TA/Prabhupada 0410 - நமது நண்பர்கள் ஏற்கனவே மொழிபெயர்ப்பைத் தொடங்கிவிட்டார்கள்Cornerstone Laying -- Bombay, January 23, 1975

குருக்ஷேத்திரம் இப்பொழுதும் தர்ம க்ஷேத்திரம் தான் குருக்ஷேத்ரே தர்மம் ஆசரேத்: என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது "குருக்ஷேத்திரத்திற்குச் சென்று தர்மச் சடங்குகள் செய்ய வேண்டும்" எனவே அது பன்னெடுங்காலமாய் தர்மக்ஷேத்ரமாக இருந்து வருகிறது. "குருக்ஷேத்திரம் என்பது நம் உடல், தர்ம க்ஷேத்ரம் இந்த உடல் என்று நாம் ஏன் விளக்கம் சொல்லவேண்டும்? எதற்காக?" மக்களை ஏன் திசை திருப்ப வேண்டும்? திசை திருப்புவதை நிறுத்த வேண்டும். குருக்ஷேத்திரம் இன்னும் இருக்கிறது, குருசேத்திரம் என்னும் ரயில் நிலையம் இன்றும் இருக்கிறது, எனவே பகவத் கீதையை அதன் உண்மையுருவில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையை சிறப்பானதாக்குங்கள். இந்தச் செய்தியை உலகெங்கும் பிரச்சாரமும் செய்யுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். உலகம் சந்தோஷமாக இருக்கும், ஆம் உண்மையில் தான். எனக்கும் இப்பொழுது வயதாகிவிட்டது எனக்கு 80 வயது ஆகிவிட்டது, என் வாழ்க்கை முடிந்துவிட்டது. எனக்கு சில பொறுப்பான இந்தியர்கள் வேண்டும். அவர்கள் பிற நாட்டவரோடு சேர்ந்து - பிற நாட்டவர்கள் தான் மிக நன்றாக ஒத்து உழைக்கின்றனர் இல்லையேல், என்னால் இத்தனை குறுகிய காலத்தில் பிரச்சாரம் செய்திருக்க முடியாது. உலகம் முழுவதும் இந்த இயக்கத்தைப் பரப்புவதற்கு நான் எடுத்துக் கொண்டது ஆறு ஐந்து வருடங்கள் மட்டும் தான். எனக்குப் படித்த இந்தியர்களின், முக்கியமாக இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. முன்வாருங்கள். எங்களுடன் தங்குங்கள். பகவத் கீதையைப் படியுங்கள், நாங்கள் எதையும் உருவாக்குவதில்லை. உருவாக்குவதற்கு ஒன்றுமில்லை, நாம் எதை உற்பத்தி செய்வது? நாம் அனைவரும் முழுமை அற்றவர்கள். என்ன இருக்கின்றதோ அதனை நாம் பயில்வோம் வாழ்க்கையில் கடைபிடிப்போம் பின் அதனை உலகெங்கும் பரவச் செய்வோம். இதுவே நமது குறிக்கோள்.

