TA/Prabhupada 0367 - பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணரை மையமாகக் கொண்ட இடம்



Lecture on BG 7.1 -- Bombay, December 20, 1975

ஆக கிருஷ்ணரே நேராக வந்து அவரை புரிந்துகொள்ள உதவுவதற்காக பகவத்-கீதையை கற்பிக்கிறார், ஆகையால் நாம் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாம் மனித பிறவி என்கிற இந்த வாய்ப்பை தவரி விடுகிறோம். கிருஷ்ணர், நாய் பூனைகளுக்கு பகவத்-கீதையை கற்பிக்கவில்லை. அவர் மிகச் சிறந்த செல்வாக்குள்ள நபருக்கு கற்பிக்கிறார்,


இமம் ராஜர்ஷயோ விது


ஆகையால் பகவத் கீதை ராஜ ரிஷிகளுக்கு, மிகவும் பணக்காரர்கள், மிகவும் செழுமையான, அதே சமயத்தில் சாது. முற்காலத்தில் எல்லா அரசர்களும் ராஜர்ஷியாக இருந்தனர். ராஜா மற்றும் ரிஷி என்ற சொற்களை இணைத்த சொல். ஆக பகவத்-கீதை என்பது சோம்பேறி வகையினோருக்காக அல்ல. சமுதாயத் தலைவர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்:

யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ் தத் தத் எவேதரோ ஜன (பகவத்-கீதை 3.21)


தம்மை சமுதாயத்தின் தலைவர்களாக தெரிவிப்பவர்கள், பகவத்-கீதையை கற்கவேண்டும், அதாவது நடைமுறைக்கு ஏத்த உண்மையான தலைவராக எப்படி ஆவது. பிறகு சமுதாயம் அவர்களால் நன்மை அடையும். மேலும் நாமும் பகவத்-கீதை மற்றும் கிருஷ்ணரின் சொற்களை பின்பற்றினால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இது ஒரு மதப் பிரிவைச் சார்ந்த மனோபாவமோ அல்லது ஒரு வகையான வெறித்தனமோ அல்ல. இது அப்படி கிடையாது. இது விஞ்ஞானம் - சமூக அறிவியல், அரசியல் விஞ்ஞானம், கலாச்சார விஞ்ஞானம். எல்லாம் இருக்கிறது.

ஆக எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் குரு ஆகுங்கள். அது தான் சைதன்ய மகாபிரபுவின் உத்தரவு. எல்லோரும் குரு ஆகவேண்டும் என்பது தான் அவர் விருப்பம். எப்படி? அதற்கு அவர் கூறுகிறார்:


யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ ஆமார ஆக்ஞாயா குரு ஹனா தார எய் தேஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128)


இது தான் குரு. நீங்கள் ஒரு குடும்ப உறுப்பினர் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு உயிர்வாழிகள், உங்கள் மகன்கள், உங்கள் மகள்கள், உங்கள் மருமகள்கள், நீங்கள் அவர்களுக்கு குரு ஆகலாம். இப்படியேதான், மாலையில் உட்கார்ந்து பகவத்-கீதையைப் பற்றி பேசலாம்,


யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128)


எதையும் புதியதாக உருவாக்க தேவையில்லை. கற்பித்தல் இருக்கிறது; அதை அப்படியே ஒப்பித்தால் போதும். அதை அவர்கள் கேட்கட்டும் - நீ குரு ஆகிராய். இது கஷ்டமானதே அல்ல. ஆக அது தான் நம் பிரசாரம். நாம் ஒருவர் மட்டும் குரு ஆக விரும்பவில்லை. அதற்கு மாறாக நாம் பிரசாரம் செய்ய விரும்புவது எப்படியென்றால், ஒவ்வொரு, தலைவனும், அல்லது எந்த மனிதனும், தன் பகுதியில் குரு ஆகலாம். யார் வேண்டுமானாலும் அதை செய்யலாம். ஒரு கூலித் தொழிலாளி கூட, அவனுக்கு குடும்பத்தினர் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள், அவன் படிக்காதவனாக இருந்தாலும் பரவாயில்லை. அவன் கிருஷ்ணரின் கற்பித்தலை கேட்டு, அப்படியே அதை பிரசாரம் செய்யலாம். இது தான் நமக்கு தேவை. மேலும் நாம் எல்லா செல்வாக்குள்ள நபர்களை, தலைவர்களை இதை கற்க அழைக்கின்றோம். இது மிகவும் எளிதானது:


மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (பகவத்-கீதை 18.65)


மற்றும் கிருஷ்ணரின் இந்த உத்தரவை நிகழ்த்தினால், மாம் எவைஷ்யஸி, "நீ என்னிடம் வருவாய்." என அவர் உத்தரவாதம் அளிக்கிறார்.


யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (பகவத்-கீதை 15.6)


த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (பகவத்-கீதை 4.9)


இது ரொம்பவும் சுலபமான விஷயம்.

ஆக எங்கள் ஒரே வேண்டுகோள் என்னவென்றால் சமுதாயத்தின் தலைவர்களானோர், பகவத்-கீதையின் கற்பித்தலை தீவிரமாக ஏற்கவேண்டும், தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். அதுதான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். இதில் எந்த கஷ்டமும் இல்லை; இது மிகவும் சுலபமானது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு பலனாக, நீ புரிந்துக் கொண்டவுடன், மக்களும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வார்கள்.


ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத (BG 4.9)


யாரொருவர் கிருஷ்ணரை பிரிந்துக் கொள்கிறாரோ, பலன் என்னவென்றால் த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி... இந்த உடலை விட்டுப் பிறகு அவன் எந்த ஜட உடலையும் ஏற்பதில்லை. அவன் தன் ஆன்மீக அடையாளத்தை அடைந்து, கிருஷ்ணரின் சமுதாயத்தில் இன்பம் பெறுகிறான். அதுதான் பிருந்தாவனம். கோபீஜன-வல்லப. கிருஷ்ண... கிருஷ்ண, பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணரை மையமாகக் கொண்ட இடம். அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் அன்புக்குரியவர். கோபீயர்கள், மாடு மெய்க்கும் சிறுவர்கள், கன்றுக்குட்டிகள், மரங்கள், பழங்கள், பூக்கள், தந்தை, தாய் - அனைவருக்கும் கிருஷ்ணர் என்றால் அளவற்ற பிரியம். அது தான் பிருந்தாவனம். இது ஒரு நகல், இந்த பிருந்தாவனம், மற்றும் அங்கிருப்பது உண்மையான பிருந்தாவனம். இதுவும் உண்மையானது தான். தைவீகமான பூரண உலகில் எந்த வித்தியாசமும் கிடையாது.

ஆனால் நாம் புரிந்து கொள்வதற்காக ஒரு அசல் பிருந்தாவனம் உள்ளது. சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்ப-வ்ருக்ஷ-லக்ஷாவ்ருதேஷு ஸுரபீர் அபிபாலயந்தம் லக்ஷமி-ஸஹஸ்ர-ஷத-ஸம்ப்ரம-ஸேவ்யமானம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி (பிரம்ம ஸம்ஹிதா 5.29) வேணும் க்வனந்தம் அரவிந்த- தலாயதாக்ஷ்ம் பர்ஹாவதம் அஸிதாம்புத-ஸுந்தராங்கம் கந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம் கோவிந்தம் (பிரம்ம ஸம்ஹிதா 5.30). இது தான் விவரணம், கோலோக பிருந்தாவனம்.