TA/Prabhupada 0358 - இந்த பிரிவியிலே நம் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் மறுபிறவி தேவை இல்லை



Lecture on BG 7.14 -- Hamburg, September 8, 1969

இப்போது, எப்படி நாம் மரணம் சந்திக்கலாமா? பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற? பின்னர் இந்த மனித வாழ்க்கையினால் என்ன பயன்? பூனைகள் மற்றும் நாய்களுக்கும், உடல் கிடைத்ததுள்ளது. அவர்கள் மரணத்தை சந்திக்க வேண்டும். எனக்கு இந்த உடல் கிடைத்ததுளது; நானும் மரணத்தை சந்திப்பேன் எனவே பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற நானும் மரமரணத்தை சந்தித்தால் பொருள் என்ன? பின்னர் என்ன மாதிரியான மனிதன் நான்? அல்ல. சாஸ்திரங்கள் என்ன கூறுகிறது என்றால் labdhvā su-durlabham idaṁ bahu-sambhavānte. வேறு வேறு உடல்களில் பற்பல பிறவிகளுக்கு பிறகு.. உங்களுக்கு இந்த உடலை மாற்றங்களை பற்றி புரியுதா.. இது Darwin Theory போல் அல்ல, ஆனால் நாம் வேறு வேறு உடல்கள் மாறுவது உண்மை. இது வேதத்தில் சொல்லபற்றிருக்கிறது. குறைந்த தர விலங்குகளின் வாழ்க்கைலிருந்து உயர் தர விலங்கு வாழ்க்கை மாறுகிறோம். எனவே வாழ்க்கையில் இந்த மனித வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இந்த மனித வாழ்க்கை பல பல பிறவிகளுக்கு பிறகு கிடைத்துள்ளது Labdhvā su-durlabham.இது மிக அறிய வாய்ப்பு நீங்கள், உயிரியலாளர்கள் இந்த உலகில் எத்தனை வகையான உயிரினம் உள்ளன என்று பாருங்கள் 8,400,000 உயிரினங்கள் உள்ளன. இதில் மனிதன் மிகச் சிறிய அளவில் உள்ளன். 8,400,000 உயிரினங்களில், மனித இனங்கள் 400,000 உள்ளன. மற்ற விலங்குகலோடு ஒப்பிடுகையில், மிகச் சிறிய அளவு இது. அதில், நாகரீகமில்லாதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட மிரக குணம் கொண்டவர்கள். பின்னர், நாகரீகமான மனிதர்கள் இருக்கிறார்கள் நம்மை போன்றவர்கள். இவர்களில், பலருக்கு ஆன்மீக வாழ்க்கை என்றால் என்று தெரியாது அது பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது: manuṣyāṇāṁ sahasreṣu (BG 7.3).

பல ஆயிரக்கணக்கான மனிதர்களில், சிலரே தீர்வுகாண ஆர்வமாக உள்ளார்கள். அனைவரும் அல்ல. அவர்கள்ளுக்கு பிரச்சனையே என்ன என்று கூட தெரியாது. அதை பற்றி அவர்கள் கவலை படமாட்டார்கள். அவர்கள், "சரி, பிரச்சனைகல் ஒரு புரம் இருக்கட்டும். நமக்கு இந்த மனித வாழ்க்கை கிடைத்ததுவிட்டது, நன்றாக அனுபவிப்போம்." ஆகையால், அவர்கள் கிட்டத்தட்ட மிருகர்களே. ஆனால் யாரொருவர் பிரச்சனைகளுக்கு முடிவை தேடுகிறாரரோ, அவர்களே மனிதர்கள். மற்றவர்கள், மனிதர்களாகக்கூட இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட விலங்குகளாக உள்ளன. எனவே உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த உடல் பிரச்சினையை தீர்க்க, ஒழுங்காக பயன்படுத்தப்பட வேண்டும். நமது வாழ்க்கையை பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி அலைக்கவிட்டால், அது புத்திசாலித்தனமல்ல. புத்திசாலித்தனமல்ல எனவே இந்த மனித வாழ்க்கை நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு செய்யவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். இது வேத நாகரிகம். அவர்கள் பிரச்சினைகள், உண்மையான பிரச்சினைககளின் தீர்வுக்கு அதிக அழுத்தம் கொடுப்பவர்கள். பௌதிக வாழ்க்கை வழியோ அதிகமாக பிரச்சினைகளை உருவாக்குக்கின்றனர். இது பரிபூரண மனித நாகரிகம் அல்ல. சரியான மனித நாகரீகத்தில் மக்கள் மிகவும் அமைதியான வாழ்கை அமைத்தது யோசிக்க வேண்டும் "எப்படி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கான்வேன்? இதற்குவேண்டிய எங்கே ஞானத்தை பெறமுடியும்?" இதுவே மனிதன் வாழ்க்கை. வேதத்தில் இதுவே முக்கியமாக அறிவுறுத்த பட்டுள்ளது. இந்த மனித பிறவியை பயன்படுத்திக்கொண்டு உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள் மரணத்திற்கு முன் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுங்கள். பூனைகள் மற்றும் நாய்கள் போல் இறக்க வேண்டாம்.

வேதம் சொல்கிறது என்னவென்றால், etad viditvā yaḥ prayāti sa brāhmaṇaḥ: "பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு செய்ய முயற்சிதிச்சு பின்னர் இறப்பவர் பிராமணர் அவர்." மற்றும் பூனைகள் மற்றும் நாய்கள் போல் இறப்பவர் கிருப்பன என்று அழைக்கப்படுகிறார். கிருப்பன என்றால் மிகவும் குறுகிய அறிவுடையவன் என்று அர்த்தம். எனவே நாம் பூனைகள் மற்றும் நாய்கள் போல் இறக்க கூடாது. நாம் பிராமணர் போன்று இறக்க வேண்டும். இந்த ஒரு வாழ்வில் முழுமையாக தீர்வு செய்யவில்லை என்றால், உங்களுக்கு அடுத்த வாழ்க்கை வாய்ப்பு கிடைக்கும். இந்த இளைஞர்கள் போல, அவர்கள் இந்த பிரச்சனை ஒரு தீர்வு செய்வதற்கு கடந்த வாழ்க்கையில் முயற்சி செய்தவர்கள், ஆனால் அது முழுமையாகவில்லை எனவே மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது. இந்த பிறவியில் நீங்கள் தீர்மானமாக இருக்கவேண்டும் கிருஷ்ண பக்தி வருபவர்கள், மிகவும் தீர்மானமாக இருக்க வேண்டும் "இந்த வாழ்வில் நாம் ஒரு தீர்வை செய்ய வேண்டும். மறுபிறவி இனி இருக்கக்கூடாது." என்று உறுதியாய் இருக்க வேண்டும். எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு செய்து மற்றும் மீண்டும் நாம் தேவலோகத்தை அடைந்து, நித்திய, பேரின்ப மற்றும் முழுமையான ஞானமான பெற்ற வாழ்க்கை பெற வேண்டும். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிக்கோளாகும்.