TA/Prabhupada 0415 - ஆறு மாதத்தில் நீ கடவுளாகிவிடலாம் என்பது தவறான கருத்து
Lecture & Initiation -- Seattle, October 20, 1968 ஆக இந்த யுகத்தில் ஆயுள் மிகவும் நிலையற்றதாக இருக்கின்றது. எந்த நிமிடமும் நாம் இறக்கலாம் ஆனால் இந்த வாழ்வில் மனித வாழ்வு மிகப்பெரிய ஒரு பயனுக்காக உள்ளது. அது என்ன? துக்ககரமான நமது வாழ்க்கைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை உருவாக்குவது. இதில் நாம் இந்த மனித உடலுடன் இருக்கும் வரையில் ஒரு உடலில் இருந்து மற்றொரு உடல் என்று மாறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி (பகவத்கீதை 13.9) பிறப்பு இறப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆத்மா இறப்பற்றது, நிலையானது ஆனால் உடையை மாற்றிக் கொள்வது போல மாற்றமடையும். எனவே இதனை ஒரு பிரச்சனையாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இது ஒரு பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதே மனிதப்பிறவி எடுத்ததின் முக்கிய நோக்கம். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான அறிவும் இல்லை இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. அதனால் வாழ்நாள் - வாழ்நாள் அதிகம் கிடைக்குமானால் நாம் யாரையாவது சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது இ ஒரு நல்ல சத்சங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கையின் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கலாம் ஆனால் அதுவும் இப்போது சாத்தியமில்லாததாகிவிட்டது. ஏனெனில் வாழ்நாள் மிகவும் குறைந்து உள்ளது ப்ராயேண அல்பாயுஷ: ஸப்ய கலாவ் அஸ்மின் யுகே ஜனா: மந்தா:. நமக்கு கிடைத்த வாழ்நாளையும் நாம் சரியாக பயன்படுத்துவது கிடையாது. விலங்குகள் போல நாம் நம் வாழ்நாளை - உண்ணுதல் தூங்குதல் இனப்பெருக்கம் செய்தல் காத்துக்கொள்ளுதல் என்ற இவறுக்கே பயன்படுத்துகிறோம். அவ்வளவு தான். இந்த யுகத்தில் போதிய உணவு கிடைத்து விட்டால் "எனது இன்றைய கடமை முடிந்தது" என்று எண்ணி விடுகின்றனர். ஒரு மனைவி அமைந்து இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பிறந்து அவர்களை பராமரக்க முடிந்தால் தன்னை பெரிய மனிதன் என்று நினைத்துக் கொள்கிறான். அவன் ஒரு குடும்பத்தை பராமரிக்கிறான் எனினும் பெரும்பாலானோர் குடும்பப்பொறுப்பு என்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை. இந்த யுகத்தின் அறிகுறிகள் இதுதான்.
வாழ்நாள் குறைந்து விட்ட போதிலும் நாம் அக்கறையுடன் இருப்பதில்லை. மந்தம் - மிகவும் மெதுவாகி விட்டோம். இங்கே நாம் கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பிரச்சாரம் செய்கிறோம், யாரும் அதை அக்கறையாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த இயக்கம் என்ன என்று அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் அக்கறை காட்டும் சிலரும் ஏமாற்றப்பட விரும்புகிறார்கள். மலிவான எதையோ வேண்டுகிறார்கள், மெய் ஞானம் பெறுவதற்கும் மலிவான எதையோ தேடுகிறார்கள். அவர்களிடம் பணம் இருக்கிறது யாருக்காவது ஏதாவது சன்மானம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். "நான் உனக்கு சில மந்திரம் தருகிறேன், இப்படி 15 நிமிடம் தியானம் செய்தால் ஆறு மாதத்திற்குள் நீ தெய்வம் ஆகிவிடுவாய்," என்று சொல்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். மந்தம் மந்த மதயோ மந்த மதயோ என்றால் முட்டாள்தனமான முடிவு என்று அர்த்தம். "வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு 35 டாலர்கள் மட்டும் செலவு செய்தால் போதுமா?" என்று அவர்கள் யோசிப்பதில்லை. அவர்கள் மூடர்களாகிவிட்டார்கள். உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நீங்கள் இந்த இந்தக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினால் "அது மிகவும் கடினம் நான் வெறும் 35 டாலர்கள் செலவழித்து என் பிரச்சினையை தீர்த்துக் கொள்கிறேன்," என்று சொல்கிறார்கள். இது என்ன? அவர்கள் ஏமாற்றப்பட தயாராக இருக்கிறார்கள் தானே. அவர்களையே மந்த மதயோ என்பர். ஏமாற்றுபவர்கள் வந்து அவர்களை ஏமாற்றத்தான் செய்வார்கள். மந்தா: ஸுமந்த-மதயோ மந்த-பாக்யா (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10) மந்த பாக்கிய என்றால் அவர்கள் பாக்கியம் அற்றவர்கள் என்றும் பொருள். கடவுளே அவர்களிடம் வந்து "என்னிடம் வாருங்கள்," என்றால் கூட அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. அதனால்தான் அவர்கள் பாக்கிய மற்றவர்கள், தெரியுமா. யாரோ ஒருவர் உங்களிடம் வந்து ஒரு கோடி டாலர்கள் அளிக்கும் போது நீங்கள் எனக்கு இது பிடிக்காது "எனக்கு வேண்டாம்," என்று சொன்னால் நீங்கள் பாக்கிய மற்றவர் தானே? எனவே சைதன்ய மஹாபிரபு சொல்கிறார்
- ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம ஏவ கேவலம்
- கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா
- (சைதன்ய சரிதாம்ருதம் ஆதிi 17.21)
"மெய்ஞ்ஞானம் அடைவதற்கு ஹரே கிருஷ்ண மகாமந்திரம் ஜபம் செய்தால் மட்டுமே போதுமானது அதன் விளைவுகளை நீங்களே காணலாம்." ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை துரதிஷ்டவாதிகள். மிக எளிமையான முறையை உயர்ந்த ஒன்றை பிரச்சாரம் செய்யும்போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஏமாற்றப்பட தயாராக இருக்கிறார்கள் என்றே பொருள். மந்தா: ஸுமந்த-மதயோ மந்த-பாக்யா ஹ்யுபத்ருதா: (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). பல இடங்களிலும் அவர்கள் அடிபட்டு இந்தப் பலகை அந்தப் பலகை என்று பல்வேறு இடங்களில்... இதுவே அவர்களுடைய நிலை குறைந்த ஆயுள், வேகம் குறைவு, புத்தியும் குறைவு, அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஏமாற்றப்பட தயாராக இருக்கிறார்கள். துரதிஷ்ட வாதிகள் மிகவும் சஞ்சலத்துடன் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின் நிலைமை இதுதான். நீங்கள் அமெரிக்காவில் இந்தியாவில் எங்கு பிறந்திருந்தாலும் இதுதான் நிலைமை.