TA/Prabhupada 0427 - ஆன்மா, தூல உடம்பும் சூக்கும் உடம்பிலிருந்தும் வேறுபட்டது



Lecture on BG 2.11 -- Edinburgh, July 16, 1972

வேத முறையின்படி, சமூகத்தில் நான்கு வகையான ரகத்தைச் சேர்ந்த ஆண்கள் இருக்கிறார்கள். சாதுர்-வர்ணயம் மயா ஸ்ருஷ்தம் குண-கர்ம-விபாகஷ: (ப.கீ. 4.13). மனித சமுதாயம் நான்கு வகையான ஆண்களாகப் பிரிக்கப்பட வேண்டும். எவ்வாறு என்றால் நம் உடலில் இருப்பது போல், அங்கே நான்கு வேறுபட்ட துறைகள் உள்ளன: மூளைத் துறை, கை துறை, வயிறு துறை, மேலும் கால் துறை. உடம்பு பராமரிக்கப்பட வேண்டுமென்றால். இவை அனைத்தும் உங்களுக்குத் தேவை, பிறகு நீங்கள் உங்கள் தலையை சரியாக பராமரிக்க வேண்டும், உங்கள் கைகள், உங்கள் வயிறும், மேலும் கால்களும். அதன் ஒத்துழைப்பு. நீங்கள் பலமுறை கேட்டிருக்கிறீர்கள் இந்தியாவின் சாதி வேறுபாடு முறையைப் பற்றி: பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர. இது செயற்கையல்ல. அது இயற்கையானது. இந்தியாவில் மட்டுமல்ல, எந்த சமூகத்திற்கு நீங்கள் சென்றாலும், வேறு எந்த நாட்டிலும், இந்த நான்கு வகையான ஆண்கள் அங்கிருப்பார்கள். அறிவாற்றல் நிறைந்த ரகத்தைச் சேர்ந்த ஆண்கள், நிர்வாகம் செய்யும் ரகத்தைச் சேர்ந்த ஆண்கள், உற்பத்தி ஆற்றல் நிறைந்த ரகத்தைச் சேர்ந்த ஆண்கள், மேலும் வேலை செய்யும் ரகத்தைச் சேர்ந்த ஆண்கள். நீங்கள் வேறுபட்ட பெயர்களால் அழைப்பீர்கள், ஆனால் இப்படி ஒரு பிரிவு இருக்க வேண்டும். நான் உங்களிடம் கூறியது போல், என் உடம்பிலேயே பல பிரிவுகள் உள்ளன - மூளைத் துறை, கை துறை, வயிறு துறை, மேலும் கால் துறை. ஆக அனைத்து மன்னர்களும், கை துறையைச் சேர்ந்தவர்கள் மக்களின் பாதுகாப்பிற்காக உள்ளவர்கள். ஆகையால் முற்காலத்தில், க்ஷத்திரியர்கள்... க்ஷத்திரியர் என்றால் நாட்டு பிரஜைகளுக்கு மற்ற எதிரிகளால் தீங்கு நேராமல் பாதுகாப்பு அளிப்பவர். அதை க்ஷத்திரிய என்றழைக்கிறோம். ஆக நம் கருத்து யாதெனில் கிருஷ்ணர் அர்ஜுனிட ம் தெரியப்படுத்துகிறார் அதாவது "நீ ஏன் உன் கடமையிலிருந்து விலகுகிராய்? நீ நினைக்கிறாயா அதாவது உன் சகோதரர் அல்லது சிற்றப்பா, மாமா அல்லது உன் தாத்தா எதிர்ப்புறம் இருப்பவர்கள், அவர்கள் போருக்குப் பின் இறந்துவிடுவார்கள் என்று? இல்லை. அது உண்மைச் சம்பவம் அல்ல." அதன் காரணம் யாதெனில் கிருஷ்ணர் அர்ஜுனுக்கு கற்பிக்க விரும்புகிறார் அதாவது இந்த உடல் நபரிடமிருந்து வேறுபட்டது. எவ்வாறு என்றால் நம் அனைவரையும் போல், நாம் சட்டையிலிருந்தும் மேல் அங்கியிலிருந்தும் வேறுபட்டவர்கள். அதேபோல், நாம் ஜீவாத்மாக்கள், ஆன்மா, தூல உடம்பும் சூக்கும் உடம்பிலிருந்தும் வேறுபட்டவர்கள். இதுதான் பகவத்-கீதையின் தத்துவம். மக்களுக்கு இது புரியவில்லை. பொதுவாக, மக்கள் தான் இந்த உடல் என்று புரிந்துக் கொள்கிறார்கள். அது சாஸ்திரத்தில் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தா துகே ஸ்வ-தீ கலத்ராதிஷூ பௌம இஜ்ய-தீ: யத்-தீர்த்த-புத்தி: ஸலிலே ந கர்ஹிசிஜ் ஜனேஷ்வ் அபிக்ஞேஷூ ஸ ஏவ கோ-கர: (ஸ்ரீபா. 10.84.13) கோ என்றால் பசு, மேலும் கார என்றால் கழுதை. எவரும் உடல் சம்மந்தபட்ட எண்ணத்துடன் வாழும் வாழ்க்கை, யஸ்யாத்ம-புத்ஹி: குணபி த்ரி-தாதுகெ... உடல் சம்மந்தபட்ட வாழ்க்கை மிருகங்களுக்கு ஆனது. தான் இந்த உடல் அல்ல என்பதை நாய்க்குத் தெரியாது, அது தூய ஆத்மா. ஆனால் ஒரு மனிதன், அவன் கற்றறிந்தவனாக இருந்தால், அவன் புரிந்துக் கொள்வான் அதாவது அவன் இந்த உடல் அல்ல, இந்த உடலில் இருந்து வேறுப்பட்டவன் என்று. அதாவது நாம் இந்த உடலில் இருந்து வேறுப்பட்டவர்கள் என்று அவன் எவ்வாறு புரிந்துக் கொள்வான்? அதுவும் மிகவும் எளிமையாக்கப்பட்ட முறை. இங்கு, பகவத்-கீதையில் நீங்கள் காண்பீர்கள், அது சொல்வதாவது, தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கெளமாரம் யெளவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (ப. கீ. 