TA/Prabhupada 0364 - கிருஷ்ணர் இருக்கும் இடத்துக்கு போக தேவையான தகுதி அடைவது சுலபம் இல்லை



Lecture on SB 5.5.23 -- Vrndavana, November 10, 1976

அடிப்படை குணங்களான ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களை கட்டுப்படுத்தினால் ஒழிய மகிழ்ச்சியைப் பெற முடியாது. அது சாத்தியம் அல்ல. ததோ ரஜஸ்-தமோ-பாவா:. ரஜஸ்-தமோ-பாவா என்றால் காம மற்றும் லோப. என்னுள் சிற்றின்ப வேட்கை இருக்கும்வரை, செல்வத்தை அதிகரிக்கும் பேராசை இருக்கும்வரை, புலன்களை அளவில்லாத அனுபவிக்கும் ஆசை இருக்கும்வரை... அதுவும் பேராசை தான். அவசியமானவையை மற்றும் வைத்து திருப்தியாக இருக்கவேண்டும். ஆஹார-நித்ரா-பய-மைதுனம் ச ஸாமான்யம் எதத் பஷுபிர் நராணாம். ஆஹார என்றால் உண்பது. ஆஹார, நித்ரா அதாவது உறங்குவது, பயப்படுவது மற்றும் புலனின்பத்தில் ஈடுபடுவது. இவைகள் தேவையானவை தான், ஆனால் அதிகரிப்பதற்கு அல்ல, குறைப்பதற்கு. ஒரு நோயாளி என்பவன் விரும்பியதையெல்லாம் சாப்பிடக் கூடாது. அப்படி தான். நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாக்டர் என்ன பரிந்துரைப்பார் என்றால் "நீ சிறிதளவு கஞ்சியோ க்ளூகோஸோ ஏற்கலாம். தேவலை ஆவதற்கு விருப்பம் இருந்தால் எந்த திட உணவும் கூடாது." அதுபோலவே, இவைகள் எல்லாம் உடல் இருக்கும்வரை மட்டுமே தான் தேவையானவை. ஆஹார-நித்ரா-பய-மைதுன. ஆனால் இதுவெல்லாம் குறைக்கப்படவேண்டியவை. அது தான் மனித நாகரிகம், அதிகரிப்பது அல்ல. பிருந்தாவனத்தின் கேஸ்வாமிகளைப் போல் தான்.


ஆஹார-நித்ரா-பய-மைதுன இவைகளை அதிகரிப்பதற்காக அவர்கள் இங்கு வரவில்லை. இல்லை. இவையை குறைப்பதற்காக இங்கு வந்தார்கள். நித்ராஹார-விஹாரகாதி-விஜிதௌ. அது தான் தேவை. இது தான் பிருந்தாவன-வாசி, பிருந்தாவனத்தில் வசித்து, ஆஹார-நித்ரா-பய-மைதுன என்பதை அதிகரிப்பதல்ல. அது பிருந்தாவன-வாசம் அல்ல. குரங்குகளும் தான் பிருந்தாவனத்தில் வாழ்கின்றனர், நாய்களும் பன்றிகளும் தான் பிருந்தாவனத்தில் வசிக்கின்றனர். ஆனால் அவைகளுக்கு ஆஹார-நித்ரா-பய-மைதுன என்பதை குறைப்பது எப்படி என்பது தெரியாது. நீங்கள் குரங்குகளை பார்க்கலாம். அவைகளும் பிருந்தாவனத்தில் இருக்கின்றனர். ஒரு ஆண் குரங்கை மூன்று டஜன் பெண் குரங்குகள் பின்தொடருவதை பார்க்கமுடியும். அது பிருந்தாவன-வாசம் அல்ல. ஆஹார-நித்ரா. பொருள் என்னவென்றால் பிராம்மண கலாச்சாரம் தேவை, தமோ, ஸமோ. அது தான் தேவை. அது தான் பிராம்மண கலாச்சாரம். துரதிர்ஷ்டவசமாக தற்போதைய நாகரீகம் கட்டுப்படுத்துவதற்காக சாதகமாக இல்லை. அவர்கள் வெறும் அதிகரித்து வருகிறார்கள். மேற்கத்திய நாகரீகம் என்பது புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்கு தான், "இயந்திரங்கள், இயந்திரங்கள், இயந்திரங்கள், இயந்திரங்கள்." மற்றும் பிராம்மண கலாச்சாரம் என்பது ஸமோ தமோ திதிக்ஷ. திதிக்ஷ என்றால் எதாவது குறைப்பாட்டினால் நான் துன்பத்தை அனுபவிக்க வாய்ப்பு இருக்கலாம். துன்பப் படலாம். ஆக துன்பத்தை அனுபவிக்கவும் பயிற்சி ஏற்றிருக்கவேண்டும். துன்பப் படுவது, அது தான்


