TA/Prabhupada 0416 - ஜபித்தல், ஆடுதல், லட்டுவும் கச்சோரியும் உண்ணுதல் மட்டுமே போதுமானது



Lecture & Initiation -- Seattle, October 20, 1968

இந்த இயக்கத்திற்கு மிகுந்த அவசியம் இருக்கிறது. அதனாலேயே நாம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்பி வருகின்றோம். இது மிகவும் எளிமையானது, நடைமுறைக்கு சாத்தியமானது மேலும் இந்த யுகத்திற்கு பொருத்தமானதும் கூட. நீங்கள் எத்தனை தகுதி உடையவர் என்பது முக்கியமல்ல, உங்கள் கடந்த காலம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் இங்கு வாருங்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உங்கள் நாவினால் ஜெபியுங்கள். பகவான் உங்களுக்கு நாவை இதற்காகத்தான் தந்திருக்கின்றார். அதன் மூலம் கிருஷ்ண பிரசாதத்தை சுவையுங்கள். உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்க மிகவும் சுலபமான முறை. இதுவே நம் செயற்திட்டம். அனைவரையும் இந்த இயக்கத்தில் இணையும் படி அழையுங்கள். அதனால் நீங்களே பலன் அடைவீர்கள். அதை நீங்களே நடைமுறையில் காணலாம். ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம். தன்னை உணர்தல் என்ற இந்த செயல்முறை கண்கூடாக தெரியக் கூடியது என்று பகவத் கீதை கூறுகிறது நேரடியாக தெரியக் கூடியது ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம். எப்படி நீங்கள் உணவு உண்ணும்போது தான் உண்ணுகிறோம் என்பதை அறிவீர்கள், உங்கள் பசி மாற்றப்படுகிறது என்பதை உணர்வீர்கள், உங்களுக்கு அதனால் பலம் கிடைக்கிறது என்பதை அறிவீர்கள், அதற்கு எந்த சான்றிதழும் அவசியமில்லை, அது மிக நல்ல செயல் என்று நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். ப்ரத்யக்ஷாவகமம் பிரத்யட்சம் என்றால் நேரடியாக ஆவகமம் - நீங்கள் நேரடியாக உணர்வீர்கள். நீங்கள் தியானம் செய்வதாக இருந்தால் யானம் என்று கூறப்படுகிறதே, அதனால் எத்தனை தூரம் முன்னேறுகிறார்கள் என்று அறிவதற்கில்லை, நீங்கள் மறதியில் இருக்கின்றீர்கள், உங்களுக்கே தெரியாது ஆனால் இங்கோ நீங்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம் செய்வதால் நேரடியாக உணர்வீர்கள். என்னிடம் பல மாணவர்கள் இருக்கின்றார்கள், அவர்களின் கடிதங்கள் என்னிடம் உள்ளன, அவர்கள் எப்படி நேரடியாக உணர்ந்தார்கள் என்பதற்கு அது சான்று. ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸு-ஸுகம் கர்தும் அவ்யயம் (பகவத் கீதை 9.2). அதை செய்வதற்கும் நன்றாக இருக்கும். ஜபம் செய்துவிட்டு ஆடி பாடி விட்டு உணவு உண்பது என்றால் அதைவிட வேறென்ன வேண்டும்? ஜெபித்தல் நடனமாடுதல் அருமையான லட்டும் கச்சோரியுன் உண்ணுதல் இது மட்டும் தான் ஸு-ஸுகம் கர்தும் அவ்யயம். இந்தப் பயிற்சியை நாம் செய்யும் போது அதன் செயல் முறையே மிகவும் இனிமையானது என்றால் எது செய்தாலும், இந்த இயக்கத்தில் ஒரு சிறு விழுக்காடுகள் நடைமுறைப்படுத்தினால் கூட அது நமக்கு நிலையான சொத்து நிலையான சொத்து. அதுவே நாம் இரண்டு விழுக்காடு மூன்று விழுக்காடு 4 விழுக்காடு... அடுத்த ஜென்மத்தில் செய்யலாம் என்று காத்திருக்க வேண்டியதில்லை. முடித்துவிடுங்கள் 100 விழுக்காடு. அதனை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை, எனவே முடித்து விடுவோம். "நான் இந்த ஜென்மத்தில் சில விழுக்காடுகள் மெய்ஞ்ஞானம் அடைந்து விட்டு, மற்றதை அடுத்த ஜென்மத்தில் செய்கிறேன்" என்று சொல்லி காத்திருக்க வேண்டியதில்லை. மெய்யுணர்தலை எப்படி சோதித்துப் பார்ப்பது? முழு விழுக்காடும் முடித்துவிட்டோம் என்று எப்படி தெரிந்து கொள்வது? சோதனை இதுதான். நாம் எவ்வளவு தூரம் பகவான் கிருஷ்ணரை நேசிக்கிறோம் என்பதே. உன்னிடம் அன்பு இருக்கின்றது நீ ஒருவரிடம் அன்பு செலுத்துகின்ற உன் அன்பை பிரித்துக் கொடுக்கும் பொழுது அதாவது, "என் நாடு, என் சமூகம், என் காதலி இது அது அல்லது காதலன் என அனைவரையும் நேசிக்கலாம் அதனோடு கிருஷ்ணரையும் நேசிக்கலாம்" இல்லை. இதுவும் சரிதான். ஆனால் அனைத்து முக்கியத்துவமும் கிருஷ்ணரை நேசிப்பதன் மேல் செலுத்துவோமானால் நாம் மற்ற அனைத்தின் மேலும் இயல்பாகவே அன்பு செலுத்த தொடங்கி விடுவோம். நம் வாழ்க்கை முழுமை பெற்றுவிடும். மற்ற அன்புப் பரிமாற்றங்கள் எதுவும் குறைந்து போகாது. கிருஷ்ண பக்தி கொண்ட ஒருவன் தன் குடும்பத்தையும் சமூகத்தையும் விரும்பவே செய்வான். விலங்குகளையும் விரும்புவான், எறும்பையும் விரும்புவான், அவன் அன்பு மிகவும் விரிவடைந்ததாகி விடும், அது மிகவும் சிறந்தது. நாம் எவ்வளவு தூரம் அன்பு செலுத்த முடியும்? எப்படியும் ஏதாவது மனக்கசப்பு ஏற்படுமானால் அன்பு முறிந்து விடும். ஆனால் கிருஷ்ணரிடம் கொண்ட அன்பு மிகவும் வலிமை வாய்ந்தது எப்பொழுதும் முறியாது விரிவடைந்து கொண்டே போகும். இது மிகவும் சிறந்தது. அன்பு உன்னிடம் ஏராளமாக இருக்கிறது. அன்பு செலுத்தும் உன்னுடைய தன்மையை வேறு இடத்தில் கை மறதியாக வைத்திருக்கிறாய். அதனை கிருஷ்ணர் பால் செலுத்தினால் கிருஷ்ணரை முழுமையாக நேசித்தால் நாட்டிற்கும் சமூகத்திற்கும் நண்பனுக்கும் உன்னிடம் உள்ள அன்பு முன்பைவிட அதிகரிப்பதை உணர்வாய். இது மிகவும் சிறந்த ஒன்று