2.13) தேஹிந:... 'ஸ்மின் தேஹே, இந்த உடலில், அங்கே ஆன்மா இருப்பது போல், தேஹி... தேஹி என்றால் இந்த உடலின் உரிமையாளர். நான் இந்த உடல் அல்ல. நீங்கள் என்னைக் கேட்டால், "என்ன..." எவ்வாறு என்றால் சிலவேளைகளில் நாம் பிள்ளையைக் கேட்போம், "இது என்ன?" அவன் சொல்வான், "அது என்னுடைய தலை." அதேபோல், நீங்கள் கூட என்னை கேட்டால், யாராவது, "இது என்ன?" யாரானாலும் சொல்வார்கள், "இது என் தலை." "நான் தலை," என்று யாரும் கூறமாட்டார்கள். ஆகையால் நீங்கள் உடலின் அனைத்து பகுதிகளையும் துருவி ஆராய்ந்தால், நீங்கள் கூறுவீர்கள், "இது என் தலை, என் கை, என் விரல், என் கால்," ஆனால் எங்கே "நான்"? "நான்." இருக்குமிடத்தில் தான் "என்னுடைய" பேசப்படுகிறது. ஆனால் "நான்." பற்றி நமக்கு தகவல் இல்லை. "என்னுடைய." பற்றி நமக்கு வெறுமனே தகவல் உள்ளது. அது அறியாமை என்று அழைக்கப்படுகிறது. ஆகையால் உலகம் முழுவதும் உடலை தான் என்று எடுத்துக் கொள்ளும் இந்த அபிப்பிராயத்தில் உள்ளது. நாங்கள் உங்களுக்கு மற்றொரு உதாரணம் கொடுக்கலாம். எவ்வாறு என்றால் உங்களுடைய சில உறவினர்கள், ஒருவேளை என் தந்தை, இறந்துவிட்டார். இப்போது நான் அழுகிறேன், "ஓ, என் தந்தை போய்விட்டார். என் தந்தை போய்விட்டார்." ஆனால் யாராவது கூறினால், " உன் தந்தை போய்விட்டார் என்று ஏன் சொல்கிறாய்? அவர் இங்கு படுத்து இருக்கிறார். நீ ஏன் அழுதுக் கொண்டிருக்கிறாய்?" "இல்லை, இல்லை, இல்லை, அது அவருடைய உடல். அது அவருடைய உடல். என் தந்தை போய்விட்டார்." ஆகையினால் நம்முடைய தற்சமய கணிப்புப்படி நான் உங்கள் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என உடலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், யாரும் உண்மையான மனிதரை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மரணத்திற்குப் பிறகு, அவர் சுய நினைவிற்கு வருகிறார்: "ஓ, இது என் தந்தை அல்ல, இது என் தந்தையின் உடல்." நீங்கள் பார்த்தீர்களா? ஆக மரணத்திற்குப் பிறகு நாம் திறமைசாலியாகிறோம். மேலும் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது, நாம் அறியாமையில் இருக்கிறோம். இதுதான் நவநாகரிகம். வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது... எவ்வாறு என்றால் மக்கள் காப்புறுதி உடன்பாடு வைத்திருப்பார்கள் கொஞ்சம் பணம் பெறுவதற்கு. அந்த பணம் மரணத்திற்குப் பிறகு பேரப்படும், வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது அல்ல. சில வேளைகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதும். ஆகையால் என் கருத்து யாதெனில் அதாவது நாம் உயிருடன் இருக்கும் வரை, நாம் அறியாமையில் இருக்கிறோம். நமக்கு தெரியவில்லை "என் தந்தை யார், என் சகோதரர் யார், நான் யார்." ஆனால் எல்லோரும் இந்த எண்ணத்தில் இருக்கிறார்கள், "இந்த உடல் என் தந்தை, இந்த உடல் என் குழந்தை, இந்த உடல் என் மனைவி." இது அறியாமை என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பற்றி படித்தீர்கள் ஆனால், வாழ்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எல்லோரும் அதைச் சொல்வார்கள் "நான் ஆங்கிலேயன்," "நான் இந்தியன்," "நான் இந்து," "நான் முஸ்லிம்." ஆனால் நீங்கள் அவரைக் கேட்டால், "உண்மையிலேயே நீங்கள் அப்படியா?" ஏனென்றால் இந்த உடம்பு, இந்து, முஸ்லிம், அல்லது கிருஸ்துவம், ஏனென்றால் எதிர்பாராமல் இந்த உடல் உருவாக்கப்பட்டது, ஒரு இந்து சமுதாயத்தில், முஸ்லிம், அல்லது அந்த உடம்பு ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கிறது, ஆகையினால் நாம் கூறுகிறோம், "நான் இந்தியன்," "நான் ஐரோப்பியன்," "நான் இது," "நான் அது." ஆனால் உடல் இறந்ததும், அந்த நேரத்தில் நாம் கூறுகிறோம், "இல்லை, இல்லை, அந்த உடாலினுள் இருந்த நபர் போய்விட்டார். அது வேறுபட்ட விஷயம்."