TA/Prabhupada 0429 - கிருஷ்ண பகவானின் பெயர். கிருஷ்ண என்றால் அனைத்து வசீகரம், அனைத்து நன்மை



Lecture on BG 2.11 -- Edinburgh, July 16, 1972

ஆகையால் நம்முடைய தற்சமய சூழ்நிலை யாதெனில் முழு நாகரிகமும் போய்க் கொண்டிருப்பது, தவறான கருத்துடன் அதாவது ஒவ்வொருவரும் இந்த உடல் என்று. அது உண்மையான செய்தியல்ல. ஆகையினால், இந்த கிருஷ்ண கீர்தன, இந்த ஹரே கிருஷ்ண இயக்கம், அதற்கு ஒரு சிறப்புமிக்க தாக்கம் உள்ளது. அது ஒரு... இந்த ஹரே கிருஷ்ண இயக்கம் ஒரு சாதாரண ஒலி அதிர்வு என்று நினைக்காதீர்கள். அது ஆன்மீக அதிர்வு. அது மஹா- மந்திர என்று அழைக்கப்படுகிறது. மஹா-மந்திர. எவ்வாறு என்றால்... உங்கள் நாட்டில் பாம்பாட்டிகள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. இந்தியாவில் இன்னமும், அங்கு பல பாம்பாட்டிகள் இருக்கிறார்கள், கவந்திழுப்பது, மன்னிக்க வேண்டுகிறேன். அதனால் அவர்கள் சில மந்திரம் ஜெபிப்பார்கள், மேலும் பாம்பால் கடிபட்ட மனிதன் அவன் சுய நினைவிற்கு உயிரூட்டப்படுகிறான். இந்தியர்கள் யாராவது இங்கு வந்திருக்கிறார்களா, அவர்களுக்கு தெரியும். இன்னமும். முக்கியமாக நான் பஞ்சாபில் பார்த்திருக்கிறேன், அங்கே பல பாம்பாட்டிகள் இருக்கிறார்கள், மந்திரத்தை எவ்வாறு ஜெபிப்பது என்று தெரிந்தவர்கள். ஆகையால் இது உடலால் சாத்தியமானால் அதாவது ஒரு இறந்த மனிதன்... நிச்சயமாக, ஒரு மனிதன் பாம்பால் கடிபட்டால் அவன் மரணம் அடையமாட்டான். அவன் மயக்கம் அடைவான். அவன் இறக்கவில்லை. ஆனால் இந்த மந்திரம் ஜெபிப்பதால், அவன் சுய நினைவு பெறுகிறான். ஆகையினால், இந்தியாவில் இது ஒரு பழக்கம், ஒரு மனிதன் பாம்பால் கடிப்பட்டால், அவன் எரிக்கப்படமாட்டான், அல்லது அவனை இறந்தவனாக கருதமாட்டார்கள். அவன் காப்புப் படகில் மிதக்கப்பட்டு மேலும் தண்ணீருக்கு கொடுக்கப்படுவான். அவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவன் திரும்பவும் சுய நினைவிற்கு வந்து வெளியே வரலாம். ஆக இதேபோல், நாம் இந்த தருணத்தில், நம் அறியாமையினால், நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். ஆகையினால், நம்மை எழுப்ப, இந்த மந்தர, மஹா-மந்தர, தேவைப்படுகிறது. விழிப்பூட்ட. சேதோ தர்பண-மார்ஜனம் (ஸி. ஸி. 20.12). எவ்வாறு என்றால் இந்த பசங்களைப் போல், இந்த ஐரொப்பிய பையன்களும் பெண்களும் என்னுடனே இருப்பவர்கள்... என்னிடம் கிட்டதட்ட, மூன்று, நான்கு ஆயிரம் சீடர்கள் அதேபோல் இருக்கிறார்கள். அவர்கள் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்கிறார்கள். மேலும் அவர்கள் தான்தோன்றித்தனமாக உச்சாடனம் செய்வதில்லை. அவர்கள் முழுமையாக திருப்தி கொள்கின்றனர். நீங்கள் அவர்களுடன் பேசினால், மெய்யியலைப் பற்றி மிக அழகாக பேசுவார்கள். அனைத்தும் தெளிவாக, தெளிவான