TA/Prabhupada 0409 - பகவத் கீதைக்கு விளக்கமளித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை



Cornerstone Laying -- Bombay, January 23, 1975

இந்த இயக்கம் மிக மிக அதிகாரப்பூர்வமானது, பல்வேறு நிகழ்ச்சிகள் இதன் சட்ட வரையறைக்குள் அடங்கும். எனவே பாம்பே வாசிகளுக்கு முக்கியமாக நமது உறுப்பினர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் அன்புகூர்ந்து ஆர்வமாக ஈடுபட்டு இந்த இயக்கத்தை பாம்பேயில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பது தான். பல ஆண்களும் பெண்களும் இங்கே வருகை தந்திருக்கின்றனர், நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் கேலிக்கூத்தோ மன பிராந்தியோ அல்ல, பகவத் கீதையில் கூறியுள்ள தரத்திற்கு ஏற்ற வகையில் அதிகார பூர்வமானது, நம்முடைய இந்த இயக்கமானது பகவத் கீதையை ஆதாரமாகக் கொண்டது. பகவத் கீதை உண்மையுருவில், அதில் நாங்கள் புதிதாக அர்த்தம் சொல்வதில்லை. முட்டாள் தனமாகவும் விளக்குவதில்லை ஏனெனில் நான் காரணமாகத்தான் முட்டாள்தனமாக என்ற வார்த்தையை பயன் படுத்துகிறேன் கிருஷ்ணரின் வார்த்தைக்கு விளக்கம் எதற்கு தேவை? நான் கிருஷ்ணரை விட பெரியவனா? அல்லது கிருஷ்ணர் நான் விளக்கிக் கூறும் படியாக எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா? கிருஷ்ணரின் முக்கியத்துவம்தான் என்ன? என்னை நான் கிருஷ்ணரை விட பெரியதாக கருதி என்னுடைய சொந்த விளக்கங்களை தரலாம், ஆனால் அது அபச்சாரம் நான் கிருஷ்ணரை விட பெரியவனாக எப்படி ஆகமுடியும்? பகவத்கீதையை உண்மையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாம் படிக்க வேண்டியது பகவத் கீதை உண்மையுருவில். அர்ஜுனன் எப்படி எடுத்துக்கொண்டானோ அப்படி. பகவத் கீதையை கேட்டவுடன் அர்ஜுனன் சொன்னது ஸர்வம் ஏதம் ருதம் மன்யே: "நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் கேசவா!" என்று. அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இது தான் பகவத் கீதையை புரிந்துகொள்ளுதல், மாறாக நான் பகவத் கீதையை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று சொல்லி அதற்கு முட்டாள்தனமான விளக்கங்களை கூறுவது அல்ல. அப்போதுதான் மக்கள் என் தத்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்வது பகவத் கீதை அல்ல. பகவத் கீதைக்கு விளக்கம் சொல்லுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமக்கு விளங்காத போது தான் விளக்கம் அளிக்க வேண்டும், பொருள் தெளிவாக புலப்படும் போது "இதுதான் ஒலிபெருக்கி," என்று நாம் சொல்லும்போது இது ஒலிபெருக்கி என்பது அனைவருக்கும் புரியும், விளக்கம் தர வேண்டும் என்ற தேவை எங்கே ஏற்படுகிறது? தேவையே இல்லை அது முட்டாள்தனம் நம்மை திசை திருப்ப கூடியது. பகவத்கீதைக்கு எந்தவித விளக்கமும் தேவையில்லை அது அப்படியே இருக்கிறது. அனைத்தும் தெளிவாக இருக்கிறது. பகவான் கிருஷ்ணர் கூறுவது போல...... "நீங்கள் அனைவரும் சன்னியாசியாகுங்கள் உங்கள் தொழில்களை விட்டு விடுங்கள்," என்று கிருஷ்ணர் சொல்லுவதில்லை. ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய ஸம்ஸித்தி: லபதே நர: (ப.கீ 18.46). கிருஷ்ணர் சொல்கிறார், "நீ உன் தொழிலை செய்து கொண்டு இரு. உன் அலுவலை கவனித்துக் கொண்டே இரு. நீ மாறத் தேவையில்லை. இருந்தும் நீ கிருஷ்ணபக்தி செய்யலாம் உன் வாழ்க்கையை வெற்றி அடையச் செய்யலாம்," இதுவே பகவத் கீதையின் செய்தி. பகவத் கீதை நமது சமூக வாழ்க்கையையும் ஆன்மீக வாழ்க்கையையும் திருப்பி போடப் போவதில்லை. எதுவுமே சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முறை ஆக்கப்பட வேண்டும். அதன் சிறந்த அதிகாரியே கிருஷ்ணர் தான்.

