TA/Prabhupada 0428 - மனித இனத்தின் சிறப்புடைய முன்னுரிமை யாதெனில் புரிந்துக் கொள்வது



Lecture on BG 2.11 -- Edinburgh, July 16, 1972

நாம் எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம் என்பதை சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எல்லோரும் அறியாமையில் இருக்கிறோம். இந்த கல்வி தேவைப்படுகிறது ஏனென்றால் மக்கள், இந்த அறியாமையினால், ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நம் நாடு மற்றோரு நாட்டுடன் சண்டையிடுகிறது, ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினருடன் சண்டையிடுகின்றனர். ஆனால் இதன் அடிப்படைக் காரணம் அறியாமை. நான் இந்த உடல் அல்ல. ஆகையினால் சாஸ்திரம் கூறுகிறது, யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தா துகே (ஸ்ரீபா. 10.84.13). ஆத்ம-புத்தி: குணபே, இது எலும்பும் சதையும் நிறைந்த பை, மேலும் மூன்று தாதுஸ்களால் உற்பத்தி செய்யப்பட்டது. தாது என்றால் அடிப்படை கூறு. ஆயுர்-வேதிக் முறைப்படி: கப, பித்த, வாயு. பௌதிகப் பொருள்கள். ஆகையினால் நான் ஒரு ஆன்மீக ஆத்மா. நான் பகவானின் அங்க உறுப்பு. அஹம் ப்ரமாஸ்மி கல்வி. நீங்கள் இந்த பௌதிக உலகத்திற்குச் சொந்தமானவர்கள் அல்ல என்பதை புரிந்துக் கொள்ள முயலுங்கள். நீங்கள் ஆன்மீக உலகத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் பகவானின் அங்க உறுப்பு. மமைவாம்ஷோ ஜீவ-பூத: (ப.கீ.15.7). பகவத்-கீதையில், பகவான் கூறுகிறார் அதாவது "அனைத்து ஜீவாத்மாக்களும் என்னுடைய அங்க உறுப்புகள்." மன:-ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி (ப.கீ.15.7). அவர் அபிப்பிராயத்தில் வாழ்க்கைக்கு ஒரு பெரிய போராட்டம் எதிர்கொள்கிறார், உடல் தொடர்பான அபிப்பிராயத்தில் அதாவது அவர் இந்த உடல், ஆனால் இது போன்ற அபிப்பிராயம் அல்லது புரிந்துக் கொள்ளுதல் மிருக நாகரிகமாகும். ஏனென்றால் மிருகங்களும் உண்ணுகின்றன, தூங்குகின்றன, பாலுறவு கொள்கின்றன, மேலும் அதன் சொந்த முறையில் தற்காத்துக் கொள்கிறது. ஆகையால் நாமும், மனித இனம், இந்த வேலைகளில் ஈடுபட்டால், குறிப்பிட்டது போல் உண்ணுவது, தூங்குவது, பாலுறவு கொள்வது, மேலும் தற்காத்துக் கொள்வது, அப்படியென்றால் நாம் எந்த விதத்திலும் மிருகங்களைவிட சிறந்தவர்கள் அல்ல. மனித இனத்தின் சிறப்புடைய முன்னுரிமை யாதெனில் புரிந்துக் கொள்ள வேண்டும் "நான் யார்? நான் இந்த உடலா அல்லது வேறு ஏதோ ஒன்றா?" உண்மையிலேயே, நான் இந்த உடல் அல்ல. நான் உங்களுக்கு பல உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். நான் ஆன்மீக ஆத்மா. ஆனால் இந்த தருணத்தில் நாம் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக இந்த புரிந்துணர்வில் இருக்கிறோம் அதாவது நான் இந்த உடல். இந்த புரிந்துணர்வில் யாரும் செயல்படவில்லை அதாவது அவர் உடல் அல்ல, அவர் ஆன்மீக ஆத்மா என்று. ஆகையினால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நாங்கள் அனைத்து ஆடவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கற்பிக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் உடலை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்வதில்லை. இந்த உடல் இந்துவாக, முஸ்லிமாக, ஐரொப்பியனாக, அமெரிக்கனாக இருக்கலாம், அல்லது இந்த உடல் வேறுபட்ட பாணியில் இருக்கலாம். எவ்வாறு என்றால் உங்களுக்கு ஒரு ஆடை இருப்பது போல். இப்போது, நீங்கள் கறுப்பு மேல் அங்கியில் இருக்கிறீர்கள் நான் மஞ்சள் ஆடையில் இருப்பதால், நாம் ஒன்றாக சண்டை போடலாம் என்று பொருள்படாது. ஏன்? உங்களுக்கு வேறு ஆடை இருக்கலாம், எனக்கு வேறு ஆடை இருக்கலாம். ஆகையால் சண்டை போடுவதற்கான காரணம் எங்கே? இந்த புரிந்துணர்வு தற்சமயம் இந்த தருணத்தில் தேவைப்படுகிறது. இல்லையெனில், நீங்கள் மிருக நாகரிகம் உடையவர்களாவீர்கள். எவ்வாறு என்றால் காட்டில், அங்கு மிருகங்கள் உள்ளன. அங்கே பூனை, நாய், நரி, புலி, இருக்கின்றன மேலும் அவைகள் எப்போதும் சண்டையிடும். ஆகையினால், நமக்கு உண்மையிலேயே சாந்தி வேண்டுமென்றால் - சாந்தி என்றால் அமைதி - பிறகு நாம் புரிந்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் "நான் யார்." அதுதான் எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம். அவர் உண்மையிலேய யார் என்பதை எல்லோருக்கும் கற்பிக்கிறோம். ஆனால் அவருடைய நிலை... எல்லோருடைய நிலையும், என்னுடையதொ அல்லது உங்களுடையதொ மட்டுமல்ல. எல்லோரும். மிருகங்கள் கூட. அவர்களும் ஆன்மா சுடர். அவர்களும். கிருஷ்ணர் உரிமை கோருகிறார் அதாவது, ஸர்வ-யோனிஷூ கெளந்தேயா மூர்தய: ஸம்பவந்தி யா: தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோனிர் அஹம் பீஜ-ப்ரத: பிதா (ப. கீ. 14.4) கிருஷ்ணர் உரிமை கோருகிறார் அதாவது "நான் தான் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் வித்து கொடுக்கும் தந்தை." உண்மையிலேயே, இது தான் நிதர்சனம். படைப்பின் மூலத்தை நாம் படிக்க விரும்பினால், பகவத்-கீதையில் அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு என்றால் தந்தை தாயின் கருப்பையினுள் விந்தை அளிப்பது போல், மேலும் அந்த விதை ஒரு குறிப்பிட்ட உடலாக வளர்கிறது. அதேபோல், நாம் ஜீவாத்மாக்கள், நாம் அனைவரும் பகவானின் அங்க உறுப்புக்கள், ஆக பகவான் இந்த பௌதிக இயற்கையை கருவுறச் செய்தார், மேலும் நாம் இந்த பௌதிக உடலில் வெவ்வேறு உருவத்தில் தோன்றிநோம். அங்கே 8,400,000 வடிவம் உள்ளது. ஜலஜா நவ-லக்ஷணி ஸ்தாவரா லக்ஷ-விம்ஷதி. அங்கே ஒரு பட்டியல் உள்ளது. அனைத்தும் அதில் உள்ளது.