இன்று சிறந்த சுபதினம். பெருத்த சிரமத்திற்கு பின்பு நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முயற்சியில் தயைகூர்ந்து ஒத்துழையுங்கள், உங்களால் முடிந்தவரை ப்ராணைர் அர்தைர் தியா வாசா, என்ற இந்த நான்கு விஷயங்களையும் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையால், சொற்களால், செல்வத்தால்.... ப்ராணைர் அர்தைர் தியா வாசா ஷ்ரேய-ஆசரணம் ஸதா. இதுவே மனித வாழ்க்கையின் குறிக்கோள். உங்களிடம் என்ன இருக்கின்றதோ... "நான் ஏழையாக இருப்பதால் என்னால் இந்த இயக்கத்திற்கு உதவ முடியாது" என்று சொல்வதற்கில்லை. உங்களிடம் ஏதோ இருக்கின்றது - உங்களிடம் வாழ்க்கையே இருக்கின்றது, எனவே உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள் அது மிக உன்னதமானது. உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியவில்லை என்றால் சிறிது பணம் கொடுங்கள். அது உங்களால் முடியுமானால்... முடியாவிட்டால் ஏழையாக இருப்பீர்களானால் உங்களால் பணம் கொடுக்க முடியாது ஆனால் அறிவை கொடுக்கலாம். சரி நீங்கள் முட்டாளாக இருந்தால் உங்கள் சொற்களைத் தாருங்கள் எந்த வழியிலும் உங்களால் இந்த இயக்கத்திற்கு உதவ முடியும் நற்பணி வேலைகள் செய்ய முடியும். இந்தியாவிலும் சரி வெளி நாடுகளிலும் சரி. இதுவே எனது வேண்டுகோள். நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் ஆம் இன்று ஏகாதசி தான். நாம் அனைவரும் பெரும்பாலும் விரதம் இருக்கிறோம். அதற்கான பிரசாதம் வழங்கப்படும். இங்கு பிரசாதத்தை பற்றிய கேள்வி இல்லை. நாம் கையில் எடுத்துக்கொள்ளும் முக்கியமான வேலை என்ன என்பதே கேள்வி. கடவுள் பக்தி உள்ள இயக்கத்தினை எப்படி பரப்புவது. இல்லையேல் நீ எப்போதும் சந்தோஷமாக இருக்கவே முடியாது. வெறும் ஜடஉணர்வு மட்டுமே மிஞ்சும் க்ருஹ ஷேத்ர.... அதோ க்ருஹ-க்ஷேத்ர-ஸுதாப்த-வித்தைர் ஜனஸ்ய மோஹோ 'யம் அஹம் மமேதி (ஸ்ரீமத் பாகவதம் 5.5.8). இந்த ஜட நாகரீகம் என்பதே பாலியல் இச்சையை தான் குறிக்கிறது பெண் ஆணுக்கு வலை வீசுகிறாள், ஆண் பெண்ணுக்கு வலை வீசுகிறான். பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பவம் ஏதம் தயோர் மித:. ஒருவரோடு ஒருவர் இணைந்தவுடன் அவர்களுக்கு கிரகம் அதாவது வீடு கிரகஷேத்திரம் இடம் தேவைப்படுகிறது க்ருஹ-க்ஷேத்ர-ஸுத,குழந்தைகள், நண்பர்கள், பணம், மற்றும் மோஹோ மாயை அஹம் மமேதி (ஸ்ரீமத் பாகவதம் 5.5.8), நான் எனது என்பதே ஜட நாகரிகம் ஆனால் மனித வாழ்க்கை இதற்காக ஏற்பட்டது அல்ல நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1). எனவே நீங்கள் படிக்க வேண்டாம் நமக்கு இப்போது படிப்பதற்கு போதுமான புத்தகங்கள் இருக்கின்றன நம் புத்தகங்களைப் படிப்பதற்கு எந்த சிரமமும் இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்புகள் உடன் நாம் அதனை கொடுத்திருக்கிறோம் இங்கு இருக்கிற ஒவ்வொருவருக்கும் ஆங்கிலம் தெரியும். நாம் ஹிந்தி குஜராத்தி மற்றும் அனைத்து மொழிகளிலுமே இதை தருகிறோம் நமது நண்பர்கள் ஏற்கனவே மொழிபெயர்ப்பைத் தொடங்கிவிட்டனர். எனது அறிவுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை எனவே தயவு செய்து இங்கு வாருங்கள் வாரத்திற்கு ஒரு முறையேனும் இங்கு வந்து உட்கார்ந்து இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் படியுங்கள் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அதனை உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள் பாரதவர்ஷத்தின் குறிக்கோள் இதுதான்.

பாரத-பூமிதே மனுஷ்ய-ஜன்ம ஹைல
யார ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார
(CC Adi 9.41)

இதுவே பரோபகார இயக்கம். அடுத்தவருக்கு நன்மை செய்வதற்கு என்றே ஏற்பட்டது. பூனைகளையும் நாய்களையும் போன்றதல்ல பணத்தை மட்டும் கொண்டு வாருங்கள் அனுபவித்து செல்லுங்கள். மனித வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல மனித வாழ்க்கை பரோபகாரதிற்காக உள்ளது மக்கள் அறியாமையில் இருக்கின்றனர், கடவுளைப் பற்றிய அறிவு இல்லை வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லை அவர்கள் வெறும் நாய்களையும் பூனைகளையும் பன்றிகளையும் போல வேலை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும். மனித வாழ்க்கை இத்தகைய கல்வி கற்பதற்கான ஒரு வாய்ப்பு இதுவே மக்களை கல்வி கற்க வைப்பதற்கான மையம், உண்மையில் அவர்களை மனிதர்கள் ஆக்கி அவர்கள் வாழ்க்கையை சிறப்பானதாக்கும் மையம்.

மிக்க நன்றி ஹரே கிருஷ்ணா