தபஸ்யா. தபஸா ப்ரஹ்மச்சர்யேன (ஸ்ரீமத் பாகவதம் 6.1.13)


தபஸ்யா என்பதின் ஆரம்பம் பிரம்மச்சரியம் தான். நாம் உடலுறவில் அதாவது புலனுகர்வில் மட்டும் தான் பயிற்சி பெற்றிருக்கிறோம்.


தபஸ்யா என்றால் முதலில் இதை நிறுத்துவது. தபஸா ப்ரஹ்மச்சர்யேன (ஸ்ரீமத் பாகவதம் 6.1.13)


இதற்கு தான் பயிற்சி. ஆகையால் கிருஷ்ணர் இருக்கும் இடத்துக்கு போக தேவையான தகுதி அடைவது சுலபம் இல்லை. அது அவ்வளவு சுலபமாக... நாம் நமது பௌதீக வாழ்க்கையை கிட்டத்தட்ட பூஜியம் ஆக்கிக் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட பூஜியம் அல்ல - வாஸ்தவத்தில் பூஜியம். அன்யாபிலாஷிதா-ஷூன்யம் (பக்தி ரஸாம்ருத ஸிந்து 1.1.11). அது தான் தேவை, பயிற்சி. ஆகையால், இந்த ஸமோ தமோ திதிக்ஷ என்பதில் பயிற்சியைப் பெறுவதற்கு தான் நமது இந்த கிருஷ்ண பக்தி மையம். ஆக ஒருவன், இந்த ஸமோ தமோ திதிக்ஷ என்பதில் பயிற்சி பெறுவதற்காக எந்த அளவுக்கு திறன் வாய்ந்தவன், என்பதை அறிய விரும்புகிறோம். சிலர், புதிதாக வந்திருந்து, எதாவது வேலை செய்ய சொன்னவுடன், இதில் புலன்களுக்கு இன்பமே இல்லையே என்று சென்றுவிடுவார்கள். அப்படி என்றால் அவர்கள் தயாராக இருப்பதில்லை. அவர்கள் சென்றுவிடுவதே நல்லது. வங்காளத்தில் சொல்லுவார்கள், துஷ்ட கோருதே ஷூன்ய கோவாலொ: "மாட்டு கொட்டையில் மாடே இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, முரட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்கக் கூடாது." ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது, மிருகங்களின் நிலையிலிருக்கும் மனிதர்களை பிராம்மணனின் நிலைக்கு உயர்த்துவதற்கு தான். ஆகையால் இரண்டாவது தீக்ஷையாக, புனிதமான பூணல் சடங்கு (உபனயனம்) நிகழ்த்தப்படுகிறது, அதற்கு என்ன அர்த்தம் என்றால், "இவன் இப்போது ஸமோ தமோ திதிக்ஷ அர்ஜவ என்பதில் பயிற்சி பெற்றிருக்கிறான், தாம் யார், கிருஷ்ணர் யார், கிருஷ்ணருடன் அவன் உறவு என்ன, கிருஷ்ணரின் திருப்திக்காக எப்படி செயல்படுவது, என்பதையெல்லாம் அறிவான்." இவை தான் பிராம்மண தகுதிகள் ஆகும். ஒருவன் இந்த நிலைக்கு உயர்ந்திருந்தால்... இந்த நிலைக்கு பெயர் தான் ஸத்வ-குண.