TA/Prabhupada 0430 - சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், பகவானின் ஒவ்வொரு பெயரும் பகவானைப் போலவே சக்திமிகுந்தது



Lecture on BG 2.11 -- Edinburgh, July 16, 1972

நாம்நாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ் தத்ரார்பிதா நியமித: ஸ்மரணே ந கால: ஏதாத்ரு'ஷீ தவ க்ரு'பா பகவன் மமாபி துர்தைவம் ஈத்ருஷம் இஹாஜனி நானுராக: (சைதன்ய சரிதாம்ருதம் அந்தியலீலை 20.16) சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், பகவானின் ஒவ்வொரு பெயரும் பகவானைப் போலவே மிகுந்த சக்திமிக்கது. ஏனென்றால் பகவான் பூரணமானவர், ஆகையினால் அவருடைய பெயருக்கும், வடிவத்திற்கும், லீலைகளுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை. பகவானிடமிருந்து எதுவும் வேறுபட்டதில்லை. அதுவே பூரண அறிவு. அத்வய-ஞான. ஆகையால் நீங்கள் பகவானின் புனிதமான பெயரை உச்சாடனம் செய்யும் போது, நீங்கள் நேரடியாக பகவானுடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்று பொருள். ஏனென்றால் அந்த பெயர் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல. புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதேபோல், நீங்கள் நெருப்பைத் தொட்டால், அது சுடும். நெருப்பின் தன்மை என்னவென்று, உங்களுக்கு தெரியாவிட்டாலும், அல்லது தெரிந்தாலும், அது பொருட்டல்ல. நீங்கள் நெருப்பை தொட்டால், அது சுடும். அதேபோல், நீங்கள் உண்மையிலேயே பகவானின் தெய்வீகமான பெயரை உச்சாடனம் செய்தால், அது செயலாற்றும். அதன் உதாரணம் எவ்வாறென்றால், நீங்கள் ஒரு இரும்பு கம்பியை நெருப்பில் போட்டால், அது சூடாகி, சூடாகி படிப்படியாக, சிவந்து போகும். நெருப்புடன் சேர்வதால், இரும்பு கம்பி நெருப்பாகிவிட்டது. இரும்பு கம்பி நெருப்பு அல்ல. ஆனால் நெருப்புடன் சேர்வதால், அது நெருப்பைப் போலவே ஆகிவிட்டது, ஆகையால் அது சிவந்து சூடாகிவிட்டால், நீங்கள் எந்த இடத்தில் தொட்டாலும், அந்த இரும்பு கம்பி சுட்டுவிடும். அதேபோல், நீங்கள் பகவானுடன் எப்போதும் தொடர்பு கொண்டிருந்தால், பிறகு படிப்படியாக, நீங்கள் தெய்வீகத் தன்மை பெறுவீர்கள். நீங்கள் பகாவானாக முடியாது, ஆனால் தெய்வீகத் தன்மை பெறுவீர்கள். நீங்கள் தெய்வீகத் தன்மை பெற்றவுடன், உங்கள் அனைத்து தெய்வீகத் தன்மையும் வெளிப்படும். இதுதான் விஞ்ஞானம். புரிந்துக் கொள்ள முயற்சி செயுங்கள். நாம், அனைத்து ஜீவாத்மாக்களும், பகவானின் அங்கத் துணுக்குகள். உங்களை அறிந்து கொள்வதன் மூலம், கடவுள் யாரென்று, கடவுளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் நான் ஒரு அங்கம், எவ்வாறென்றால், ஒரு மூட்டை அரிசியிலிருந்து, நீங்கள் கொஞ்சம் தானியங்கள் எடுத்தால், அந்த மூட்டையில் எவ்விதமான அரிசி உள்ளது என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். பார்த்தீர்களா, அதேபோல், பகவான் உயர்ந்தவர், அது சரியே. ஆனால் நாம் வெறுமனே நம்மை ஆய்ந்து அறிந்து கொண்டால், பகவான் யார் என்று நாம் புரிந்துக் கொள்வோம். எவ்வாறென்றால், நீங்கள் சமுத்திரத்திலிருந்து ஒரு துளி நீர் எடுப்பது போல்.. சமுத்திரத்தின் இரசாயான கலவை என்ன என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். ஆகையால் அதைத்தான் தியானம் என்றழைக்கிறோம், தன்னைத் தானே ஆராய்ந்து கொள்வது, "நான் யார்?" உண்மையிலேயே ஒருவர் தன்னைத் தானே படித்திருந்தால், பிறகு அவர் பகவானையும் புரிந்துக் கொள்ள முடியும். இப்போது எடுத்துக் கொள்ளுங்கள், உதாரணத்திற்கு, "நான் யார்?" நீங்கள் உங்கள் மீதே தியானம் செய்தாலும், நீங்கள் தனிப்பட்ட மனிதர் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். தனிப்பட்ட மனிதர் என்றால் உங்களுக்கு உங்களுடைய