TA/Prabhupada 0439 - என் ஆன்மீக குரு என்னை ஒரு பெரிய முட்டாளாக கண்டு கொண்டார்
Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968
தத் விஞ்ஞாணார்தம் ச குரும யெவாபிகச்சேத் (முஉ. 1.2.12). தத் விஞ்ஞாணார்தம், அந்த உன்னதமான விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ள, ஒருவர் குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும். குரும யெவ, கண்டிப்பாக, ஒருவர் காட்டாயமாக. இல்லையெனில் சாத்தியமே இல்லை. ஆகையினால் கிருஷ்ணர் இங்கு அர்ஜுனின் ஆன்மீக குருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார், மேலும் ஒரு ஆன்மீக குருவாக, அல்லது தந்தையாக, அல்லது ஆசிரியராக, மகனை அல்லது சீடரை திருத்துவதற்கு உரிமை உள்ளது... ஒரு மகன் தந்தை தண்டிக்கும் போது அதிருப்தியடைவதில்லை. அதுதான் எங்கும் உள்ள பண்பாடு. தந்தை கூட சில நேரங்களில் கொடுமையாக இருப்பார், பிள்ளையோ அல்லது மகனோ பொறுத்துக் கொள்வார்கள். பிரகலாத மஹாராஜா இதற்கு ஒரு சிறந்த உதாரணம். களங்கமில்லாத பிள்ளை, கிருஷ்ண உணர்வு பிள்ளை, ஆனால் தந்தை சித்திரவதை செய்தார். அவர் எதையும் சொல்லவில்லை. "அனைத்தும் சரி." அதே போல் கிருஷ்ணர், ஆன்மீக குருவாக வந்த நிலைக்குப் பிறகு, அர்ஜுனை ஆடம்பரமான முட்டாள் என்று பட்டமளித்தார். சைதன்ய மஹாபிரபு கூட கூறுகிறார் அதாவது "என் ஆன்மீக குரு என்னை ஒரு பெரிய முட்டாளாக கண்டு கொண்டார் (ஸி. ஸி. ஆதி 7.71)." சைதன்ய மஹாபிரபு ஒரு முட்டாளா? மேலும் சைதன்ய மஹாபிரபுவிற்கு ஆன்மீக குருவாக இருப்பதிற்கு தகுதியுடன் யாராவது இருப்பது நிகழக் கூடியதா? இரண்டு காரியங்களும் சாத்தியமற்றது. சைதன்ய மஹாபிரபு, தானே தன்னை கிருஷ்ணரின் திருஅவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை, நீங்கள் வெறுமனே அவரை ஒரு சாதாரண கல்விமானாக அல்லது ஒரு மனிதராக ஏற்றுக் கொண்டால், அவருடைய பாண்டித்யத்திற்கு ஒப்பீடு இல்லை. ஆனால் அவர் கூறினார் அதாவது "என்னுடைய ஆன்மீக குரு என்னை ஒரு சிறந்த முட்டாளாக காண்கிறார்." அதன் அர்த்தம் என்ன? அதாவது, "ஒரு மனிதன் என்னுடைய நிலையில் கூட, ஆன்மீக குருவின் முன் ஒரு முட்டாளாகாவே இருக்கிறார். அது அவருக்கு நன்மையே." ஒருவரும் அதை திணிக்கக் கூடாது "உனக்கு என்ன தெரியும்? எனக்கு உன்னைவிட இன்னும் நன்றாக தெரியும்." இந்த நிலை, மறுக்கப்படவில்லை. மேலும் மற்றொரு பார்வையில், சீடர்களின் பார்வையில் இருந்து, அவர் ஏன் எப்போதும் ஒரு மனிதனுக்கு முன் முட்டாளாகவே இருக்க வேண்டும்? அவர் உண்மையிலேயே அங்கிகாரம் பெறவில்லை, இருந்தும் மிக பிரமாதமாக அதாவது அவர் ஒரு முட்டாளாக எனக்கு கற்றுக் கொடுக்கிறார். ஒருவர் ஆன்மீக குருவை அவ்வாறாக தேர்ந்தெடுக்க வேண்டும் மேலும் அவ்வழியாக ஆன்மீக குரு தேர்ந்தெடுக்கப்பட்ட உடனடியாக, ஒருவர் முட்டாளாகாவே எப்போதும் இருக்க வேண்டும், ஆயினும் அவர் முட்டாளாக இருக்கமாட்டார், ஆனால் அது தான் இன்னும் நல்ல நிலைமை. ஆகையால் அர்ஜுன், ஒரே நிலையில் நண்பர்களாக இருப்பதற்கு பதிலாக, விருப்பத்தோடு கிருஷ்ணர் முன் முட்டாளாகாவே இருக்க ஏற்றுக் கொள்கிறார். மேலும் கிருஷ்ணரும் அதை ஒப்புக் கொள்கிறார் "நீ ஒரு முட்டாள். நீ சும்மா அறிவாளி போல் பேசுகிறாய், ஆனால் நீ ஒரு முட்டாள், ஏனென்றால் நீ எந்த அறிவாளியும் புலம்பாத ஒரு காரியத்திர்காக புலம்பிக் கொண்டிருக்கிறாய்." அப்படி என்றால் "ஒரு முட்டாள் புலம்புவான்," அதாவது "நீ ஒரு முட்டாள். ஆகையினால் நீ ஒரு முட்டாள்." அது சுற்றிக் கொண்டு வரும்... எவ்வாறு என்றால், அறிவுப்பூர்வமாக எப்படி அழைப்பார்கள்? பிறை வளை? அல்லது அது போன்று ஒன்று. ஆம், அதாவது நான் இவ்வாறு கூறினால் "என் கடிகாரத்தை திருடியவரைப் போல் உன் தோற்றம் உள்ளது," அப்படி என்றால் "நீ திருடனைப் போல் தோன்றுகிறாய்." அதேபோல், கிருஷ்ணர், சுற்றி வளைத்து, அதைக் கூறுகிறார், "என் அன்புள்ள அர்ஜுன், நீ ஒரு அறிவாளி போல் பேசுகிறாய், ஆனால் எந்த அறிவாளியும் புலம்பாத ஒரு சர்ச்சைக் கூறிய காரியத்தைப் பற்றி புலம்பிக் கொண்டு இருக்கிறாய்."