எனவே இந்த மையத்தை வெற்றி அடைய செய்யுங்கள், இங்கு கூடியுள்ள மக்களே! நமக்கு மிக அருமையான இடம் கிடைத்திருக்கிறது. நாம் இங்கே கட்டிடம் எழுப்புகிறோம். நீங்கள் இங்கே வந்து வார இறுதிகளிலாவது தங்கலாம் என்ற நோக்கத்துடன் தான் இது கட்டப்படுகிறது. நீங்கள் தங்கினால் பணி ஓய்வு பெற்ற வயதான ஆண்களும் பெண்களும் இங்கே வந்து தங்கலாம். அதற்குப் போதுமான இடம் எங்கே உள்ளது. ஆனால் பகவத் கீதையின் கொள்கையை மட்டும் உலகெங்கும் பரப்ப முயலுங்கள். அதுவே இந்தியா உலகுக்கு அளிக்கும் பரிசாகும். சைதன்ய மகாபிரபு வின் விருப்பமானது இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதர்கள், நாய்களோ பூனைகளோ அல்லர்........ பூனைகளும் நாய்களும் மற்றவர்களுக்கு நன்மை பயக்க எந்த விதத்திலும் பாடு பட முடியாது. அவர் கூறுகிறார்,

பாரத-பூமிதே மனுஷ்ய-ஜன்ம ஹைல
யார ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார"
(CC Adi 9.41)

பாரத பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக்க வேண்டும் ஏனெனில் உங்களுக்கு அதற்கான உத்தி கிடைத்திருக்கிறது. அதுவே பகவத் கீதை. அதனைப் புரிந்து கொள்ள முயலுங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்குங்கள். பின்னர் இந்த செய்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள். அதுவே பரோபகாரம். உண்மையில் இந்தியா மற்றும் இந்திய மக்கள் பரோபகாரத்திற்கு என்றே பிறந்தவர்கள், மற்றவர்களை சுரண்டுவதற்காக பிறந்தவர்கள் அல்லர். அது நம்முடைய குறிக்கோள் அல்ல ஆனால் அதுதான் நடக்கிறது உண்மையில். அனைவரும் இந்தியாவை விட்டு வெளியே செல்கின்றனர் வெளியே சென்று சுரண்டுகின்றனர். இப்போதுதான் இந்தியா முதன்முறையாக வெளிநாட்டவருக்கு ஏதோ ஒன்றை தருகிறது, அதுவே ஆன்மீக அறிவு. அதை நீங்களே கண்கூடாகக் காணலாம். நாம் கொடுக்கிறோம், எடுத்துக் கொள்ளவில்லை, நாம் பிச்சை எடுப்பதற்கு செல்வதில்லை, "எங்களுக்கு கோதுமை வேண்டும், பணம் வேண்டும், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பதில்லை". நாம் மிகப்பெரிய விஷயத்தை கொடுக்கிறோம் அதனால் அவர்கள் நம்மை மதிக்கிறார்கள் இல்லையேல் ஏன் இந்த இளைஞர்களும் பெண்களும் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பின்னால் வருகிறார்கள்? இதிலிருந்து ஏதும் உருப்படியாக தங்களுக்கு கிடைக்கிறது என்று அவர்கள் உணர்கிறார்கள், இதற்கு ஆற்றல் இருக்கிறது மாபெரும் ஆற்றல் அவர்கள் தங்களை அமெரிக்கர்கள் கனடியர்கள் ஆஸ்திரேலியர்கள் என்று எண்ணுவதில்லை, நாமும் இந்தியர்கள் என்று எண்ணுவதில்லை. ஆன்மீக தளத்தில் நாம் அனைவரும் ஒன்று.

வித்யா-வினய-ஸம்பன்னே
ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகே
ச பண்டிதா: ஸம-தர்ஷின
(ப.கீ 5.18)

இதுவே உண்மையான அறிதல் - பாடம். ஆத்மவத் ஸர்வ-பூதேஷு. மாபெரும் அரசியல் வாதியான சாணக்கியப் பண்டிதர் கூட இவ்வாறே கூறினார்

மாத்ருவத் பர-தாரேஷு
பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ரவத்
ஆத்மவத் ஸர்வ-பூதேஷு
ய: பஷ்யதி ஸ பண்டித:

எனவே இது ஒரு மாபெரும் கலாச்சாரம். பகவத் கீதை உண்மையுருவில் எனவே இங்கு கூடியுள்ள பொறுப்புமிக்க ஆண்களும் பெண்களும் இந்த மையத்தை சிறப்பானதாக்க வேண்டும் இங்கு வந்து பகவத்கீதை படிக்க வேண்டும் அதன் உண்மையுருவில் முட்டாள்தனமான விளக்கங்களை அறுத்து நான் முட்டாள் தனமான என்று மறுபடி மறுபடி ஏன் சொல்கிறேன் என்றால் இதற்கு விளக்கமே அவசியமில்லை இதில் ஒவ்வொன்றும் தெளிவாக உள்ளது தொடக்கம் முதல் இருந்தே

தர்ம-க்ஷேத்ரே குரு-க்ஷேத்ரே
ஸமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்டவாஷ் சைவ
கிம் அகுர்வத ஸஞ்ஜய
(ப.கீ 1.1)

மிகவும் தெளிவாக உள்ளது