சொந்த அபிப்பிராயம் இருக்கும், எனக்கு என்னுடைய சொந்த அபிப்பிராயம் இருக்கும். ஆகையினால் சில சமயங்களில் நாம் உடன்பாடு கொள்ள மாட்டோம். ஏனென்றால் நீங்கள் தனிப்பட்ட மனிதர், நான் தனிப்பட்ட மனிதன். மேலும் நாம் தனிப்பட்ட மனிதர்களாக இருப்பதால், பகவானின் அங்க துணுக்குகளாக இருப்பதால், மேலும் பகவானும் தனிப்பட்ட மனிதராக இருப்பார். இது படிப்பு. நான் ஒரு நபராக இருப்பதால், பகவானும் நபரே. பகவான் உருவமற்றவராக இருக்க முடியாது. நாம் பகவானை மூலமான தந்தையாக ஏற்றுக் கொண்டால், பூரணமான தந்தை... கிறிஸ்துவ மதம் நம்புகிறது, மற்ற அனைத்து மதங்களும் நம்புகின்றன. மேலும் நாமும் நம்புகிறோம், பகவத்-கீதை. ஏனென்றால் கிருஷ்ணர் கூறுகின்றார், அஹம் பீஜ-ப்ரத: பிதா (பகவத் கீதை.14.4). " நான் தான் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மூலமான தந்தை." ஆகையால் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் கிருஷ்ணர் தான் தந்தை என்றால், மேலும் ஜீவாத்மாக்களாகிய நாம் அனைவரும் தனிபட்ட நபர்கள் என்றால், பகவான் எவ்வாறு உருவமற்றவராக இருக்க முடியும்? பகவான் நபரே ஆவார். இதைத் தான் தத்துவம் என்று அழைக்கிறோம், இதை தான் தர்க்க சாஸ்த்திரம் என்று அழைக்கிறோம். இப்போது, இங்கு, இந்த உலகில், நமக்கு அனுபவம் இருக்கிறது, அதாவது நாம் யாரையாவது நேசிக்க வேண்டுமென விரும்புகிறோம். எவரும். மிருகங்களின் ராஜ்யத்தில் கூட. ஒரு சிங்கம் கூட தன் குட்டிகளை நேசிக்கும். அங்கும் அன்பு இருக்கிறது. ப்ரேமை, அது பிரேமை என்று கூறப்படுகிறது. ஆகையினால் இந்த அன்புச் செயல் பகவானிடத்தும் இருக்கிறது. மேலும் நாம் பகவானுடன் தொடர்பு கொள்ளும் போது, நம்முடைய நடத்தை அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும். நான் கிருஷ்ணர், அல்லது பகவானை நேசிக்கிறேன், மேலும் கிருஷ்ணர் என்னை நேசிக்கிறார். இது நம்முடைய உணர்வின் பரிமாற்றமாகும். ஆக இந்த முறையில், பகவானைப் பற்றிய விஞ்ஞானம், எந்தவிதமான வேத இலக்கியங்களைக் கூட படிக்காமல் - நிச்சயமாக, அது உங்களுக்கு உதவியாக இருக்கும்- கடவுள் யார் என்பதை நீங்கள் ஆழ்ந்து படித்திருந்தால், உங்களால் பகவானைப் புரிந்துக் கொள்ள இயலும். ஏனென்றால் நான் பகவானின் ஒரு மாதிரி, நான் ஒரு சிறுதுளி. ஒரு துணிக்கை தங்கமும் தங்கமாகும் என்பதைப் போல். ஒரு துளி சமுத்திரத் தண்ணீரும் உப்பாக இருக்கும். சமுத்திரமும் உப்பாக இருக்கும், உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். அதேபோல், நம் தனித் தன்மையை, இயற்கையான மனப்பாங்கை, படிப்பதின் மூலம், பகவான் யார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும். இது ஒரு பக்கம். மேலும் இங்கு, பகவான் தானே எழுந்தருளியுள்ளார், கிருஷ்ணர். அவர் கூறுகிறார் "யதா யதா ஹி தர்மஸ்.... ... பக்தர்களைக் காக்க, மேலும் அசுரர்களை கொல்ல, நான் தோன்றினேன்." ஆனால் நினவில் கொள்ளுங்கள், பகவான் பூரணமானவர். அவர், பக்தர்களை காப்பதும், அசுரர்களை கொல்வதும், ஒன்றுதான். ஏனென்றால் நாம் வேத இலக்கியத்தில் இருந்து அறிந்துக் கொள்வதென்னவென்றால், முழுமுதற் கடவுளால் கொல்லப்படுகின்ற அசுரர்கள், அவர்களும் அதே விமோசனம், முக்தியை அடைகிறார்கள். ஏனென்றால் அவர் பகவானால் கொல்லப்படுகிறார், பகவானின் கரங்களால் அவர் தீண்டப்படுகிறார். ஆகையால் அது ஒரு உன்னதமான விஞ்ஞானம். இது உணர்ச்சிபூர்வமானதல்ல. இது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் அதிகாரம் பெற்ற வேத இலக்கியம். ஆகையால் எங்கள் ஒரே வேண்டுகோள் யாதெனில் இந்த இயக்கத்தை மிகத் தீவிரமாக ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள், அதன்பின் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.