TA/Prabhupada 0422 - மஹா-மந்திரம் உச்சாடனம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய பத்து குற்றங்கள் - 6-10



Lecture & Initiation -- Seattle, October 20, 1968

பிரபுபாதர்: பிறகு? மதுவிஷ: "ஆறாவது: ஜெபித்தலின் வல்லமையால் பாவச் செயலில் ஈடுபடுதல்." பிரபுபாதர்: ஆம். இப்பொழுது இந்த தீட்ஷை, இந்த நாளிலிருந்து உன்னுடைய கணக்கு, பூர்வ ஜென்மம், அனைத்து பாவக் காரியங்கள், இப்போது என்ன கூறப்படுகிறது என்றால், சரிப்படுத்தியாகிவிட்டது. மூடப்பட்டுவிட்டது. அது முடிவடைந்துவிட்டது. இப்போது, ஏனென்றால் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்வதன் மூலம் உங்கள் பாவச் செயல்களின் எதிர்ச் செயல்களை நிறைவாக்கலாம், அதாவது நீங்கள் மீண்டும் செய்யலாம் என்று பொருள்படாது: "ஓ, நான் பாவச் செயல்களை செய்து மேலும் உச்சாடனம் செய்வேன். அது சரிப்படுத்தப்படும். மிச்சம் ஒன்றுமில்லாமலாகிவிடும். " இல்லை. அது அவ்வாறு அல்ல. அதை அர்ப்பணிக்காதீர்கள். எது நடந்ததொ அது நடந்ததாகவே இருக்கட்டும். அதற்கு மேலும் அல்ல. இப்போது அங்கு தூய்மையான வாழ்க்கை இருக்க வேண்டும். தவறான உடலுறவு கூடாது, மது அருந்தக் கூடாது, சூதாட்டம் கூடாது, மேலும் மாமிசம் உண்ணக் கூடாது. இப்போது முடிந்துவிட்டது. அதாவது அது இவ்வாறு அல்ல "ஓ, நான் ஹரே கிருஷ்ண ஜெபிக்கிறேன். என்னை ஹோட்டலுக்குச் சென்று கொஞ்சம் மாமிசம் உண்ண போகவிடுங்கள்." இல்லை. பிறகு அது ஒரு பெரிய பாவமாகிவிடும். அதைச் செய்யாதீர்கள். பிறகு ஹரே கிருஷ்ண ஜெபித்தது பலன் இல்லாமல் போய்விடும், நீங்கள் குற்றம் புரிந்தால். அடுத்தது? மதுவிஷ: "ஏழாவது: விசுவாசமற்றவரிடம் பகவானின் திருநாமத்தைப் பற்றி அறிவுரை வழங்குவது." பிரபுபாதர்: ஆம். விசுவாசமற்ற , விசுவாசமற்றவர்கள், பகவானும் அவருடைய திருநாமமும் பூரணத்துவம் நிறைந்தது. எவ்வாறு என்றால் இங்கு இந்த ஜட உலகில், பெயரும் மேலும் நபரும் வேறுபட்டது. ஒருவேளை உங்கள் பெயர் திரு ஜான். ஆகையால் நான் "ஜான், ஜான், ஜான்," என்று ஜெபித்தால், ஆனால் ஜான் அநேகமாக ஒரு மைல் தூரத்தில் இருப்பார். அங்கு மறுமொழி இருக்காது. ஆனால் இந்த பெயர், பகவானின் தெய்வீகமான பெயர், பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார். எவ்வாறு என்றால் தொலைக்காட்சியைப்போல். தொலைக்காட்சி, நான் சொல்வதென்னவென்றால், சில இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களிடம் அந்த இயந்திரங்கள் இருந்தால், உடனடியாக அந்த படம் உங்கள் அறையில் இருக்கும். அது இருந்தால், பௌதிக முறையில் அது சாத்தியமாகும், ஆன்மீகத்தில் எந்த அளவிற்கு சாத்தியமாகும், கிருஷ்ணர் நாமம்? உடனடியாக நீங்கள் கிருஷ்ணர் திரு நாமத்தை உச்சாடனம் செய்யுங்கள், அப்படியென்றால் கிருஷ்ணர் உடனடியாக உங்கள் நாவில் இருப்பார். ஆகையால் அது என்னது? மதுவிஷ: ஏழு? "விசுவாசமற்றவரிடம் பகவானின் திருநாமத்தைப் பற்றி அறிவுரை