TA/Prabhupada 0366 - நீங்கள் அனைவரும் குரு ஆகுங்கள், ஆனால் அபத்தமாக எதையும் பேசாதீர்கள்
Lecture on SB 6.1.21 -- Honolulu, May 21, 1976
ஆக சைதன்ய மகாபிரபுவின் புதிய வெளிப்படுத்தல் என்னவென்றால்:
க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (ஸ்ரீமத் பாகவதம் 1.3.28)
யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128)
சைதன்ய மகாபிரபுவின் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பிரசாரம் என்ன? அவர் கூறுகிறார் "உங்களில் ஒவ்வொருவரும் குரு ஆகவேண்டும்." அவருக்கு போலியான அயோக்கிய குருவை அல்ல, உண்மையான குருவை விரும்புகிறார். அது தான் அவர் விருப்பம். மக்கள் இருளில் இருப்பதால், அவர்களை விழிப்பூட்டுவதற்கு பல லட்சக்கணக்கான குருக்கள் நமக்கு தேவை. ஆகையால் சைதன்ய மகாபிரபுவின் பணி என்பது, அவர் கூறுகிறார், "நீங்கள் ஒவ்வொருவரும் குரு ஆகுங்கள்." ஆமார ஆக்ஞயா குரு ஹய தார எய் தேஷ. வெளிநாட்டுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. எங்கே இருக்கிறாயோ அங்கேயே கற்றுத் தரலாம், குரு ஆகலாம். தேவையில்லை. எய் தேஷ. அவர் கூறுகிறார், எய் தேஷ. உன்னிடம் சக்தி இருந்தால், நீ வெளிநாட்டுக்கு செல்லலாம், ஆனால் தேவையில்லை. நீ எந்த நாட்டில், எந்த நகரித்தில், எந்த கிராமத்தில் இருக்கிறாயோ அங்கு நீ குரு ஆகலாம். இது தான் சைதன்ய மகாபிரபுவின் திட்டப்பணி: ஆமார ஆக்ஞாயா குரு ஹய தார எய் தேஷ. "இந்த நாடு, இந்த இடம்." சரி, "ஆனால் என்னிடம் எந்த தகுதியும் இல்லையே. நான் எப்படி குரு ஆகமுடியும்?" தகுதி அவசியம் இல்லை. "அப்படி இருந்தும் நான் குரு ஆகலாமா?" ஆமாம். "எப்படி?"
யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128)
"யாரை சந்தித்தாலும், நீ கிருஷ்ணர் கூறியதை அப்படியே கற்பித்தால் போதும். அவ்வளவு தான். நீ குரு ஆகிறாய்." ஒவ்வொருவரும் குரு ஆவதற்கு ஆவலாக இருக்கிறார்கள், ஆனால் அயோக்கியர்களுக்கு குரு எப்படி ஆவது என்பதே தெரியாது, சுலபமான விஷயம். இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு எத்தனை குருக்கள் வருகிறார்கள், எல்லாம் அயோக்கியர்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் கிருஷ்ணரின் கற்பித்தலைப் பற்றி பேசமாட்டார்கள். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் இது முதல் முறையாக இருக்கலாம். இல்லாவிட்டால் எல்லாம் அயோக்கியர்கள், அவர்கள் வேறு எதையோ கற்பித்தார்கள், ஏதோ தியானமாம், இது, அது, எல்லாம் ஏமாத்து வேலை. கிருஷ்ணர் கூறியதை அப்படியே கற்பிப்பவன் தான் உண்மையான குரு. சொந்தமாக எதாவது கற்பித்தலை உருவாக்கமுடியாது. அப்படி கிடையாது. அது தான் சைதன்ய மகாபிரபு. புதிதாக எதையும் உருவாக்க தேவையில்லை. கற்றல் ஏற்கனவே இருக்கிறது. வெறும் "இது இப்படி" என சொல்லவேண்டியது தான். அவ்வளவு தான். இது என்ன கஷ்டமான காரியமா? தந்தை கூறினார், "இது ஒரு ஒலிவாங்கி." ஒரு குழந்தை இப்படி சொல்லலாம், "அப்பா இது ஒரு ஒலிவாங்கி என கூறினார்". அவன் குரு ஆகிறான். இதில் என்ன பிரச்சினை? அதிகாரிம் வாய்ந்தவர், தந்தை, கூறியிருக்கிறார், "இது ஒலிவாங்கி." ஒரு பிள்ளையால், "இது ஒலிவாங்கி." என்று மட்டுமே சொல்லமுடியும். அதுபோலவே, கிருஷ்ணர் கூறுகிறார், "தான் முழுமுதற் கடவுள்." ஆக நானும், "கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள்," எனக் கூறினால், மற்றோரை ஏமாற்றி நானே கிருஷ்ணர் அதாவது கடவுள் ஆக விரும்பினால் தவிர எனக்கு அதில் என்ன கஷ்டம் இருக்கமுடியும்? தம்மை கடவுள் எனக் கூறுவது மோசடி. ஆனால் நான் இந்த எளிதான உண்மையை கூறினால், "கிருஷ்ணர் தான் பரம புருஷரான முழுமுதற் கடவுள். அவர் தான் அனைத்துக்கும் சொந்தக்காரர். அவர் தான் வழிபடவேண்டியவர்," பிறகு அதில் எனக்கு என்ன பிரச்சினை? ஆக அது தான் நம் திட்டப்பணி. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக் கொள்வது இது தான், நீங்கள் அனைவரும் குரு ஆகுங்கள் ஆனால் அபத்தமாக எதையும் பேசாதீர்கள். அது தான் விண்ணப்பம். கிருஷ்ணர் எதை கூறியிருக்கிறாரோ அதை மட்டும் பேசுங்கள். அப்போது தான் ஒரு பிராம்மணன் ஆகமுடியும். ஒரு குரு, எல்லாம் ஆகமுடியும். மிக நன்றி.