TA/Prabhupada 0420 - நீங்கள் இந்த உலகின் பெண் பணியாளர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்
Lecture & Initiation -- Seattle, October 20, 1968
பிரபுபாதர்: (யாகத்திற்கு மந்திரம் உச்சாடனம் செய்கிறார், பக்தர்கள் பதில் கொடுக்கிறார்கள்) நன்றி. இப்போது என்னிடம் ஜெப மாலையை கொடுங்கள். ஜெப மாலை. யாராவது... (பிரபுபாதர் ஜெப மாலையில் உச்சாடனம் செய்கிறார், பக்தர்கள் ஜெபிக்கிறார்கள்) உன் பெயர் என்ன? பில்: பில். பிரபுபாதர்: இப்போது உன் ஆன்மீகப் பெயர் விலாஸ-விக்ரஹ. விலாஸ-விக்ரஹ. வி-லா-ஸ-வி-க்-ர-ஹ. விலாஸ-விக்ரஹ. நீங்கள் இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், பெரிய மணி: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இந்த விரலை நீங்கள் தொடக் கூடாது. அதேபோல் அடுத்தது. இவ்வாறாக நீங்கள் இந்த பக்கம் வரவும், மறுபடியும் இங்கிருந்து ஆரம்பித்து இந்த பக்கம். உங்கள் ஞான சகோதரர்கள் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். மேலும் நீங்கள் தவிர்க்க வேண்டிய பத்து சட்ட விரோதச் செய்கைகள் உள்ளன. அதை நான் விளக்குகிறேன். உங்களிடம் காகிதம் இருக்கிறதா, அந்த பத்து வகையான விரோதச் செய்கைகள்? பக்தர்கள்: ஆம். பிரபுபாதர்: தலை வணங்குங்கள். (அவருடன் ஒவ்வொரு வார்த்தையாக விலாஸ-விக்ரஹ திருப்பிச் சொல்ல) நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-ப்ரேஸ்தாய பூ-தலே ஸ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்து சந்தோஷமாக இருங்கள். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண. ( பக்தர்கள் ஜெபிக்கிறார்கள்) உன் பெயர்? ரோப்: ரோப். பிரபுபாதர்: ரோப். இப்போது உன் ஆன்மீகப் பெயர் ரேவதிநந்தன. ரே-வ-தி, ரேவதி, நந்தன, ந-ந்-த-ன. ரேவதிநந்தன என்றால் ரேவதியின் மகன். ரேவதி வசுதேவ மனைவிமார்களில் ஒருவர், கிருஷ்ணரின் சின்னம்மா. மேலும் பலராம் அவருடைய மகனாவார். ஆகையால் ரேவதிநந்தன என்றால் பலராம். ரேவதிநந்தன தாஸ பிரமசாரீ, உன் பெயர். இங்கிருந்து ஜெபிக்க ஆரம்பித்து பிறகு தொடர வேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. அதன் பிறகு. இவ்வாறாக, நீ இந்த பக்கம் வரவும், மறுபடியும் இங்கிருந்து ஆரம்பிக்கவும். உங்கள் ஞான சகோதரர்கள் கற்றுக் கொடுப்பார்கள். தலை வணங்குங்கள். தலை வணங்குங்கள். (ஒவ்வொரு வார்த்தையாக ரேவதிநந்தன திருப்பிச் சொல்லுகிறார்) நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-ப்ரேஸ்தாய பூ-தலே ஸ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே இப்போது உங்கள் ஜெப மலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பியுங்கள். ஜெபியுங்கள். ( பக்தர்கள் ஜெபிக்கிறார்கள்) இது எதனால் செய்யப்பட்டது? உலோகம்? இது, ஏன் இவ்வளவு பாரமாக இருக்கிறது? வாலிபன்: இது விதை, சுவாமிஜி. பிரபுபாதர்: ஓ, அது விதையா? அது என்ன விதை? வாலிபன்: எனக்குத் தெரியாது. ஒரு பெரிய விதை. பிரபுபாதர்: அது மிகவும் பாரமாக இருக்கிறது. குண்டைப் போல், கிருஷ்ணர் குண்டு. (சிரிப்பொலி) ( பக்தர்கள் ஜெபிக்கிறார்கள்) இப்போது உன் ஆன்மீகப் பெயர் ஸ்ரீமதி தாசி. ஸ்ரீமதி. ஸ்ரீ-ம-தி. ஸ்ரீமதி தாசி. ஸ்ரீமதி என்றால் ராதாராணி. ஸ்ரீமதி: அப்படி என்றால் என்ன? பிரபுபாதர்: ஸ்ரீமதி என்றால் ராதாராணி. ஆகையால் ராதாராணி தாசி என்றால் நீங்கள் ராதாராணியின் பெண் பணியாளர். நீங்கள் இந்த உலகின் பெண் பணியாளர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். (வாய்க்குள் சிரித்தல்) ராதாராணியன் பெண் பணியாளராக மிகவும் அதிஸ்டமாகும். ஆம். ஆகையால் உன் பெயர் ஸ்ரீமதி தாசி. நீங்கள் இங்கிருந்து ஆரம்பித்து ஜெபிக்க வேண்டும், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. பிறகு அடுத்தது. இவ்வாறாக, இந்த பக்கம் வரவும், மறுபடியும் ஆரம்பிக்கவும். குறைந்தது பதினாறு சுற்று. (ஒவ்வொரு வார்த்தையாக ஸ்ரீமதி திருப்பிச் சொல்லுகிறார்) நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-ப்ரேஸ்தாய பூ-தலே ஸ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே சரி. எடுத்துக் கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள். ஸ்ரீமதி: ஹரேகிருஷ்ண. பிரபுபாதர்: சரி அந்த கடுதாசி எங்கே, பத்து விதமான குற்றங்கள்? அந்த கடுதாசி எங்கே? உச்சாடனம் செய்வதில் மூன்று நிலை உள்ளது. அது என்ன? வாலிபன்: இது அவளால் வரையப்பட்ட ஒரு சித்திரம். பிரபுபாதர்: ஓ, நீ இதை வரைந்திருக்கிறாய்? அறுமை. மிகவும் அழகானது. மிக்க நன்றி. ஜானவா: தங்கள் ஆசீர்வாதத்துடன், இதை ஷெரனிடம் கொடுக்கிறீர்களா? இதை ஷெரானிடம் தங்கள் ஆசீர்வாதத்துடன் கொடுக்கிறீர்களா? வாலிபன்: ஸ்ரீமதி தாசி. பிரபுபாதர்: ஓ. இது ஒரு அன்பளிப்பு. ஸ்ரீமதி: நன்றி.