)
நாம் இந்த ஆன்மீக தளத்திற்கு தான் வரவேண்டும், அதாவது ஹ்ருஷீகேன... ஹ்ருஷீக என்றால் புலன்கள், ஜட புலன்கள் மற்றும் ஆன்மீக புலன்கள். ஆன்மீக புலன்கள் என்றால் என்ன? ஆன்மீக புலன் என்றால் உணர்ச்சியற்ற நிலை அல்ல. இல்லை. சுத்திகரிக்கப்பட்ட புலன்கள். புலன்கள் அசுத்தமாக இருக்கும்போது நான் நினைப்பது என்னவென்றால், "இது இந்திய உடல்; ஆகையால் இந்தியாவுக்கு பணியாற்றுவது தான் என் வாழ்வின் நோக்கம்," "இது அமெரிக்க உடல்; ஆகையால் அமெரிக்காவுக்கு பணியாற்றுவது தான் என் வாழ்வின் நோக்கம்," இது தான் உபாதி. ஆனால் ஆன்மீக உணர்வு என்றால் ஸர்வோபாதி-வினிர்முக்தம். "இனிமேல் நான் இந்தியன் அல்ல, அமெரிக்கன் அல்ல, பிராம்மணன் அல்ல, சூத்திரன் அல்ல." பிறகு நான் யார்? சைதன்ய மகாபிரபு கூறியதுபோல், கிருஷ்ணரும் கூறியிருக்கிறார்,
ஸர்வ–தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்... (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 18.66)
அது தான் ஆன்மீக தளம், அதாவது "நான் இந்த தர்மத்தையோ அந்த தர்மத்தையோ சேர்ந்தவன் அல்ல. நான் வெறும் கிருஷ்ணரிடம் சரணடைந்த ஒரு ஜீவன்." இது தான்
ஸர்வோபாதி-வினிர்முக்தம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170)
ஒருவர் இந்த ஆன்மீக புரிதலின் தளத்துக்கு வரமுடிந்தால், அதாவது "நான் ஆன்மா.
அஹம் ப்ரஹ்மாஸ்மி. நான் கடவுளின் அம்சம்..." மமைவாம்ஷோ ஜீவ-பூத (பகவத்-கீதை 15.7)
கிருஷ்ணர் கூறுகிறார், "எல்லா ஜீவராசிகளும் என் அம்சங்களே.
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி (பகவத்-கீதை 15.7)
"மனதாலையும் உடலாலையும் மூடப்பட்டு, அவன் உயிர் வாழ்வதற்காக போராடுகிறான்." இதுதான் நிலைமை. ஆகையால் நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு இந்த கல்வியை அளிக்கிறது, அதாவது: "நீ இந்த உடல் அல்ல, இந்த மனமும் அல்ல, புத்தியும் அல்ல, ஆனால் இதற்கு அப்பால் பட்டவன். நீ ஆன்மா." கிருஷ்ணர் இதை 'மமைவாம்ச' என உறுதிப்படுத்துகிறார். கிருஷ்ணர் ஆன்மா, பரமாத்மா, என்றால், நீயும் ஆன்மா. ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால் அவர் மீஉயர்ந்தவர்; நாம் தொண்டர்கள். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் எகோ யோ பஹுனாம் விததாதி... (கதா உபநிஷத் 2.2.13). இது தான் வேதத்தின் கற்பித்தல். அவரும் ஒரு உயிர்வாழி, நாமும் உயிர்வாழிகள், ஆனால் அவர் மீஉயர்ந்தவர் மற்றும் நாம் அவருக்கு கீழானவர்கள். அது தான் வித்தியாசம். எகோ யோ பஹுனாம் விததாதி காமான். எப்பொழுது உனக்கு இது புரிகிறதோ, அதாவது "கிருஷ்ணர், அதாவது முழுமுதற் கடவுள், அவர் தான் முழுமுதற் ஆன்மா மற்றும் நாம் அந்த ஆன்மாவின் அம்சங்கள், அவர் தான் பராமரிப்பாளர் மற்றும் நாம் பராமரிக்கப்பட்டுபவர்கள். அவர் ஆள்பவர், நாம் ஆளப்படுபவர்கள். ஆக இது தான் முதல் உணர்தல். இது ப்ரம்ம-பூத என்றழைக்கப்படுகிறது. இந்த ப்ரம்ம-பூத நிலையிலிருந்து மேலும் முன்னேறினால், பல ஜென்மங்களுக்கு பிறகு கிருஷ்ணர் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. அது தான்...
பஹுனாம் ஜன்மனாம் அந்தே (பகவத்-கீதை 7.19)
கிருஷ்ணர் பகவத்-கீதையில் கூறுகிறார்,
பஹூனாம் ஜன்மனாம் அந்தே க்ஞானவான் மாம் ப்ரபத்யதே. ஒருவன் பக்குவமான 'க்ஞானவான்', விவேகமுள்ளவனாக இருந்தால், வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு-துர்லப (பகவத்-கீதை 7.19)
இதுதான் அவன் செயல்முறை. பிறகு வாஸீதேவர், அதாவது வஸீதேவரின் மகனே தான் எல்லாம் என்று அவனால் புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்தல் தான் தேவை. அது தான் கிருஷ்ண உணர்வின் பக்குவமான நிலை.