அறிவுள்ளவரைப் போல். ஆக எவ்வாறு செய்கிறார்கள்? நான்கு வருடங்களுக்கு முன், அவர்களுக்கு கிருஷ்ணரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் ஆங்கில அகராதியில் கிருஷ்ணரின் பெயரை பார்த்திருப்பார்கள், கூறப்பட்டது போல், "ஒரு இந்து பகவான்." ஆனால் உண்மையிலேயே, அது உண்மைத் தகவல் அல்ல. கிருஷ்ண பகவானின் பெயர். கிருஷ்ண என்றால் அனைத்து வசீகரம், அனைத்து நன்மை. அனைத்து வசீகரம் என்றால் அவர் சிறந்தவறாக இருக்க வேண்டும்; இல்லையெனில் அவர் எவ்வாறு கவர்ச்சியாக இருக்க முடியும்? ஒரு தவறான, தீயவனாக இருக்கும் ஒருவன், அவன் கவர்ச்சியாக இருக்க முடியாது. ஆகையினால் கிருஷ்ண, இந்த ஒரு வார்த்தை, என்றால் முழுமையான கவர்ச்சி. அவரிடம் அனைத்து நல்ல தன்மைகளும் இருக்கின்றன, அனைத்து செழிப்பும் இருப்பதால் அவர் கவர்ச்சியானவர். அதுதான் அவருடைய சரியான வருணனை, அல்லது பகவானின் சரியான பெயர். பகவானுக்கு வேறு எந்த பெயரும் இருந்தால், குறிப்பாக, அனைத்தும் நிறைந்தவர் என்று, அந்த வார்த்தை கிருஷ்ண. அது சமஸ்கிருத வார்த்தை, ஆனால் அது குறிப்பிடுவது... கிருஷ்ண என்றால் பகவான். சாஸ்திரத்தில் அது சொல்லப்பட்டுள்ளது, ஈஸ்வர: பரம: க்ருஷ்ண: (பி.ச. 5.1). ஈஸ்வர: என்றால் கட்டுப்படுத்துபவர், மேலும் பரம: ஒப்புயர்வற்றவர். ஈஸ்வர: பரம: க்ருஷ்ண: (பி.ச. 5.1). அதுதான் வேத இலக்கியத்தின் அறிவுரை. ஆகையால் எங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், குறுகிய நோக்குடைய மதசார்ந்த இயக்கமல்ல. இது ஒரு ஆன்மா ஞான தத்துவ இயக்கம். அதைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் ஆனால் அதன் செய்முறை மிகவும் எளிமையானது. அதன் செய்முறை இதை உச்சாடனம் செய்வதன் மூலம் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. நாங்கள் மந்திரவாதிகள் அல்ல, ஆனால் எங்கள் மாணவர்களிடம் நாங்கள் கூறுவோம், "நீங்கள் வெறுமனே இந்த தெய்வீகமான அதிர்வை உச்சாடனம் செய்யுங்கள்," மேலும் படிப்படியாக அவர் மனத்தில் உள்ள அசுத்தங்கள் தூய்மைப்படுதப்படுகிறது. இதுதான் எங்கள் செய்முறை. சைதன்ய மஹாபிரபு விவரித்துள்ளார். அவர் நமக்கு விதிமுறைகளை கொடுத்து இருக்கிறார், சேதோ தர்பண-மார்ஜனம் (ஸி. ஸி. 20.12). இந்த பௌதிக உலகில் நமது அனைத்து துன்பங்களுக்கும் காரணம் கருத்து வேறுபாட்டினால் ஏற்படுகிறது. முதல் கருத்து வேறுபாடு யாதெனில் "நான் இந்த உடம்பு." மேலும் உண்மையிலேயே, நாம் ஒவ்வொருவரும், இந்த தளத்தில் தான் நிற்கிறோம், வாழ்க்கையின் உடல் சம்மந்தபட்ட எண்ணத்தில். மேலும் நிற்கும் அடிப்படை அடித்தளம் தவறாக இருக்கிறது, நாம் புரிந்துக் கொள்வது எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் தவறாக இருக்கிறது. ஏனென்றால் அடிப்படை அடித்தளம் தவறாக உள்ளது. ஆகையால் நாம் முதலில், அதாவது நான் இந்த உடம்பு என்னும் இந்த தவறான என்ணத்தை துரத்த வேண்டும். அது இவ்வாறு அழைக்கப்படுகிறது சேதோ தர்பண-மார்ஜனம் (ஸி. ஸி. 