வழங்குவது." பிரபுபாதர்: ஆகையால், நம்பிக்கை இல்லாதவர்கள் அதாவதுபகவானின் திருநாமமும் பகவானும் ஒருவரே, அங்கே வித்தியாசம் இல்லை, ஒருவருக்கு பகவானின் கீர்த்தியைப் பற்றி அறிவுரை சொல்லப்படக் கூடாது. அவர் புரிந்துக் கொள்ள அறிவுரை கொடுக்க வேண்டும், ஆனால் அவர் புரிந்துக் கொள்ள இயலாதவறானால், அப்போது அவருக்கு தீட்ஷை அளிக்கக் கூடாது, அல்லது அவருக்கு புரிந்துக் கொள்ள சில காலம் தேவைப்படும். ஆனால் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் அதாவது நாம சிந்தாமணி: கிருஷ்ணஸ் சைதன்ய-ரஸ-விக்ரஹ: (ஸி.ஸி.மத்திய 17.133) கிருஷ்ணரும் அவருடைய நாமமும் வேறுபட்டதல்ல. நீங்கள் ஹரே கிருஷ்ண ஜெபித்த உடனடியாக, அப்படியென்றால் கிருஷ்ணர் உங்கள் நாவில் நடனம் ஆடுகிறார். அந்த விதத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டு. எவ்வாறு என்றால் கிருஷ்ண... உங்கள் ஆன்மீக குரு வருகை தந்தவுடன் நீங்கள் எவ்வளவு மரியாதை அளிப்பது போல், அதேபோல் கிருஷ்ணர் உங்கள் நாவில் தோன்றினால், நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். ஆகையால் நீங்கள் எப்போதும் தெரிந்துக் கொள்ள வேண்டும் அதாவது கிருஷ்ணர் அங்கு இருக்கிறார். கிருஷ்ணர் எப்போதும் எங்கும் இருக்கிறார். பகவான் எங்கும் இருக்கிறார், ஆனால் நமக்கு மெய்ஞ்ஞானம் இல்லை. ஆனால் இந்த குறிப்பிட்ட உச்சாடனம், தெய்வீக நாமத்தை ஜெபித்தவுடன், அப்படி என்றால் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணருடன் இணைந்து இருப்பதன் மூலம் நீங்கள் புனிதமடைவீர்கள். சுருண்வதாம் ஸ்வ-கதா:. எவ்வாறு என்றால் நெருப்புடன் சேர்க்கப்பட்டால் நீங்கள் சூடாவீர்கள், அதேபோல், கிருஷ்ணருடன் இணைந்து இருப்பது என்றால் நீங்கள் புனிதமடைவீர்கள். படிப்படியாக நீங்கள் ஆன்மீக பலம் பெறுவீர்கள். பௌதிகம் இனி இல்லை. முடிந்துவிட்டது. இது தான் செயல்முறை. பிறகு? மதுவிஷ: "எட்டாவது: தெய்வீகமான பெயரை பௌதிக பக்தியுடன் ஒப்பிடுதல்." பிரபுபாதர்: ஆம். இப்போது இந்த நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் ஏதோ சமயச் சடங்கு, செய்துக் கொண்டிருக்கிறோம் என்று எடுத்துக் கொள்ள கூடாது. இல்லை. சமயச் சடங்கு வேறுபட்ட காரியம். இது.... ஆயினும் சமயச் சடங்கு போல் தோன்றினாலும், இது திவ்வியமானது. பல விதமான சமயத்திற்கும் மேலானது. இது பட்டம் பெற்ற பின்னும் தொடர்ந்து படிக்க வேண்டிய படிப்பு. இந்த முறை முழுமுதற் கடவுளின் அன்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பதாகும். இதுதான் அனைத்திற்கும் மேல்... சமயம் என்றால், பொதுவாக, ஒரு விதமான நம்பிக்கை. ஆனால் இது நம்பிக்கையை பற்றிய கேள்வியல்ல. அது உண்மையிலேயே மேம்படுத்துவது, கிருஷ்ணரை, அல்லது பகவானை நீங்கள் எந்த அளவிற்கு நேசிக்கிறீர்கள். ஆகையால் இது அனைத்து சமயத்திற்கும் மேலானது. இது சாதாரண சமயம் அல்ல. சமயம் என்றால்... ஒருவேளை நீங்கள் கிருஸ்துவர்கள், உன் ஒரு