20.12) மனத்தை தூய்மைப்படுத்தல். நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், "நான் இந்த உடம்பு," ஆனால் உண்மையிலேயே நான் இதுவல்ல. ஆகையால் நாம் இந்த தவறான நம்பிக்கையை தூய்மைப்படுத்த வேண்டும், மேலும் அது மிகவும் சுலபமாக செய்யப்படுகிறது, வெறுமனே இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம். இது நடைமுறைக்குரியது. ஆகையால் எங்கள் வேண்டுகோள் யாதெனில் நீங்கள் ஒவ்வொருவரும், அன்புடன் எங்கள் அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. ஆனால் இலாபம் மிகவும் அதிகம். நாங்கள் எந்த கட்டணமும் எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களைப் போல், அவர் ஏதாவது மந்திரம் கொடுத்தல், கட்டாணம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் இலவசமாக வினியோகம் செய்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் கூட, அவர்களும் எடுத்துக் கொள்ளலாம். எங்கள் சமூகத்தில் பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் உச்சாடனத்துடன் நடனம் ஆடுவார்கள். இதற்கு படிப்பு எதுவும் தேவையில்லை. இதற்கு விலை எதுவும் இல்லை. வெறுமனே நீங்கள் உச்சாடனம் செய்தால்... நீங்கள் என் ஒரு பரிசோதனை செய்து மேலும் உச்சாடனம் மூலம் பார்க்கக் கூடாது? அதுதான் எங்கள் வேண்டுகோள். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. ஒருவர் மறுப்பு தெரிவிக்கலாம், "நான் ஏன் உங்கள் இந்து கிருஷ்ணரின் பெயரை ஜெபிக்க வேண்டும்?" ஆகையால் நங்கள் கூறமாட்டோம் அதாவது கிருஷ்ண, அல்லது பகவான்... பகவானுக்கு பல பெயர்கள் உள்ளன. அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதுவல்ல... பகவான் வரையற்றவர். ஆகையினால், அவருக்கு நிச்சயமாக வரையற்ற பெயர்கள் இருக்கும். ஆனால் இந்த கிருஷ்ண என்கிற வார்த்தை மிகவும் பூரணமானது ஏனென்றால் இதன் பொருள் அனைத்து வசீகரமும் நிறைந்தவர். நீங்கள் கலந்துரையாடலாம், "பகவான் மிகவும் உயர்ந்தவர்." அது சரியே. எவ்வாறு அவர் உயர்ந்தவர்? அது மற்றொரு புரிந்துணர்தல். ஆகையால் நீங்கள் நினத்தால், அதாவது "கிருஷ்ண இந்து கடவுளின் பெயர், நான் ஏன் இதை ஜெபிக்க வேண்டும்?" ஆகையால் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், "இல்லை." உங்களுக்கு ஒரு பெயர் இருந்தால், பகவானின் மாறுபட்ட மற்றோறு பெயர் இருந்தால், நீங்கள் அதை ஜெபிக்கலாம். எங்களுடைய ஒரே வேண்டுகோள் பகவானின் புனிதமான பெயரை ஜெபியுங்கள். உங்களுக்கு பகவானின் ஏதோ ஒரு பெயர் இருந்தால், நீங்கள் உச்சாடனம் செய்யலாம். நீங்கள் புனிதப்படுத்தப்படுவீர்கள். அதுதான் எங்கள் கொள்கைப் பிரச்சாரம்.