இந்து. இந்த உடல் அடக்கமான உடனடியாக, என்னுடைய கிறிஸ்தவம் அல்லது சமயம், அனைத்தும் முடிவடைந்துவிடும். ஆனால் பகவானின் அன்பு முடிவடையாது. அது உங்களுடனே தொடரும். எவ்வித பிறவிக்கு நீங்கள் சென்றாலும், அது மேம்படும். உங்களால் முடிக்க முடிந்தால், பிறகு நீங்கள் நேரடியாக கிருஷ்ணரிடம் சென்றுவிடுவீர்கள், பரமபதத்தை அடைதல், மேலும் உங்கள் அனைத்து பௌதிக தொடர்பும் முடிவடைந்துவிடும். உங்களால் முடியவில்லை என்றாலும், பிறகு அது உங்களுடனேயே செல்லும். சொத்து. வங்கியின் மிஞ்சிய பணம் குறையாது. அது பெருகும். பிறகு? மதுவிஷ: "ஒன்பதாவது: புனித பெயரை ஜெபிக்கும் போது கவனக் குறைவாக இருப்பது." பிரபுபாதர்: ஆம். நாம் ஜெபிக்கும் போது நாம் காதால் கேட்கவும் வேண்டும். அதுதான் தியானம். ஹரே கிருஷ்ண, இந்த இரண்டு வார்த்தைகள், ஹரே கிருஷ்ண, நீங்கள் கேட்கவும் வேண்டும். நீங்கள் கேட்டால், பிறகு உங்கள் மனமும் நாவும் இரண்டும் வயப்படுத்தப்படும். அது தான் பூரணமான தியானம், முதல் வகையான யோகா, கேட்டுக் கொண்டே உச்சாடனம் செய்தல். பிறகு? மதுவிஷ: பிறகு இறுதியாக பத்தாவது: "உச்சாடனம் பயிற்சியில் ஈடுபடும் போது பௌதிக காரியங்களில் பற்றுடன் இருப்பது." பிரபுபாதர்: ஆம். முழுச் செயலும் யாதெனில் கருப்பொருளில் இருந்து நம்முடைய அன்பை பகவானுக்கு மாற்றப் போகிறோம். ஆகையால் நாம் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அது தன்னியக்கமாக நடக்கும். பக்தி: பரேசானுபவோ விரக்திர் அன்யத்ர ஸ்யா (ஸ்ரீ.பா.11.2.42). நீங்கள் உண்மையிலேயே முழுமுதற் கடவுளிடம் அன்பை வளர்த்துக் கொண்டால், பிறகு இயற்கையாகவே நீங்கள் இந்த பௌதிக முட்டாள்தனத்தின் மேல் இருக்கும் ஆசையை மறந்துவிடுவீர்கள். அது தான் வரிசை முறை. ஆனால் நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டும்... இது நடக்கும். எவ்வாறு என்றால் நாம் உண்பது போல், பிறகு படிப்படியாக உணவின் மேல் இருக்கும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வோம். வயிறு நிறைந்ததும், பிறகு நீங்கள் சொல்வீர்கள், "எனக்கு இன்னும் வேண்டாம். ஆம் எனக்கு..." அதேபோல், கிருஷ்ண உணர்வு மிகவும் இன்பகரமானது அதாவது கிருஷ்ண உணர்வின் முன்னேற்றத்தால் பௌதிக முட்டாள்தனமான பெரு மகிழ்ச்சியை மறந்துவிடுவீர்கள். மேலும் நீங்கள் பூரணமான நிலையில் இருந்தால், ஓ, இந்த பௌதிக முட்டாள்தனத்தின் எதைப் பற்றியும் அக்கறை கொள்ளமாட்டீர்கள். இது தான் தேர்வு. நீங்கள் கூற முடியாது, "நான் தியானத்தில் முன்னேற்றம் அடைகிறேன், ஆனால் என்னுடைய புலன்களின் திருப்திக்கான பௌதிக பற்று அனைத்தும் அப்படியே உள்ளது." இது முன்னேற்றம் அல்ல. முன்னேற்றம் என்றால் நீங்கள் புலன்களின் திருப்திக்கான பௌதிக ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். இது தான் முன்னேற்றம். இப்போது நீங்கள் ஜெபிக்கலாம். ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள்.